ஜம்மு காஷ்மீர் மாவட்ட வளர்ச்சி கவுன்சில் தேர்தல்: 2-ம் கட்ட வாக்குப் பதிவு தொடங்கியது
ஶ்ரீநகர்: ஜம்மு காஷ்மீர் மாவட்ட வளர்ச்சி கவுன்சில் தேர்தலில் இன்று காலை 7 மணிக்கு 2-ம் கட்ட வாக்குப் பதிவு தொடங்கியது.
ஜம்மு காஷ்மீர் மாநிலத்துக்கான சிறப்பு அந்தஸ்து வழங்கிய 370வது அரசியல் சாசன பிரிவு கடந்த ஆண்டு ரத்து செய்யப்பட்டது. இதனைத் தொடர்ந்து தனி யூனியன் பிரதேசமாக்கப்பட்ட லடாக்கில் அண்மையில் மாவட்ட கவுன்சில் தேர்தல் நடைபெற்றது.

தற்போது ஜம்மு காஷ்மீர் மாவட்ட வளர்ச்சி கவுன்சில் தேர்தல் 8 கட்டங்களாக நடத்தப்படுகிறது. கடந்த நவம்பர் 28-ந் தேதி முதல் கட்ட வாக்குப் பதிவு நடைபெற்றது. அதில் 51,76% வாக்குகள் பதிவாகி இருந்தன.
இன்று காலை 7 மணிக்கு 2-ம் கட்ட வாக்குப் பதிவு தொடங்கியது. வரும் 19-ந் தேதி வரை அடுத்த கட்ட வாக்குப் பதிவுகள் நடைபெறும். அனைத்து வாக்குகளும் டிசம்பர் 22-ந் தேதி எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்படும்.
இந்த தேர்தலில் பாஜக, காங்கிரஸ் மற்றும் எதிர்க்கட்சிகளை உள்ளடக்கிய குப்கர் பிரகடனத்துக்கான மக்கள் கூட்டணி ஆகியவை போட்டியிடுகின்றன. இன்றைய 2-ம் கட்ட வாக்குப் பதிவு 43 தொகுதிகளில் நடைபெறுகிறது. ஜம்மு பிராந்தியத்தில் மட்டும் 18 தொகுதிகளும், காஷ்மீரில் 25 தொகுதிகளும் உள்ளன.
இன்றைய தேர்தல் களத்தில் மொத்தம் 321 பேர் வேட்பாளர்களாக உள்ளனர். இன்று கிராமத் தலைவர்கள் பதவிக்கான தேர்தலும் நடைபெறுகிறது.
-
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள்












Click it and Unblock the Notifications