மராட்டியத்தில் 4 ஆண்டுகளாக 55 மாணவிகளை மானபங்கம் செய்து வந்த 3 ஆசிரியர்கள் கைது
நாக்பூர்: மகாராஷ்டிராவில் தனியார் உறைவிடப் பள்ளி ஒன்றில், கடந்த நான்கு ஆண்டுகளாக ஐம்பதுக்கும் மேற்பட்ட மாணவிகளை பாலியல் ரீதியாக துன்புறுத்தி வந்த 3 ஆசிரியர்களைப் போலீசார் கைது செய்துள்ளனர்.
மகாராஷ்டிராவில் அகோலா மாவட்டத்தில் பாபில்கவ் என்ற இடத்தில் தனியார் உறைவிட பள்ளி ஒன்று உள்ளது. இங்கு படிக்கும் மாணவிகள் கடந்த 27ம் தேதி மாநில பெண்கள் ஆணையத்திற்கு கடிதம் ஒன்று அனுப்பப் பட்டது. கையெழுத்து இல்லாமல் வந்த அந்தக் கடிதம் தொடர்பாக மாநில பெண்கள் குழு உறுப்பினர் விசாரணை மேற்கொண்டனர்.

உறைவிடப் பள்ளிக்கே நேரடியாகச் சென்று மாநில பெண்கள் ஆணைய உறுப்பினர் ஆஷா மிர்கே மாணவிகளிடம் விசாரணை நடத்தினார். அப்போது அந்த பள்ளியில் படிக்கும் 55 மாணவிகள் சித்ரவதை செய்யப்பட்டு மானபங்கப்படுத்தப்பட்டு இருப்பது தெரியவந்தது. இதைத் தொடர்ந்து அவர் போலீசில் புகார் கொடுத்தார்.
இது தொடர்பாக வழக்குப்பதிவு செய்த போலீசார், மாணவிகளை மானபங்கப்படுத்திய ராம் சந்த், சைலேஷ்ராம்டேக், சந்தீப் லட்கர் ஆகிய 3 ஆசிரியர்களை கைது செய்துள்ளனர். மாணவிகளுக்கு செக்ஸ் தொந்தரவு கொடுத்த இந்த 3 ஆசிரியர்களில் சைலேஷ் ராம்டேக் சஸ்பெண்டு செய்யப்பட்டு உள்ளார்.
இதுகுறித்து மாநில பெண்கள் ஆணைய உறுப்பினர் ஆஷாமிர்கே கூறியதாவது :-
நான் அந்த உறைவிட பள்ளிக்கு சென்று 359 மாணவிகளிடம் பேசினேன். இதில் 55 மாணவிகள் தங்களை 3 ஆசிரியர்கள் அடிக்கடி மானபங்கம் செய்து சித்ரவதை செய்ததாக எழுத்துப்பூர்வமாக புகார் தெரிவித்தனர். கடந்த 4 ஆண்டுகளாக அவர்கள் இந்த இழிவான செயல்களில் ஈடுபட்டு உள்ளனர்.
மானபங்கப்படுத்தியதை வெளியே சொன்னால் சோதனை தேர்வு மதிப் பெண்ணை குறைத்து விடுவதாக 3 ஆசிரியர்களும் மிரட்டி உள்ளனர்' என்றார்.
-
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம் -
திருச்சி-க்கு வரும் தாஜ்.. ஒரே நேரத்தில் 3 மெகா பிராண்ட்.. அதுவும் இந்த ஏரியாவுல!












Click it and Unblock the Notifications