ஆபீஸில் பாலியல் தொல்லை.. பாதிக்கப்பட்ட பெண்களுக்கு சம்பளத்துடன் 90 நாள் விடுமுறை!
டெல்லி: அலுவலகத்தில் பாலியல் தொல்லையால் பாதிக்கப்படும் மத்திய அரசு பெண் ஊழியர்கள், 3 மாத காலத்திற்கு சம்பளத்துடன் கூடிய விடுமுறை எடுத்துக் கொள்ள அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.
மன ரீதியான உளைச்சல்களிலிருந்து மீண்டு வர இந்த விடுமுறை சலுகையை மத்திய அரசு அறிவித்துள்ளது. பணிபுரியும் இடத்தில் பெண்களுக்கு எதிரான பாலியல் தொல்லைகள் தடுப்பு மற்றும் குறை தீர்ப்பு சட்டம் 2013ல் இதுதொடர்பாக திருத்தம் கொண்டு வந்துள்ளது மத்திய அரசு.

இதன் மூலம் பாலியல் தொல்லை தொடர்பாக புகார் பதிவு செய்யும் பெண் ஊழியர்கள் 3 மாத விடுமுறையில் போகலாம். அவர்களுக்கு சம்பளத்துடன் கூடிய விடுமுறை அளிக்கப்படும். விசாரணை முடிந்தவுடன் அவர்கள் மீண்டும் பணிக்குத் திரும்பலாம்.
இது விசேஷ விடுமுறையாக கணக்கில் வைக்கப்படும் என்றும் பிற விடுமுறையுடன் இணைக்கப்படாது என்றும் மத்திய அரசு விளக்கியுள்ளது.
உடல் ரீதியாக தொடுவது, நெருங்கி வருவது, பாலியல் தேவைகளுக்காக வற்புறுத்துவது, பாலியல் வார்த்தைகளைப் பயன்படுத்தி அத்துமீறி பேசுவது, ஆபாசமாக பேசுவது, ஆபாசப் படம் காட்டுவது, தேவையில்லாமல் அருகே வந்து பேசுவது உள்ளிட்டவை பாலியல் தொந்தரவுகளாக வகைப்படுத்தப்பட்டுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.
-
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம் -
திருச்சி-க்கு வரும் தாஜ்.. ஒரே நேரத்தில் 3 மெகா பிராண்ட்.. அதுவும் இந்த ஏரியாவுல!












Click it and Unblock the Notifications