தாய் யானையிடம் பால் குடிக்கும் 3 வயது சிறுமி.. காட்டுத் தீயாய் பரவும் வீடியோ!
கவுஹாத்தி: அஸ்ஸாமில் 3 வயது சிறுமி யானையிடம் பால் குடிக்கும் வீடியோ சமூகவலைதளங்களில் தீயாய் பரவி வருகிறது.
Recommended Video
மனிதர்கள் சக மனிதர்களை எதிரியாக பார்க்கும் போக்கு அதிகரித்து வருகிறது. அது போல் விலங்குகளுக்கும் சில விலங்குகள் எதிரியாகவே உள்ளது. பூனையும் எலியும் எதிரிகள், பாம்பு- கீரி என சொல்லிக் கொண்டே போகலாம்.
எதிரிகள் இருக்கும் போதிலும் சில தருணங்களில் நண்பர்களாக சில விலங்குகள் உள்ளன. நாயிடம் பால் குடிக்கும் பூனைக் குட்டிகள், ஆட்டிடம் பால் குடிக்கும் நாய்க் குட்டிகள், குரங்குக்கு உதவிய நாய் என செய்திகளில் படிக்கிறோம்.

விலங்குகள்
அது போல் மனிதர்களுடன் வீட்டு விலங்குகள் நெருங்கி பழகும் சம்பவங்களும் நடக்கின்றன. நாய், பூனை, கிளி, பசு, குரங்கு உள்ளிட்டவை மனிதர்களுடன் குழந்தைகளை போல விளையாடுவதையும் நாம் கண் கூடாக பார்க்கிறோம். அந்த வகையில் ஒரு யானையின் மடியிலிருந்து 3 வயது சிறுமி ஒருவர் பால் குடிக்கிறார் என்பதை நம்புகிறீர்களா?

அஸ்ஸாமில் நடந்த சம்பவம்
ஆம்! இந்த சம்பவம் அஸ்ஸாம் மாநிலத்தில் நடந்துள்ளது. அஸ்ஸாம் மாநிலம் கோலாகாட் மாவட்டத்தைச் சேர்ந்தவர் ஹர்ஷிதா போரா (3). இவர் யானையுடன் விளையாடி பால் குடிக்கும் வீடியோ சமூகவலைதளங்களில் பரவி வருகிறது. சிறுமியிடம் யானையும் பாசத்தை பொழிந்து வருகிறது.

3 வயது ஹர்ஷிதா
அந்த யானையை ஹர்ஷிதா பினு என்று அழைக்கிறார். பினுவும் ஹர்ஷிதாவும் பாசத்துடன் விளையாடி மகிழ்கிறார்கள். இந்த வீடியோவில் ஹர்ஷிதா பினு பினு என யானையை அழைத்து விளையாடுகிறார். யானையின் கால்களுக்கு அடியில் ஓடி சென்று விளையாடுகிறார். இத்தனைக்கும் அந்த யானை அந்த சிறுமியை தாயுள்ளத்துடன் கவனித்துக் கொள்கிறது.

80 களில் வெளியான படம்
இந்த மாதிரி காட்சிகளை எல்லாம் இயக்குநர் ராம நாராயணன் இயக்கிய படங்களில்தான் பார்த்துள்ளோம். இவர் இயக்கிய ஆடி வெள்ளி, காளிகாம்பாள் உள்ளிட்ட படங்களில் யானை பொதுமக்களுடன் கூடி விளையாடுவது போல் இருக்கும். அது போல் துர்கா திரைப்படத்தில் குரங்கு, நாய், பேபி ஷாமிலியை கொண்டு படம் எடுத்திருப்பார். இப்படி சினிமாவில் பார்த்த நிலையில் நிஜத்திலும் விலங்குகளுடன் குழந்தைகள் பாச பிணைப்புடன் இருக்கிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
-
மாதம் 2500 மகளிர் உரிமை தொகை தருவதற்கு தமிழக அரசுக்கு எவ்வளவு பணம் தேவை.. அரசுக்கு மாற்று வழிகள் -
விஸ்வரூபம் எடுத்த ஆந்திர விவகாரத்தில் ட்விஸ்ட்.. விஜய்-க்கு நிம்மதி! 'உல்சான்' ஆக மாறும் தூத்துக்குடி -
மதிமுக எம்எல்ஏக்களின் ராஜினாமா முடிவு.. குமுறிய துரை வைகோ.. பிடி கொடுக்காத விஜய் -
வங்கியில் இருக்கும் மக்களின் தங்கத்தை டார்கெட் செய்யும் மத்திய அரசு? அவசர அவசரமாக அனுப்பப்பட்ட உத்தரவு! -
இந்தியாவை தாக்கும் பெரிய ஆபத்து.. விஷயம் கேட்டு எலான் மஸ்க் கூட அதிர்ந்து போனார்! பேரழிவு கன்பார்ம்? -
கிழிந்தது இரட்டை இலை.. அறிவாலயத்துக்கு பறக்கும் விராலிமலை விஜயபாஸ்கர்! சேர்ந்ததும் இந்த பொறுப்பா? -
சென்னை சூட்கேஸில் தலை இல்லாத சடலம்... இப்படி ஒரு பெண்ணா? பார்கோடு தந்த மரண துப்பு.. அலறிய பெரம்பூர் -
இனி அதிகபட்சமே ஆண்டுக்கு 4 சிலிண்டர் தான்.. எக்ஸ்ட்ரா சிலிண்டருக்கு ரூ.300 அதிகமாம்.. வெளியான தகவல் -
டெல்லியில் இந்தியா கூட்டணி ஆலோசனை.. திமுக, ஆம் ஆத்மி புறக்கணிப்பு.. வைகோ, திருமாவளவன் பங்கேற்பு -
மீண்டும் வந்த அதே வரலாற்று சிக்னல்.. தங்கம் விலை மிகப்பெரிய அளவில் சரிகிறது.. இப்போ வாங்கலாமா? -
ஸ்டாலின் காங்கிரஸுக்கு தந்த பவர்புல் ஷாக்! பாஜகவும் இல்லை.. அப்ப தேசிய அரசியலில் திமுகவின் ரூட் என்ன -
கேஸ் சிலிண்டர் விலை ரூ.1,600.. விலை உயர்வை அறிவித்த கையோடு.. மத்திய அரசு சொன்ன முக்கியமான பாயிண்டு












Click it and Unblock the Notifications