ஜம்மு காஷ்மீரில் பயங்கரம்… ராணுவ வீரர்கள் இடையே ஏற்பட்ட மோதலில் 3 வீரர்கள் சுட்டுக்கொலை
காஷ்மீர்: ஜம்மு காஷ்மீரில் துணை ராணுவப் படை வீரர்கள் இடையே ஏற்பட்ட மோதலில் 3 ராணுவ வீரர்கள் கொல்லப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
ஜம்மு காஷ்மீரின் உதாம்பூர் பகுதியில் உள்ள 187 பட்டால் பாலியா ராணுவ முகாமில் நேற்று இரவு 10 மணி அளவில் இந்த சம்பவம் நடந்துள்ளது

உத்தரபிரதேச மாநிலம் கான்பூரைச் சேர்ந்த ராணுவ வீரர் அஜித்குமாருக்கும், சக வீரர்களான போக்ராமால், யோகேந்திர சர்மா, உமேத் சிங் ஆகிய 3 துணை ராணுவப் படை வீரர்களுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டதாக கூறப்படுகிறது.
இதில், ஆத்திரம் அடைந்த அஜித்குமார், துப்பாக்கியை எடுத்து சரமாரியாக சுட்டதில் 3 ராணுவ வீரர்களும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர் .
இதனை தொடர்ந்து, தன்னை தானே சுட்டுகொண்ட அஜித்குமார், கவலைக்கிடமான நிலையில் ராணுவ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இதுகுறித்து, மூத்த ராணுவ அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.












Click it and Unblock the Notifications