IT அதிகாரிகளுக்கு ஷாக் தந்த பாஜக மாஜி எம்எல்ஏ.. வீட்டில் கண்ட காட்சி இருக்கே.. இனி மறக்கவே முடியாது
போபால்: மத்திய பிரதேச மாநில பாஜகவின் முன்னாள் எம்எல்ஏ ஹர்வன்ஷ் சிங் ராதோர் வீட்டில் வருமான வரி சோதனை மேற்கொண்டனர். அப்போது அவரது வீட்டில் வருமான வரி அதிகாரிகளை 3 முதலகைள் வரவேற்ற சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
மத்திய பிரதேசம் மாநிலம் சாகர் மாவட்டத்தை சேர்ந்தவர் ஹர்வன்ஷ் சிங் ராதோர். இவரது தந்தை ஷர்னாம் சிங் ராதோர் மத்திய பிரதேச முன்னாள் முதல்வர் உமாபாரதி அரசில் அமைச்சராக செயல்பட்டவர்.

ஹர்வன்ஷ் சிங் ராதோர் கடந்த 2013ல் பாஜக சார்பில் பாண்டா தொகுதியில் போட்டியிட்டு எம்எல்ஏவானார். தற்போது அவர் மாவட்ட தலைவர் பதவிக்கு காய்நகர்த்தி வருகிறார்.
ஹர்வன்ஷ் சிங் ராதோரும், முன்னாள் கவுன்சிலர் ராஜேஷ் கேஷர்வானி ஆகியோரும் பிசினஸ் பார்ட்னர்களாக உள்ளனர். பீடி தொழில் மற்றும் ஒப்பந்த அடிப்படையில் கட்டடம் கட்டி கொடுக்கும் பணிகளை மேற்கொண்டு வருகின்றனர். இவர்கள் 2 பேரும் வரி ஏய்ப்பு செய்ததாக புகார் எழுந்தது. இதையடுத்து நேற்று வருமான வரித்துறை அதிகாரிகள் நேற்று அதிரடியாக அவர்கள் 2 பேரின் வீட்டில் நுழைந்து சோதனை மேற்கொண்டனர்
அப்போது ரூ.155 கோடிக்கு வருமான வரி ஏய்ப்பு செய்யப்பட்டது தெரியவந்தது. இதில் ராஜேஷ் கேஷர்வானி மட்டும் ரூ.140 கோடிக்கு வரி ஏய்ப்பு செய்ததாக கூறப்படுகிறது. அதோடு பினாமி பெயரில் சொகுசு கார்களை அவர் வாங்கி வைத்திருந்ததாக கூறப்படுகிறது. இந்த ரெய்டில் ரூ.3 கோடி ரொக்கப்பணம், தங்க நகைகள், வெள்ளி பொருட்கள், முக்கிய ஆவணங்கள் பறிமுதல் செய்யப்பட்டது.
இந்த ரெய்டில் சர்ப்ரைஸான விஷயம் ஒன்று நடந்துள்ளது. அதாவது பாஜக முன்னாள் எம்எல்ஏ ஹர்வன்ஷ் சிங் ராதோரின் வீட்டில் வருமான வரி சோதனை நடந்தபோது வளாகத்தில் சிறிய குளம் போன்று கட்டப்பட்டு இருந்தது. அதனை வருமான வரித்துறை அதிகாரிகள் எட்டிப்பார்த்தனர். அப்போது 3 முதலகைள் உயிருடன் இருப்பது தெரியவந்தது. இதுபற்றி விசாரித்தபோது முதலையை மாஜி எம்எல்ஏ ஹர்வன்ஷ் சிங் தரப்பில், இந்த வீட்டை சில ஆண்டுகளுக்கு முன்பே விற்பனை செய்துவிட்டோம். முதலையை பிடித்து செல்லும்படி ஏற்கனவே வனத்துறைக்கு கடிதம் எழுதப்பட்டுள்ளது என்று கூறியுள்ளனர்.
இதையடுத்து உடனடியாக வனத்துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. வனத்துறையினர் விரைந்து சென்று 3 முதலைகளையும் பறிமுதல் செய்தனர். அதோடு மாஜி எம்எல்ஏ ஹர்வன்ஷ் சிங் ராதோர் மீது வனவிலங்குகள் பாதுகாப்பு சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்படலாம் என்று கூறப்படுகிறது . அதேவேளையில் முதலையை பிடித்து செல்லும்படி வனத்துறையினருக்கு கடிதம் எழுதப்பட்டதா? என்பது பற்றியும் விசாரணை தொடங்கப்பட்டுள்ளது.
-
1000% கன்ஃபார்ம்.. புதிய கட்சி ஆரம்பிக்கும் அண்ணாமலை! அடுத்த வாரம் இருக்கு கச்சேரி! பரபர பாஜக! -
"2.0 அவதாரம் எடுக்கும் அண்ணாமலை!".. பாஜகவா? புதிய கட்சியா? அரசியல் களத்தை அலற விட்ட போஸ்டர்கள் -
திரிணாமுல் எம்பிகள் மீது தொடர் தாக்குதல்.. பாஜகதான் காரணமா? வெளியான ஷாக் தகவல்! -
டெல்லியில் க்ளைமாக்ஸ்! நெருங்கும் மெகா பிளான்.. பிரதமர் மோடியின் மத்திய அமைச்சரவையில் அதிரடி மாற்றம் -
கொஞ்சம் பொறுமையா இருங்க ஜி! தனித் தவில் வாசிக்க தயாரான அண்ணாமலை! அமைதிப்படுத்த இறங்கிய அமித் ஷா? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக












Click it and Unblock the Notifications