டெல்லி, புதுவை உள்ளிட்ட 29 இந்திய நகரங்களுக்கு நிலநடுக்க ஆபத்து- அதிர்ச்சி தகவல்
தலைநகர் டெல்லி உள்பட நாட்டில் உள்ள 29 நகரங்கள் நிலநடுக்கங்கள் தாக்கும் அபாயத்தில் இருப்பதாக தேசிய நிலநடுக்க மையம் எச்சரித்துள்ளது.
டெல்லி: இந்தியாவில் அசாம் முதல், ஜம்மு - காஷ்மீர் வரையிலான பகுதி மிக மிக அதிகளவில் நிலநடுக்கம் ஏற்படக்கூடிய பகுதியாக என்.சி.எஸ். எனப்படும் தேசிய நிலநடுக்க மையம் எச்சரித்துள்ளது. டெல்லி, புதுச்சேரி உட்பட 29 நகரங்கள் நிலநடுக்கத்தினால் பாதிக்கப்படும் ஆபத்து உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்தியாவில் அவ்வப்போது நிலநடுக்கம் ஏற்படும், பூமி அதிர்வு ஏற்படும் இயற்கையே. குஜராத்தில் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு பூகம்பம் ஏற்பட்டதையும், அதனால் பேரழிவு ஏற்பட்டதையும் யாராலும் மறக்கமுடியாது. அதேபோல நேபாளத்தில் நிலநடுக்கம் ஏற்பட்டதில் வட இந்திய மாநிலங்கலும் பாதிக்கப்பட்டது.
நம் நாட்டில் நிகழும் நிலநடுக்கங்கள் குறித்த, ஆவணங்களை பாதுகாத்து வரும், என்.சி.எஸ் என்ற அமைப்பு, ஐ.எம்.டி., எனப்படும், இந்திய வானிலை ஆராய்ச்சித் துறையின் கட்டுப்பாட்டில் உள்ளது. நிலநடுக்கங்களால் பாதிக்கப்பட அதிக வாய்ப்புகள் இருக்கும் இமாலய அடுக்கில் டெல்லி மற்றும் 9 மாநிலங்களின் தலைநகரங்கள் இடம்பெற்றிருப்பதாகவும் அந்த அமைப்பு கூறியுள்ளது.

இந்திய நகரங்கள் பாதிப்பு
உலக அளவில் நிலநடுக்க அபாயம் அதிகம் கொண்டதாக அறியப்படும் இமாலய அடுக்கில் உள்ள நகரங்கள் பட்டியலும் வெளியிடப்பட்டுள்ளது. டெல்லி, பாட்னா, ஸ்ரீநகர், கோஹிமா, புதுச்சேரி, கவுகாத்தி, காங்டாக், சிம்லா, டேராடூன், இம்பால், சண்டிகர் ஆகிய நகரங்கள் அதிக அளவில் பாதிக்கப்படும் என்றும் நிலநடுக்க ஆய்வு மையம்

நிலநடுக்க பாதிப்பு
நாட்டில் உள்ள பல்வேறு பகுதிகளை நிலநடுக்க அபாயம் உள்ளிட்ட காரணிகளை அடிப்படையாக வைத்து இந்திய தரநிர்ணய ஆணையம் மண்டலம் - 2 முதல் மண்டலம் - 5 வரை 4 பகுதிகளாக பிரித்து எந்த நகரங்களில் நிலநடுக்க பாதிப்பு அதிகம் உள்ளது என்ற பட்டியலிட்டுள்ளது. இதில் 2வது மண்டலம் என்பது குறைந்த நிலநடுக்க அபாயம் உள்ளதாகக் கருதப்படுகிறது. 5வது மண்டலம் என்பது உச்சகட்ட நிலநடுக்க அபாயம் உள்ள பகுதியாக அறியப்படுகிறது.

அதிக பாதிப்பு
நிலத்துக்கு அடியில் இருக்கும் தட்டுகளின் நகர்வு, கடந்த காலங்களில் ஏற்பட்ட நிலநடுக்கங்கள் மற்றும் அதனால் ஏற்பட்ட சேதங்கள் போன்றவைகளும் பகுதிகளைப் பிரிக்கும் போது கணக்கில் கொள்ளப்படும். 4வது மண்டலம் மற்றும் 5வது மண்டலம் ஆகியவை கடுமையான அல்லது மிகவும் கடுமையான நிலநடுக்க பாதிப்புகள் ஏற்பட வாய்ப்புகள் கொண்ட பகுதியாகவும் வரையறுக்கப்படுகிறது.

வடகிழக்கு மாநிலங்கள்
மொத்த வடகிழக்கு மாநிலங்கள், ஜம்மு காஷ்மீர், ஹிமாச்சலப் பிரதேசம், உத்தராகண்ட் ஆகிய மாநிலங்களின் ஒரு சில பகுதிகள் குஜராத்தின் கட்ச் வளைகுடா பகுதிகள், பீகாரின் வடக்கு பகுதிகள் மற்றும் அந்தமான் நிகோபார் தீவுக் கூட்டங்கள் போன்றவை 5வது மண்டலத்தில் இடம்பெற்றுள்ளன.

டெல்லி
அதேபோல, டெல்லி, ஜம்மு காஷ்மீர் மற்றும் சிக்கிம் மாநிலங்களின் ஒருசில பகுதிகள், உத்தரப்பிரதேசத்தின் வடக்கு பகுதி, மேற்கு வங்கம், குஜராத் மற்றும் மகராஷ்டிரா மாநிலத்தின் சிறிய பகுதி போன்றவை 4வது மண்டலத்தின் கீழ் பட்டியலிடப்பட்டுள்ளன.
-
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ!












Click it and Unblock the Notifications