டெல்லி அருகே கட்டடம் இடிந்து விபத்தில் 3 பேர் பலி... இடிபாடுகளில் பலர் சிக்கியிருக்கலாம் என அச்சம்
டெல்லி அருகே கட்டடம் சரிந்து விழுந்த விபத்தில் 3 பேர் பலியாகிவிட்டனர்.
Recommended Video

டெல்லி: டெல்லியில் உள்ள கிரேட்டர் நொய்டா பகுதியில் கட்டடம் சரிந்த விபத்தில் 3 பேர் பலியாகிவிட்டனர். இடிபாடுகளில் மேலும் பலர் சிக்கியிருக்கலாம் என அஞ்சப்படுகிறது.
கிரேட்டர் நொய்டாவில் ஷா பெரி கிராமத்தில் 4 மாடி குடியிருப்பு கட்டடம் உள்ளது. இங்கு 18 குடும்பத்தினர் வசிக்கின்றனர். இதன் பக்கத்தில் 6 மாடிகள் கொண்ட கட்டடம் ஒன்று கட்டப்பட்டு வருகிறது. இந்நிலையில் இந்த 6 மாடி கட்டடம் திடீரென 4 மாடி கட்டடத்தின் மீது விழுந்தது.

இதையடுத்து தகவலறிந்த தேசிய பேரிடர் மீட்பு குழுவினர் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து மீட்பு பணிகளை துரிதப்படுத்தினர். இடிபாடுகளில் இருந்து 3 பேரின் உடல்கள் மீட்கப்பட்டன.
குடியிருப்பு கட்டடத்தில் இருந்த மேலும் சிலர் இடிபாடுகளில் சிக்கியிருக்கலாம் என அஞ்சப்படுகிறது. மேலும் 6 மாடி கட்டடம் கட்டும் பணியில் 12 தொழிலாளர்கள் ஈடுபட்டிருந்ததால் அவர்களின் நிலையும் கேள்விக்குறியாக உள்ளது.

எனவே பலி எண்ணிக்கை மேலும் உயரும் என்று அஞ்சப்படுகிறது. இந்த விபத்துக்கான காரணம் தெரியவில்லை. எனினும் கட்டடம் கட்டும் நிறுவன உரிமையாளர் உள்பட 3 பேரை போலீஸார் கைது செய்தனர்.
இடிபாடுகளில் யாரேனும் உயிரோடு இருந்தால் அவர்களுக்கு சிகிச்சை அளிக்க ஏதுவாக 12 ஆம்புலன்ஸ் வாகனங்கள் தயார் நிலையில் உள்ளன. இது குறித்து போலீஸார் மேலும் விசாரணை நடத்தி வருகின்றனர்.
-
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து!












Click it and Unblock the Notifications