செல்போனை உடைத்ததற்காக 90 வயது பாட்டியை கட்டையால் அடித்துக் கொன்ற பேரன்
பெங்களூர்: பெங்களூரில் தனது செல்போனை உடைத்த 90 வயது பாட்டியை வாலிபர் ஒருவர் கட்டையால் அடித்துக் கொலை செய்துள்ளார்.
பெங்களூர் பனசங்கரி பகுதியில் உள்ள கதிரெனஹள்ளியை சேர்ந்தவர் லக்ஷ்மம்மா(90). திங்கட்கிழமை இரவு அவரின் பேரன் சிவ்ராஜ்(22) ஹாலில் தனது செல்போனை சார்ஜ் போட்டுள்ளார். கண் பார்வை சரியாகத் தெரியாத லக்ஷ்மம்மா ஹாலில் நடந்து செல்கையில் தெரியாமல் கை பட்டு சிவ்ராஜின் செல்போன் கீழே விழுந்தது.

ஏதோ விழும் சப்தம் கேட்டு ஹாலுக்கு ஓடி வந்த சிவ்ராஜ் தனது செல்போனை எடுத்து பார்த்தபோது அதன் ஸ்கிரீன் கண்ணாடி நொறுங்கிக் கிடந்தது. இதனால் ஆத்திரம் அடைந்த சிவ்ராஜ் உருட்டுக் கட்டையை எடுத்து வந்து பாட்டியின் கழுத்தில் ஓங்கி ஒரு போடு போட்டார்.
இதில் நிலைகுலைந்து கீழே விழுந்தார் லக்ஷ்மம்மா. உடனே குடும்பத்தார் ஓடி வந்து பாட்டியை தூக்கிச் சென்று படுக்கையறையில் படுக்க வைத்தனர். மேலும் கண்மூடித்தனமாக தாக்கிய சிவ்ராஜை கண்டித்தனர்.
காலையில் பாட்டி எழுந்திரிக்கவில்லை. உடனே அவரை அருகில் உள்ள மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு அவரை பரிசோதனை செய்த மருத்துவர்கள் அவர் ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்தனர்.
இதையடுத்து இந்த சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார் சிவ்ராஜை கைது செய்தனர்.
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன?












Click it and Unblock the Notifications