பாஜக நிர்வாகியை தொட்டால் இதுதான் நடக்கும்? 3 முஸ்லிம்களின் வீடுகள் இடிப்பு.. எங்கு தெரியுமா?
போபால்: மத்திய பிரதேசத்தில் பாஜக நிர்வாகியை வாள் கொண்டு வெட்டிய வழக்கில் ஆக்கிரமிப்பு எனக்கூறி 3 இஸ்லாமியர்களின் வீடுகள் புல்டோசரால் இடித்து தரைமட்டமாக்கப்பட்ட பரபரப்பான சம்பவம் நடந்துள்ளது.
மத்திய பிரதேச மாநிலத்துக்கு கடந்த மாதம் 17 ம் தேதி சட்டசபை தேர்தல் நடந்தது. இதில் பதிவான ஓட்டுகள் கடந்த 3ம் தேதி எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட்டன. மத்திய பிரதேசத்தில் மொத்தம் 230 சட்டசபை தொகுதிகள் உள்ளன.

இங்கு ஒரு கட்சி ஆட்சியை பிடிக்க வேண்டும் என்றால் 116 தொகுதிகளில் வெற்றி பெற வேண்டும். அந்த வகையில் மீண்டும் பாஜக வெற்றி பெற்று ஆட்சியை தக்க வைத்தது.
நடந்து முடிந்த தேர்தலில் பாஜக 163 தொகுதிகளை கைப்பற்றி அசத்தியது. மாறாக காங்கிரஸ் கட்சி 66 தொகுதிகளில் மட்டுமே வெற்றி பெற்றது. இதையடுத்து மத்திய பிரதேசத்தின் முதல்வராக மோனக் யாதவ் பொறுப்பேற்றார். இந்நிலையில் தான் தற்போது மத்திய பிரதேசத்தில் 3 இஸ்லாமியர்களின் வீடுகள் புல்டோசர் கொண்டு இடிக்கப்பட்ட சம்பவம் சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.
அதாவது கடந்த 5ம் தேதி போபால் அருகே பாஜகவை சேர்ந்த தேவேந்திர சிங் தாகூர் சென்றுள்ளார். அப்போது தேர்தல் முடிவுகள் குறித்து அவருக்கும் இன்னொரு தரப்புக்கும் வாக்குவாதம் ஏற்பட்டது. இந்த வேளையில் பாரூக் என்பவர் வாள் எடுத்து தேவேந்திர சிங் தாகூரை வெட்டியுள்ளார். இதனால் அவரது கைகளில் காயம் ஏற்பட்டது. இதையடுத்து தேவேந்திர சிங் தாகூர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு டாக்டர்கள் சிகிச்சை அளித்து வருகின்றனர்.
மேலும் சம்பவம் குறித்த போலீசில் புகார் அளிக்கப்பட்டது. அதன்பேரில் போலீசார் பாரூக், ஷாருக்கான், சமீர் என்ற பில்லு ரெயின், அஸ்லாம், பிலால் கான் ஆகிய 5 பேர் மீது கொலை முயற்சி வழக்குப்பதிவு செய்தனர். மேலும் இவர்கள் தொடர்பாக நடத்தப்பட்ட விசாரணையில் 3 பேர் அரசு நிலத்தை ஆக்கிரமித்து வீடு கட்டியிருப்பது தெரியவந்தது.
இதையடுத்து அந்த வீடுகளை அகற்ற உத்தரவிடப்பட்டது. இதையடுத்து 3 பேரின் வீடுகளும் புல்டோசர் மூலம் இடித்து தரைமட்டமாக்கப்பட்டது. இதுபற்றி ஹபிப்கஞ்ச் போலீஸ் நிலையத்தின் பொறுப்பு அதகிாரி மணிஷ் ராஜ் சிங் படோரியா கூறுகையில், ‛‛வழக்குப்பதிவு செய்யப்பட்டவர்களில் 3 பேர் வீடு நிலத்தை ஆக்கிரமித்து கட்டி இருப்பது தெரியவந்தது. இதனால் அந்த வீடுகள் இடிக்கப்பட்டுள்ளது'' என்றார்.
-
மம்தாவிற்காக எம்பி பதவியை ராஜினாமா செய்யும் யூசுப் பதான்? பேச்சுவார்த்தையில் சவுரவ் கங்குலி? பின்னணி -
எல்லாமே முக்கிய தலைகள் ஆச்சே.. விஜய் முன்னிலையில்.. மொத்தமாக தவெகவில் இணையும் அதிமுக தலைவர்கள்! -
திருவண்ணாமலை செய்யாறு வீடுகளில் மின்சார மீட்டர்கள் பழுதுக்கு அணில் காரணம்.. மின்சார வாரியம் பதில் -
கேட்கும்போதே நெஞ்சம் உறைகிறது.. சஹாரா பாலைவன மணலில் பழுதான லாரி. தாகத்துடன் அநியாயமாய் மாண்ட 49 பேர் -
விழுப்புரத்தில் திருமாவளவன் திறக்க இருந்த அம்பேத்கர் சிலை.. இரவோடு இரவாக அகற்றப்பட்டது ஏன்? -
சென்னை ரோட்டை கண்ணில் ஒத்திக்கலாம்.. பெங்களூர் நிலைமை படுமோசம்.. டிகே சிவகுமார் என்ன செய்வார்? -
"திமுக இல்லாதது கவலையளிக்கிறது.." ரொம்பவே வருத்தப்பட்டு பேசிய திருமாவளவன்.. என்ன மேட்டர்? -
வாண்டடா வண்டில ஏறிய செ.பா! ஹார்ட் டிஸ்க் திருட்டு என்றதும் பதற்றம் ஏன்? சிடிஆர் நிர்மல்குமார் கேள்வி -
விலகிய 113 ஒன்றிய செயலாளர்கள்.. தவெகவின் ஆபரேஷனால் மிரண்ட அறிவாலயம்! ஸ்டாலின் எடுத்த முக்கிய முடிவு -
"16 ஆண்டுகளுக்கு பின் தாய் வீட்டிற்கு.." வேல்முருகன் எமோஷ்னலாக சொல்ல.. சட்டென குறுக்கிட்ட அன்புமணி -
அதிமுக + திமுகவிற்கு ஷாக்.. 4 மாஜி அமைச்சர்கள் - 8 எம்எல்ஏக்கள் உள்பட 60 பேர் தவெகவில் ஐக்கியம் -
அன்னைக்கே சொன்னாரே டிடிவி தினகரன்! நெருங்கும் கிளைமாக்ஸ்? பாஜக ஸ்கெட்ச்? கொத்து கொத்தாக ஓடும் தலைகள்












Click it and Unblock the Notifications