Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

இலங்கை நெருக்கடி: ராஜபக்ஷ சகோதரர்கள் நிலை என்ன? அடுத்தடுத்து 26 அமைச்சர்கள் பதவி விலகல்

Subscribe to Oneindia Tamil

https://www.youtube.com/watch?v=rl1oUDntZvY&t=54s

இலங்கையில் பல பத்தாண்டுகளில் இல்லாத வகையில் ஏற்பட்டுள்ள மோசமான பொருளாதார நெருக்கடியை அரசாங்கம் சமாளிக்க ஏதுவாக, பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவின் அமைச்சரவையில் உள்ள 26 அமைச்சர்கள் மொத்தமாக தங்களுடைய பதவியில் இருந்து விலகியுள்ளனர்.

ஆனால் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ மற்றும் அவரது சகோதரரும் ஜனாதிபதியுமான கோட்டாபய ராஜபக்ஷ தொடர்ந்து பதவியில் நீடிக்கிறார்கள்.

தற்போதைய நெருக்கடிக்கு தவறான நிர்வாகமே காரணம் என்று கூறி எதிர்கட்சிகள் மற்றும் பொதுமக்கள், ராஜபக்ஷ சகோதரர்களின் பதவி விலகலை வலியுறுத்தி வந்தனர்.

ராஜபக்ஷ குடும்பத்தை ராஜிநாமா செய்யக் கோரி வந்த பலரும் சமீபத்திய அமைச்சர்கள் ராஜிநாமா முடிவால் திருப்தியடைவில்லை. போராட்டத்தில் ஈடுபட்டு வரும் பலரும், அமைச்சர்கள் ராஜிநாமா நடவடிக்கை அர்த்தமற்றது என்று கூறுகின்றனர்.

முன்னதாக, கடந்த ஞாயிற்றுக்கிழமை, நாட்டின் அரசு அறிவித்திருந்த 36 மணி நேர ஊரடங்கு அமலில் இருந்தபோதும் அதைப் பொருட்படுத்தாமல் பல நகரங்களில் தெருக்களில் இறங்கி போராட்டத்தில் ஈடுபட்டனர்.

1948இல் பிரிட்டனில் இருந்து சுதந்திரம் பெற்ற பிறகு இலங்கை அதன் மோசமான பொருளாதார நெருக்கடியை சமாளிக்க போராடி வருகிறது. எரிபொருள் இறக்குமதிக்கு செலுத்த பயன்படுதும் வெளிநாட்டு நாணய பற்றாக்குறையையும் அந்த நாடு சந்தித்து வருகிறது.

இலங்கை போராட்டங்கள்
Getty Images
இலங்கை போராட்டங்கள்

இதன் தாக்கம், பல நகரங்களில் அரை நாள் அல்லது அதற்கு மேல் நீடிக்கும் மின்வெட்டு வகையில் காணப்படுகிறது. மேலும், உணவு, மருந்துகள் மற்றும் எரிபொருள் பற்றாக்குறையால், பொதுமக்களின் கோபம் புதிய உச்சத்தை எட்டியுள்ளது.

இந்த நிலையில், பிரதமர் மஹிந்தவின் அமைச்சர்கள் தங்களுடைய பதவி விலகல் கடிதங்களை பிரதமரிடம் அளித்துள்ளதாக கல்வி அமைச்சர் தினேஷ் குணவர்தன செய்தியாளர்களிடம் ஞாயிற்றுக்கிழமை தெரிவித்தார்.

ராஜிநாமா செய்தவர்களில் பிரதமரின் மகன் நாமல் ராஜபக்ஷவும் அடங்குவார், "மக்கள் மற்றும் அரசாங்கத்தை பலப்படுத்தும் தீர்மானத்திற்கு" ராஜபக்ஷ சகோதரர்களின் நடவடிக்கை உதவும் என்று நம்புவதாக அவர் ட்வீட் செய்துள்ளார்.

https://twitter.com/RajapaksaNamal/status/1510686222661959681

எவ்வாறாயினும், நாட்டின் நிலைமைக்கு ஜனாதிபதியும் அவரது குடும்பத்தினரும் காரணம் என்று குற்றம் சாட்டும் ஆர்ப்பாட்டக்காரர்கள் பலர், அவர் தொடர்ந்து ஆட்சியில் இருப்பதற்காக கோபமடைந்துள்ளனர்.

ஒரு ட்விட்டர் பயனர் இதை "நோய்வாய்ப்பட்ட நகைச்சுவை" என்று அழைத்தார்.

https://twitter.com/RangaJayasuriya/status/1510706303714291714

மற்றொருவர் இதை "சர்வாதிகாரிகளின் நாடகம்" என்று அழைத்தார்.

"அமைச்சரவையில் அங்கம் வகிக்கும் ராஜபக்ஷ குடும்பத்தினர், அவர்களின் அரசியல் ஆதரவாளர்கள், ஊழல்வாதிகள், அவர்களின் ஊடகவியலாளர்கள் - நீங்கள் அனைவரும் வெளியேற வேண்டும் என்று நாங்கள் விரும்புகிறோம்," என்று மற்றொரு சமூக ஊடக பயனர் கூறியுள்ளார்.

https://twitter.com/munza14/status/1510690330110160896

இலங்கையில் கடந்த ஞாயிற்றுக்கிழமை ஊரடங்கு உத்தரவை மீறி ஆயிரக்கணக்கான மக்கள் வீதிகளில் இறங்கி போராட்டம் நடத்தினர். எதிர்கட்சி அரசியல் தலைவர்களும் இந்த போராட்டங்களில் பங்கெடுத்தனர்.

இதன் காரணமாக போராட்டங்களை தூண்டும் வகையிலும் நாட்டின் நிலைமை தொடர்பான தவறான தகவல்கள் பரப்பப்படும் முயற்சியை தடுக்கும் வகையிலும் ஃபேஸ்புக், வாட்ஸ்அப் மற்றும் ட்விட்டர் உள்ளிட்ட சமூக ஊடக தளங்களை இலங்கை அரசு முடக்கியது. ஆனால், அடுத்த சில மணி நேரத்திலேயே அந்த நடவடிக்கை கைவிடப்பட்டது.

இலங்கை போராட்டங்கள்
Reuters
இலங்கை போராட்டங்கள்

2019ஆம் ஆண்டில் பெரும்பான்மை வெற்றி பெற்று ஆட்சிக்கு வந்த கோட்டாபய ராஜபக்ஷ, "நாட்டை ஆள ஸ்திரத்தன்மை மற்றும் ஒரு வலுவான தலைமையை வழங்குவோம்" என்று உறுதியளித்து, அப்போது இவரது தலைமைக்கு கிடைத்த புகழும் எதிர்பார்ப்பும் இப்போது தலைகீழாகிப் போனதை சமீபத்திய அதிருப்தி ஆர்ப்பாட்டங்கள் பிரதிபலிப்பதாக உள்ளன் என்று அரசியல் பார்வையாளர்கள் கருதுகின்றனர்.


Analysis box by Rajini Vaidyanathan, South Asia correspondent
BBC
Analysis box by Rajini Vaidyanathan, South Asia correspondent

இலங்கை எதிர்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாசவை ஒரு ஆர்ப்பாட்டத்தில் நான் சந்தித்தேன். அவரும் அவரது கட்சியின் மற்ற உறுப்பினர்களும் நகரின் சுதந்திர சதுக்கத்திற்குள் நுழைய முயன்றபோது அவர்களை காவல்துறையினர் தடுப்புகளை அமைத்து முன்னேற விடாமல் தடுத்தனர்.

"நாட்டின் உயர்ந்த சட்டம் மக்கள் தங்களுடைய கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளவும், ஆர்ப்பாட்டம் செய்யவும், அமைதி வழி ஜனநாயக எதிர்ப்பை வெளிப்படுத்தும் உரிமையையும் வழங்கி அதைப் பாதுகாக்கிறது, எனவே அந்த உரிமை மீறப்படக்கூடாது," என்று சஜித் பிரேமதாசா கூறினார்,

ஊரடங்கு உத்தரவு மற்றும் சமூக ஊடக முடக்கத்துக்கான தடை சர்வாதிகாரத்தின் வெளிப்பாடு என்றும் எதேச்சதிகாரம் மற்றும் கொடூர ஆட்சியின் தொடக்கம் என்றும் அவர் குற்றம்சாட்டினார்.

கொந்தளிக்கும் பொதுமக்கள்

இலங்கை போராட்டங்கள்
Getty Images
இலங்கை போராட்டங்கள்

ஞாயிற்றுக்கிழமை போராட்டத்தின்போது ஊரடங்கு உத்தரவை மீறி வெளியே வந்து போராட்டம் நடத்திய பலரிடம் நான் சந்தித்தேன்.

சுசித்ரா ஒரு ஆசிய உணவகத்திற்கு வெளியே பொதுவாக பரபரப்பாக இருக்க வேண்டிய ஒரு சாலையில் ஆயிரக்கணக்கானோர் பங்கேற்ற ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டார்.

தனது 15 மாத ஆண் குழந்தையுடன் அவர் அங்கு வந்திருந்தார். மின்வெட்டால் மக்கள் எதிர்கொள்ளும் அன்றாட பிரச்னைகளைப் பற்றி அவர் என்னிடம் கூறினார்."மின்சாரம் இல்லாமல் வீடுகளில் மின்விசிறிகள் வேலை செய்யவில்லை. இந்த வெப்பத்தில் குழந்தையோ நாமோ நிம்மதியாக தூங்குவது கூட சாத்தியமில்லை," என்கிறார் அவர்.

இலங்கை போராட்டங்கள்
Getty Images
இலங்கை போராட்டங்கள்

"எனது உரிமைகள் பறிக்கப்பட்டதால் நான் இன்று வெளியே வந்தேன், நான் மிகவும் கோபமாக இருக்கிறேன்," என்று கொழும்பின் ஒரு பகுதியில் கூடிய சில நூறு மாணவர்களில் ஒருவரான அஞ்சலி வந்துர்கல கூறினார்.

"இந்த ஊரடங்கு உத்தரவு ஏன் பிறப்பிக்கப்பட்டது? எங்களைப் பாதுகாப்பதற்காகவா?" என்று அவர் கேள்வி எழுப்பினார்.

ஃப்ரீலான்ஸ் ஒரு விளம்பர எழுத்தாளர் சத்சரா. அரசாங்கத்தின் நடவடிக்கைக்கு எதிராக தாம் களமிறங்கியிருப்பது இதுவே முதல் முறை என்கிறார் அவர்.

"எரிவாயு, மின்சாரம் இல்லாததால் என்னால் பணம் சம்பாதிக்க முடியவில்லை. நான் முற்றிலும் நொறுங்கியதாக உணர்கிறேன்," என்று அவர் கூறுகிறார்.

இலங்கை எதிர்கொண்டு வரும் மோசமான நெருக்கடியை சமாளித்து முன்னேறி விடலாம் என்று வழி தேடும் பல இளம் இலங்கையர்களில் இவரும் ஒருவர். "நாங்கள் எங்கள் வாழ்க்கையின் ஆரம்பகாலத்துக்கு சென்று விட்டோம். இனி எங்கள் கனவுகளை எவ்வாறு அடையப் போகிறோம்?" என்று அவர் கேள்வி எழுப்புகிறார்.


https://www.youtube.com/watch?v=rl1oUDntZvY&t=10s

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+