ஸ்பெக்ட்ரம் வழக்கு- குற்றம் சாட்டப்பட்டோரால் 1,029 மனுக்கள் தாக்கல்: நீதிபதி காட்டம்

ஸ்பெக்ட்ரம் வழக்கு தொடர்பாக பிரதமர் அலுவலகத்தில் இருந்து ஆவணங்கள் கோரி, மத்திய அமைச்சர் ஆ. ராசாவின் முன்னாள் தனிச் செயலர் ஆர்.கே. சந்தோலியா, தனியார் நிறுவன அதிகாரி ராஜீவ் அகர்வால் ஆகியோர் தாக்கல் செய்த மனுக்களை நீதிபதி சைனி நேற்று தள்ளுபடி செய்தார். பின்னர் கோபத்துடன் நீதிபதி கூறியதாவது:
இந்த வழக்கில் குற்றம்சாட்டப்பட்டவர்கள் இதுவரை 1, 029 மனுக்களைத் தாக்கல் செய்துள்ளனர். சந்தோலியா இதுவரை 37 மனுக்களையும், ராஜீவ் அகர்வால் 84 மனுக்களையும், ஆசிஃப் பல்வா 71 மனுக்களையும் தாக்கல் செய்துள்ளனர்.
இது போன்று தாக்கல் செய்யப்படும் ஒவ்வொரு மனு மீதும் சுமார் 5 மணி நேரம் விசாரணை நடத்தி பின்னர் சட்டப்படி ஆராய்ந்து தள்ளுபடி செய்யப்படுகிறது. இதன் மூலம் நீதிமன்றத்தின் பொன்னான நேரம் வீணடிக்கப்படுகிறது.
நீதிமன்ற விசாரணைக்கு தேவையில்லாத ஆவணங்களையும், சாட்சியங்களையும் அவ்வப்போது குற்றம் சாட்டப்பட்டவர்கள் கேட்டு மீண்டும் மீண்டும் வேண்டுமென்றே மனுத் தாக்கல் செய்கின்றனர். இதன் மூலம் லட்சக்கணக்கான பக்கங்கள் கொண்ட ஆவணங்களால் வழக்கு விசாரணையை மூழ்கடிக்கப் பார்க்கின்றார்கள். இந்தச் செயல் அனுமதிக்கப் படமாட்டாது.
இது போன்ற மனுக்களை இனி குற்றம் சாட்டப்பட்டவர்கள் தாக்கல் செய்யமாட்டார்கள் என்று நம்புகிறேன்.
இவ்வாறு நீதிபதி கோபத்துடன் கூறினார்.
இந்த வழக்கில் குற்றம் சாட்டப்பட்டவர்களின் வாக்குமூலம் ஜனவரி 20ந் தேதி முதல் பதிவு செய்யப்படும் என்றும் நீதிபதி சைனி உத்தரவிட்டார்.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications