மும்பைத் தாக்குதலுக்குக் காரணமான சதிகாரர்கள் தண்டிக்கப்பட வேண்டும்- ஐ.நா.
மும்பை: மும்பையில் கடந்த 2008ம் ஆண்டு நவம்பர் 26ம் தேதி பயங்கர தாக்குதலை நடத்திய தீவிரவாதிகளின் சதிச் செயலுக்குக் காரணமான அத்தனை பேரும் சட்டப்படி தண்டிக்கப்பட வேண்டும் என்று ஐ.நா. கூறியுள்ளது.
இன்று மும்பையில் பத்து பாகிஸ்தான் தீவிரவாதிகள் வெறியாட்டம் போட்டதன் நினைவு நாளாகும். இதையொட்டி இந்த சதிச் செயலுக்குக் காரணமான அத்தனை பேரும் தண்டிக்கப்பட வேண்டும் என்று ஐநா. வலியுறுத்தியுள்ளது.
இந்த கோரிக்கையை எச்சரிக்கை கலந்த செய்தியாக அது பாகிஸ்தானுக்கு தெரிவித்துள்ளது.

சதிகாரர்கள் தண்டிக்கப்பட வேண்டியது அவசியம்
இதுகுறித்து ஐ.நா. பொதுச் செயலாளர் பான் கி மூனின் செயலார் மார்ட்டின் நெசர்கி கூறுகையில், மும்பை பயங்கரவாத தாக்குதலின் பின்னணியில் உள்ள அத்தனை சதிகாரர்களும் தண்டிக்கப்பட வேண்டியது அவசியமாகும். அவர்கள் சட்டத்தின் முன்பு நிறுத்தப்பட வேண்டும்.

கொடூரமான தாக்குதல்
மும்பையில் தீவிரவாதிகள் நடத்திய தாக்குதல் இரக்கற்றது, கொடூரமானது, கொடுமையானது, கடும் கண்டனத்துக்குரியது.

நடவடிக்கை அவசியம் தேவை
இந்த கொடும் செயலைத் திட்டமிட்டவர்களும், அதை அரங்கேற்றியவர்களும் தண்டிக்கப்பட வேண்டும் என்பதில் யாருக்கும் மாற்றுக் கருத்து இருக்கக் கூடாது. இதுதொடர்பான நடவடிக்கைகள் நடந்து வருவதாக நம்புகிறோம் என்றார் அவர்.

லஷ்கர் இ தொய்பா தீவிரவாதிகள்
ஐந்து ஆண்டுகளுக்கு முன்பு இதே நாளில்தான் மும்பைக்குள் கடல் மார்க்கமாக பத்து பாகிஸ்தான் தீவிரவாதிகள் புகுந்து வெறியாட்டத்தைத் தொடங்கினர். 3 நாட்கள் நீடித்த இந்த கொடூரத் தாக்குதலே உலகே அதிர்ந்து போய் பார்த்தது. இதில் வெளிநாட்டவர்கள் உள்பட 166 பேர் உயிரிழந்தனர்.

கசாப் மட்டும் சிக்கினான்
தாக்குதலில் ஈடுபட்ட 10 பேரில் 9 பேரை கமாண்டோப் படையினர் சுட்டுக் கொன்றனர். கசாப் மட்டும் பிடிபட்டான். அவனும் பின்னர் மரண தண்டனை விதிக்கப்பட்டு தண்டனையும் நிறைவேற்றப்பட்டு விட்டது.

சதிகாரர்கள் சுதந்திரமாக பாகிஸ்தானி்ல்
மும்பை சதிச் செயலுக்குத் திட்டம் தீட்டியவர்கள் இன்னும் தண்டிக்கப்படவில்லை. அவர்கள் சுதந்திரமாக பாகிஸ்தானில்தான் தொடர்ந்து நடமாடி வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications