வரதட்சணைக் கொலைகளுக்கு பேர் போகும் ஒடிசா- ஒரே வாரத்தில் 3 பேர் கைது!
Subscribe to Oneindia Tamil
புவனேஸ்வர்: ஒடிசா மாநிலத்தில் வரதட்சணைக்காக மனைவியரை கொன்றதாக ஒரே மாவட்டத்தை சேர்ந்த மூன்று பேர் கடந்த ஒருவாரத்தில் கைதான சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இங்குள்ள பெர்ஹாம்பூர் மாவட்டத்தில் பிரியங்கா என்ற பெண்ணை வரதட்சணை கேட்டு கொடுமைப்படுத்தி நேற்று அவரது கழுத்தை நெறித்துக் கொன்ற ஜிதேந்திர குமார் சாஹு என்பவரை போலீசார் கைது செய்தனர்.

இதேபோல், இங்குள்ள புருப்டா பகுதியில் ஜிலி என்ற பெண்ணை கொன்ற அவரது கணவர் பனானலி பெஹேரா என்பவரும் நேற்று கைது செய்யப்பட்டார்.
கடந்த செவ்வாய்க்கிழமை பஞ்சபுட்டி பகுதியில் சுகந்தி என்ற பெண்ணை கொன்ற சுபாஷ் என்பவரையும் பெர்ஹாம்பூர் மாவட்ட போலீசார் கைது செய்துள்ளனர். இதனையடுத்து ஒரே வாரத்தில் மூன்று பேர் வரதட்சணைக் கொடுமை சம்பவத்தில் மனைவியைக் கொன்று கைதான சம்பவர் அதிர்ச்சியினை ஏற்படுத்தியுள்ளது.












Click it and Unblock the Notifications