பெரும் திட்டத்துடன் ஊடுருவ எல்லையில் காத்திருக்கும் பயங்கரவாதிகள்... தயார் நிலையில் 3000 வீரர்கள்

ஜம்மு- காஷ்மீர் மாநிலத்தில் ஊடுருவ காத்திருக்கும் பயங்கரவாதிகளை பிடிக்க இந்திய ராணுவத்தினர் 3,000 பேர் தயார் நிலையில் உள்ளனர்.

Subscribe to Oneindia Tamil

ஸ்ரீநகர்: ஜம்மு- காஷ்மீர் மாநிலத்தில் ஊடுருவ காத்திருக்கும் பயங்கரவாதிகளை பிடிக்க இந்திய ராணுவத்தினர் 3,000 பேர் தயார் நிலையில் உள்ளனர்.

பூஞ்ச் மாவட்டத்தில் கடந்த 2 நாள்களுக்கு முன்னர் இந்திய எல்லைக்குள் 250 மீட்டர் தூரம் ஊடுருவி வந்த பாகிஸ்தான் ராணுவ வீரர்கள், இரண்டு இந்திய வீரர்களை சுட்டுக் கொன்றனர். இறந்த பரம்ஜித்சிங், பிரேம்சாகர் ஆகியோர் தலையை துண்டித்து உடலை சிதைத்து, பாகிஸ்தான் ராணுவத்தினர் வெறியாட்டத்தை நடத்தினர்.

3,000 Army personnel carry out operation to snuff out terrorists in Kashmir

இந்நிலையில் உளவுத்துறைக்கு கிடைத்த ரகசிய தகவலின்படி, பாகிஸ்தானில் இருந்து ஜம்மு-காஷ்மீர் மாநிலம் வழியாக ஊருவ 160 பயங்கரவாதிகள் தயார் நிலையில் உள்ளனராம். கடந்த ஒரு வாரமாக ஷோபியான் மாவட்டத்தில் பயங்கரவாதிகள் சகஜமாக நடமாடுவது குறித்து வீடியோக்கள் வெளியாகின.

அதில் ராணுவ வீரர்களை கொல்வது எப்படி என்பது குறித்த பயிற்சி வீடியோக்களும் அடங்கும். இதனால் அவர்களது ஊடுருவலை முறியடிக்க 3,000 இந்திய வீரர்கள் தயார் நிலையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். இதனால் ஜம்மு காஷ்மீரில் பதற்றம் அதிகரித்துள்ளது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+