ஸ்பெக்ட்ரம் வழக்கு: குற்றம்சாட்டப்பட்டோரிடம் மார்ச் 3-ந் தேதி முதல் வாக்குமூலம் பதிவு
டெல்லி: ஸ்பெக்ட்ரம் அலைக்கற்றை ஒதுக்கீட்டு வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட முன்னாள் மத்திய அமைச்சர் ஆ.ராசா உள்பட 17 பேரிடம் சி.பி.ஐ. தனி நீதிமன்றத்தில் மார்ச் 3 ந்தேதி மூலம் வாக்குமூலம் பதிவு தொடங்குகிறது.
ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீட்டில் மத்திய அரசுக்கு ரூ.1 லட்சத்து 76 ஆயிரம் கோடி இழப்பு ஏற்படுத்திய புகார் குறித்து உச்சநீதிமன்றத்தின் நேரடி மேற்பார்வையில் சி.பி.ஐ. விசாரணை நடத்தியது. தொலைத்தொடர்புத்துறை முன்னாள் அமைச்சர் ஆ.ராசா, தி.மு.க. எம்.பி. கனிமொழி உள்பட 17 பேர் கைது செய்யப்பட்டு, டெல்லி சி.பி.ஐ. தனி நீதிமன்றத்தில் விசாரணை நடைபெற்று வந்தது.
இந்த வழக்கில் போலீஸ் தரப்பு சாட்சிகளான 153 பேரிடம் வாக்குமூலம் பதிவு செய்வது கடந்த நவம்பர் 27 ந்தேதியுடன் முடிவடைந்தது. குற்றம்சாட்டப்பட்டவர்களிடம் வாக்குமூலம் பதிவு, ஜனவரி 20ந்தேதி தொடங்கும் என்று ஏற்கனவே அறிவிக்கப்பட்டு இருந்தது.
ஆனால், அதற்கான கேள்விப்பட்டியல் தயாராகவில்லை என்பதால் மேலும் அவகாசம் கோரப்பட்டது. அதை ஏற்றுக்கொண்ட தனி நீதிமன்ற நீதிபதி ஓ.பி.சைனி, குற்றம் சாட்டப்பட்டவர்களிடம் வாக்குமூலம் பதிவு செய்வது மார்ச் 3 ந்தேதி தொடங்கும் என்று அறிவித்தார்.
முதலில் பிப்ரவரியில் தேதி நிர்ணயிக்க நீதிபதி முடிவு செய்திருந்தார். ஆனால், குற்றம் சாட்டப்பட்டவர்கள் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர்கள் கேட்டுக்கொண்டதற்கு இணங்க, மார்ச் 3- ந்தேதிக்கு ஒத்தி வைத்தார்.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக












Click it and Unblock the Notifications