தலைமை நீதிபதி கோபத்தால் இறங்கி வந்தது மத்திய அரசு.. கொலிஜியம் பரிந்துரைத்த 34 நீதிபதிகள் நியமனம்
டெல்லி: கொலிஜியம் பரிந்துரைத்த 77 நீதிபதிகளில் 34 நீதிபதிகள் ஹைகோர்ட்டுகளுக்கு நியமனம் செய்யப்பட்டுள்ளதாக சுப்ரீம் கோர்ட்டில் மத்திய அரசு தெரிவித்துள்ளது.
நீதிபதிகளை தேர்ந்தெடுக்க அரசுக்கு அனுமதியில்லை என கூறி கண்டித்த சுப்ரீம் கோர்ட், கொலிஜியம் முறைப்படியே, நீதிபதிகளை பரிந்துரைக்க உத்தரவிட்டிருந்தது. இந்த நிலையில் கொலிஜியம் பரிந்துரைத்த நீதிபதிகளை அரசு பதவியமர்த்தவில்லை என்று சர்ச்சை வெடித்தது. இதுதொடர்பாக பொதுநலன் வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

இந்த வழக்கை தலைமை நீதிபதி தாக்கூர் அமர்வு விசாரித்து வருகிறது. கடந்த அக்டோபர் இறுதியில் விசாரணை நடைபெற்றபோது, நீதிமன்றத்தை ஸ்தம்பிக்க செய்ய மத்திய அரசு முயல்வதாக தலைமை நீதிபதி குற்றம்சாட்டினார். அட்டார்னி ஜெனரல் முகுல் ரோகத்கி அளித்த உறுதிமொழியை தொடர்ந்து கோபத்தை தணித்த சுப்ரீம் கோர்ட் வழக்கை மீண்டும் இன்று விசாரணைக்கு எடுத்தது.
அப்போது கொலிஜியம் பரிந்துரைத்த 77 நீதிபதிகளில், 34 நீதிபதிகள் பல்வேறு ஹைகோர்ட்டுகளில் நியமிக்கப்பட்டுள்ளதாக அரசு கூறியது. 43 நீதிபதிகள் பெயர்களை மறு பரிசீலனைக்கு அனுப்பி வைத்துள்ளதாகவும் முகுல் ரோகத்கி தெரிவித்தார். இதையடுத்து வரும் 15ம் தேதி கொலிஜியம் கூடும் எனவும், அதன்பிறகு கோர்ட்டில் உரிய உத்தரவை பிறப்பிக்க உள்ளதாகவும் தாக்கூர் கூறி, வழக்கை ஒத்தி வைத்தார்.
-
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர்












Click it and Unblock the Notifications