நள்ளிரவில் நடந்த தடியடி திருவிழா.. 3 பேர் பலி.. 100 பேர் காயம்.. வினோத நிகழ்வில் நடந்த விபரீதம்!
கர்னூல்: ஆந்திர மாநிலம் கர்னூல் மாவட்டத்தில் நடைபெற்ற பாரம்பரிய தடியடி திருவிழாவின் போது ஏற்பட்ட கலவரத்தில் மூன்று பேர் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மேலும் 100க்கும் மேற்பட்டோர் காயமடைந்து உள்ளனர். காயமடைந்தவர்களில் சிலரின் உடல்நிலை கவலைக்கிடமாக உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
கர்நாடகா, ஆந்திரா மாநில எல்லையில் கர்னூர் மாவட்டத்தில் உள்ள தேவாரகட்டு மலைப்பகுதியில் அமைந்துள்ளது பிரசித்தி பெற்ற மல்லேஸ்வர சாமி மலைக்கோவில். ஒவ்வொரு ஆண்டும் விஜயதசமி அன்று மல்லேஸ்வர சாமி உற்சவம், தடியடி திருவிழா நடைபெறுவது வழக்கம். அந்தவகையில் நேற்று இரவு நடைபெற்ற தேவாரகட்டு ஜைத்ரா யாத்திரையில் லட்சக்கணக்கான பக்தர்கள் கலந்துகொண்டனர். தேவாரகட்டு தடியடி திருவிழாவை காண முன் எப்போதும் இல்லாத வகையில் இந்த ஆண்டு மக்கள் கூட்டம் அலைமோதியது.

ஒவ்வொரு ஆண்டும் இந்த திருவிழாவின் போது இருதரப்பினர் இடையே கட்டைகளால் தாக்கிக் கொள்ளும் சம்பவத்தால் பலர் பலியாகுவதும், பலர் காயம் அடைவதும் தொடர்ந்து வருவதால், பலத்த பாதுகாப்புக்கு மத்தியில் தடியடி திருவிழா நடத்தப்பட்டது. நேற்று நள்ளிரவு 12.15 மணிக்கு மல்லேஸ்வர சாமிக்கு சாமி உற்சவம் தொடங்கியது. இதனையடுத்து மலை உச்சியில் இருந்து மலை அடிவாரத்திற்கு கொண்டு வரப்பட்டது.
இதைனையடுத்து மல்லேஸ்வர சாமி சிலையை தங்கள் ஊருக்கு தான் முதலில் கொண்டு செல்ல வேண்டும் என இருதரப்பினர் இடையே சம்பிரதாயப்படி வாக்குவாதம் நடந்தது. வழக்கம்போல் இறுதியில் வாக்குவாதம் முற்றி கலவரமாக மாறியது. தங்களிடமிருந்த தடிகள், இரும்பு கம்பியால் இருதரப்பினரும் ஒருவரை ஒருவர் தாக்கி கொண்டனர்.
இந்த தாக்குதலில் இருந்து தப்பிக்க அருகில் இருந்த மரத்தில் பலர் ஏறி உள்ளனர். பாரம் தாங்காமல் மரக்கிளை உடைந்து கீழே விழுந்ததில் மரத்தடியில் இருந்த மூன்று பேர் பலியாகினர். இறந்தவர்கள் ஆலூரை சேர்ந்த கணேஷ், பெல்லாரி பிரகாஷ், மொளகவல்லி கொட்டாலாவின் ராமாஞ்சனே என அடையாளம் காணப்பட்டுள்ளது.
தடியடி திருவிழா கலவரத்தில் காயமடைந்தவர்கள் கர்னூல் மாவட்டத்தில் உள்ள அதோனி மற்றும் ஆலூரு அரசு மருத்துவமனைகளில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டு உள்ளனர். காயமடைந்து சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டவர்களில் மேலும் சிலரின் உடல்நிலை கவலைக்கிடமாக உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
-
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து!












Click it and Unblock the Notifications