பதற்றம்.. மணிப்பூரில் மீண்டும் வன்முறை! கடும் துப்பாக்கி சண்டையில் 3 பேர் பலி.. வீடுகள் எரிப்பு-ஷாக்
இம்பால்: மணிப்பூரில் புதிதாக வெடித்த வன்முறையில் கடும் துப்பாக்கிச்சண்டை நடந்தது. இதில் மைத்தேயி பிரிவை சேர்ந்த 3 பேர் பலியான நிலையில் குக்கி மக்களின் வீடுகள் தீயிட்டு எரிக்கப்பட்டுள்ளதால் தொடர்ந்து கலவர பூமியாக மணிப்பூர் இருந்து வருகிறது.
வடகிழக்கு மாநிலமான மணிப்பூரில் பாஜக ஆட்சி நடக்கிறது. முதல்வராக பீரன் சிங் உள்ளார். இங்குள்ள மைத்தேயி மக்கள் தங்களை பழங்குடியினர் பட்டியலில் சேர்க்க கூறுகின்றனர். இதற்கு குக்கி பழங்குடியின மக்கள் எதிர்ப்பு தெரிவிக்கின்றனர்.

இதுதொடர்பாக 2 இனக்குழுக்களுக்கும் கடந்த மே மாதம் மோதல் ஏற்பட்டது. இது வன்மறையானது. வன்முறை 3 மாதங்களாக தொடர்ந்து வருகிறது. இதில் 150க்கும் அதிகமானவர்கள் கொல்லப்பட்டுள்ளனர். மத்திய, மாநில அரசுகள் வன்முறையை கட்டுப்படுத்த முடியாமல் தவித்து வருகின்றன.
இத்தகைய சூழலில் தான் சமீபத்தில் மணிப்பூர் மாநிலம் பைனோம் கிராமத்தில் 2 குக்கி பழங்குடியின பெண்களை நிர்வாணப்படுத்தி ஊர்வலமாக அழைத்து சென்ற வீடியோ வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இது ஒட்டுமொத்த உலகத்தையும் உலுக்கிய நிலையில் நாடாளுமன்றத்தில் இந்த பிரச்சனை எதிரொலித்து வருகிறது.
இந்நிலையில் தான் நேற்று மணிப்பூர் மாநிலம் பிஷ்னுபூர் மாவட்டத்தில் புதிதாக வன்முறை வெடித்தது. அந்த மாவட்டத்தில் உள்ள குவாக்டா பகுதியில் இந்த வன்முறை நடந்தது. இருதரப்புக்கும் இடையே ஏற்பட்ட மோதலில் துப்பாக்கிச்சூடும் நடந்தது. அதோடு வன்முறையில் குக்கி பழங்குடியின மக்களின் வீடுகள் சூறையாடப்பட்டு தீயிட்டு எரிக்கப்பட்டது.
இதனால் அங்கு பெரும் பதற்றம் ஏற்பட்டது. இதையடுத்து மணிப்பூர் போலீசார் மற்றும் பாதுகாப்பு படையினர் வன்முறையாளர்களை விரட்ட முயன்றனர். அப்போது அவர்கள் துப்பாக்கியால் சுட்டனர். இதனால் வன்முறையாளர்கள் மற்றும் பாதுகாப்பு படையினர் இடையே கடும் துப்பாக்கிச்சண்டை நடந்தது. இது அங்கு பெரும் பதற்றத்தை ஏற்படுத்தி உள்ளது.
இதுபற்றி பிஷ்னுபூர் மாவட்ட போலீசார் கூறுகையில், ‛‛பபர் ஜோன் பகுதியை தாண்டி மைத்தேயி மக்கள் வசிக்கும் பகுதிக்கு சிலர் வந்து அவர்கள் மீது துப்பாக்கியால் சுட்டனர். இதையடுத்து பிரச்சனை ஏற்பட்டது. இதில் 3 மைத்தேயி பிரிவினர் பலியாகி உள்ளனர். குக்கி மக்களின் வீடுகள் தீயிட்டு எரிக்கப்பட்டுள்ளது'' என்றார்.
-
“மக்களை தெருநாய்களாக சித்தரித்த உங்களுக்கும் ஓட்டு போடுவாங்க”.. ராகவா லாரன்ஸுக்கு சேரன் பதில்! -
தவெக அமைச்சரவையில் இருந்து எந்நேரத்திலும் வெளியேறுவோம்.. திருமாவளவன் கருத்துக்கு வன்னி அரசு விளக்கம் -
"கலைஞர் டிவி, ஜெயா டிவிக்கு அடுத்ததாக 'வெற்றி டிவி'... ஜூன் 22-ல் லோகோ வெளியீடு? விஜய்யின் அடுத்த மாஸ்டர் மூவ் இதுதானா?" -
தவெகவில் சேர்ந்த 10 நாட்களிலேயே அரசியலில் இருந்தே விலகிய முன்னாள் MLA கோவிந்தசாமி.. பின்னணி என்ன? -
Vijay Sangeetha Divorce: சிஎம்-ஆவே இருந்தாலும் நேரில் தான் வரனும்.. வீடியோ கான்ஃப்ரன்ஸ் கோரிக்கையை நிராகரித்த நீதிமன்றம் -
6400 கி.மீ ரஷ்யா, 7200 கி.மீ ஆப்பிரிக்காவை விட நீளமானது என்று கூகுள் மேப்ஸ் எப்படி நம்ப வைக்கிறது? -
மூட்டை முடிச்சை கட்டிக்கிட்டு பெங்களூர், ஹைதராபாத் போக வேண்டியதுதான்.. பின்னோக்கி செல்லும் சென்னை! -
விஜய் வெற்றி செல்லாது? திருச்சி கிழக்கு எம்எல்ஏவாக என்னையே அறிவிக்கணும்.. ஹைகோர்ட்டில் இனிகோ மனு -
“செல்போனால் ஒரு மாநிலமே போய்விட்டது” - நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதனின் பேச்சால் சலசலப்பு! -
மகளிர் உரிமைத் தொகை ரூ.2,500! புதிய விதிமுறைகள் தயார்? ஜூன் மாதப் பட்டியலில் யாருக்கெல்லாம் வாய்ப்பு -
சி.வி.சண்முகத்துக்கு பல்வேறு பொறுப்புகளை பிச்சை போட்டதே எடப்பாடி பழனிசாமிதான்: அக்ரி கிருஷ்ணமூர்த்தி -
மனோஜ் மனைவி தனியாக வாழ காரணம் இதுதான்.. "இதை” நம்பி தான் இருக்கிறாங்க! பாரதிராஜா தம்பி உருக்கம்












Click it and Unblock the Notifications