மாம்பழ ஜூஸ் குடித்த 3 குழந்தைகளுக்கு உடல்நலக் குறைவு... ஐசியுவில் அனுமதி
ஹைதராபாத்: ஹைதராபாத்தில் மாம்பழக் குளிர்பானம் குடித்த மூன்று சிறுவர்கள் உடல்நலம் பாதிக்கப்பட்டு, தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
ஹைதராபாத் அருகே ராம்கோட் நகரில் நேற்று முன் தினம் அம்மூன்று குழந்தைகளுக்கும் அவர்களது பெற்றோர் செயற்கையாக அட்டைப் பெட்டிகளில் அடைக்கப்பட்ட மாம்பழக் குளிர்பானம் வாங்கிக் கொடுத்துள்ளனர். அதனைக் குடித்த சிறிது நேரத்திலேயே அக்குழந்தைகளுக்கு உடல்நலக் குறைவு ஏற்பட்டுள்ளது.

உடனடியாக அவர்கள் ஜஹனுமாவில் உள்ள பாராஹ் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர். அங்கு அவர்களது நிலைமை மேலும் கவலைக்கிடமானது. இதனால், ராம்கோடில் உள்ள ஆதித்யா மருத்துவமனைக்கு அவர்கள் மேல் சிகிச்சைக்காக கொண்டு செல்லப்பட்டனர்.
உடல்நலம் பாதிக்கப்பட்ட குழந்தைகளுக்கு முறையே நான்கு, மூன்று மற்றும் ஒரு வயது ஆகும். இவர்களில் 3 வயது சிறுவனின் உடல்நிலை மிகவும் கவலைக்கிடமாக இருப்பதாக மருத்துவமனை வட்டாரத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
ரமலான் நோன்பை முடித்து பிறகு, அருகில் இருந்த கடை ஒன்றில் இந்தக் குழந்தைகள் குளிர்பானம் வாங்கிக் குடித்ததாக அவர்களது பெற்றோர் தெரிவித்துள்ளனர்.
ஆனால், இந்தக் குற்றச்சாட்டை அவர்கள் குளிர்பானம் வாங்கிய கடைக்காரர் மறுத்துள்ளார். இதற்கிடையே சம்பந்தப்பட்ட கடையில் அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டுள்ளனர்.
விசாரணையின் முடிவிலேயே குழந்தைகளின் திடீர் உடல்நலக் குறைவுக்கான காரணம் தெரியவரும் என எதிர்பார்க்கப்படுகிறது.
-
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து!












Click it and Unblock the Notifications