"கொஞ்சம் ஓவர் ஆயிடுச்சோ".. சாராயம் குடித்து தலைக்கேறிய போதை! ஒடிசாவில் விடிய விடிய தூங்கும் யானைகள்
புவனேஸ்வர்: ஒடிசாவில் பழங்குடியின மக்கள் தயாரிக்கும் நாட்டு சாராயத்தை குடித்ததால் 20-க்கும் மேற்பட்ட யானைகள் போதையில் விடிய விடிய தூங்கிக் கொண்டிருக்கின்றன.
அவற்றை எழுப்ப வனத்துறையினரும், மக்களும் பல்வேறு முயற்சிகளை எடுத்த போதிலும், எதற்கும் அசைந்து கொடுக்காமல் யானைகள் ஸ்லிப்பிங் மோடுக்கு சென்றுவிட்டன.
எனவே, அந்த யானைகளை எப்படி எழுப்புவது, அவற்றை எப்படி காட்டுக்கு அனுப்புவது எனத் தெரியாமல் வனத்துறையினர் விழிப்பிதுங்கி நிற்கின்றனர்.

இலுப்பை பூ சாராயம்..
ஒடிசா மாநிலம் கியோன்ஜர் மாவட்டத்தில் ஒரு சிறிய பழங்குடியின கிராமம் உள்ளது. இந்த கிராமத்தில் உள்ள பழங்குடியின மக்கள், இலுப்பை பூக்களை பயன்படுத்தி நாட்டு சாராயம் காய்ச்சுவது வழக்கம். நம்மூரில் பனை மரத்து கள்ளை போல இந்த இலுப்பை பூ சாராயம் போதை தருவதோடு, உடலுக்கும் பல்வேறு நன்மைகளை தருவதாக கூறப்படுகிறது. இந்த சாராயத்துக்கு 'மக்குவா' என்று பெயர்.

சாராயம் காய்ச்சுவதற்காக..
இதற்காக அவர்கள் வாரந்தோறும் காட்டுப் பகுதிக்கு உள்ளே சென்று, நன்றாக வளர்ந்து முதிர்ச்சியடைந்த நிலையில் இருக்கும் இலுப்பை பூக்களை அந்த கிராம மக்கள் பறித்து அங்கேயே இதமான வெந்நீரில் அவற்றை நொதிக்க செய்வது வழக்கம். பின்னர் குறிப்பிட்ட நாட்கள் கழித்து அந்த நீரை எடுத்து வந்து, அதிலிருந்து சாராயம் காய்ச்சுவது வழக்கம். அந்த வகையில், சில தினங்களுக்கு முன்பு அவர்கள் இலுப்பை பூக்களை பானைகளில் வெந்நீரை ஊற்றி நொதிக்க செய்திருந்தனர்.

வெறிகொண்டு குடித்த யானைகள்..
இந்நிலையில், அந்த பானைகளை எடுப்பதற்காக நேற்று அந்த கிராம மக்கள் வனப்பகுதிக்குள் சென்றுள்ளனர். அப்போது அங்கிருந்த பானைகள் அனைத்தும் உடைக்கப்பட்டிருந்ததோடு, அவற்றுக்கு அருகே ஆங்காங்கே 24 யானைகள் படுத்து தூங்கிக் கொண்டிருந்தன. பானைகளில் இருந்த இலுப்பை பூ நொதி நீரை யானைகள் நன்றாக குடித்ததால் போதை ஏறி அவை இவ்வாறு படுத்திருப்பது தெரியவந்தது. 9 ஆண் யானைகள், 6 பெண் யானைகள், 9 குட்டிகள் அங்கு போதையில் தூங்கிக் கொண்டிருக்கின்றன.

முரட்டு தூக்கம்..
இதுகுறித்து தகவலறிந்த வனத்துறையினர் அங்கு வந்து மேள, தாளங்களை அடித்து அந்த யானைகளை எழுப்ப முயன்று வருகின்றனர். ஹூஹும்.. யானைகள் சிறிது கூட அந்த சத்தத்துக்கு அசைந்து கொடுக்கவில்லை. இதையடுத்து, பட்டாசுகளையும் வனத்துறையினர் வெடித்தனர் வேலைக்கு ஆகவில்லை. இதனால் அந்த யானையை எப்படி எழுப்புவது என தெரியாமல் வனத்துறையினர் விழிப்பிதுங்கி நிற்கின்றனர்.
-
ரூட்டை மாற்றிய இந்திய ஐடி நிறுவனங்கள்.. இனியும் சும்மா இருந்தா வேலைக்கு ஆகாது! -
மேகதாதுவில் அணை கட்ட தமிழகத்தின் அனுமதி தேவையில்லை.. கர்நாடக முதல்வரானதும் டிகே சிவக்குமார் பேச்சு -
விஜய்யின் ஆலோசகர் + 2 அமைச்சர்களால் நேர்ந்த அவமானம்.. சட்டசபை செயலாளர் சீனிவாசன் பதவி விலகியது ஏன்? -
தமிழகம் முழுவதும் டாஸ்மாக் கடைகள், பார்களை தனியாரிடம் ஒப்படைக்க திட்டம்? விஜய் எடுக்க போகும் முடிவு? -
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக -
விஜய்யை இப்படியே விடக்கூடாது.. பாஜக பாணியை கையில் எடுக்கும் திமுக.. பெரிய மாற்றம் வரப்போகுது -
டாஸ்மாக் தனியார் மயம் ஆகிறதா? மிகப்பெரிய சீர்திருத்தம் வரப்போகிறது.. அமைச்சர் விக்னேஷ் தகவல் -
விஜய் அமைச்சரவை கூட்டத்தின் Exclusive Footage.. திமுக ஐடி விங் பதிவிட்ட வீடியோ! -
திருச்செந்தூர் முருகனின் விஸ்வரூப தரிசனம்! அடுத்தடுத்து முதல்வர்களான விஜய், டி.கே.சிவக்குமார்! -
தவெக அரசின் முதல் பிரம்மாண்ட முதலீடு: எல் அண்ட் டி உடன் ₹18,600 கோடி ஒப்பந்தம்.. 8,200 வேலைவாய்ப்பு!












Click it and Unblock the Notifications