8 வயது சிறுவனை கழுத்தை அறுத்துக் கோரமாக கொன்ற பாஜக தொண்டர்
திருவனந்தபுரம்: கேரளாவில் 3ம் வகுப்பு சிறுவனின் கழுத்தை அறுத்துக் கொன்ற பாஜக தொண்டரைப் போலீசார் கைது செய்துள்ளனர்.
கேரளாவில் கசரகாட் மாவட்டம் கன்னன்காட் பகுதியைச் சேர்ந்தவர் அப்பாஸ். இவரது 8 வயது மகன் முகம்மது பயஸ் அருகில் உள்ள பள்ளி ஒன்றில் மூன்றாம் வகுப்பு படித்து வந்தார்.

வழக்கம் போல தனது நண்பர்கள் மற்றும் சகோதரர்களுடன் நேற்று காலை பள்ளிக்குச் சென்று கொண்டிருந்தான் முகம்மது. அப்போது அவர்களைப் பின் தொடர்ந்து வந்த விஜயகுமார் என்ற நபர், யாரும் எதிர்பார்க்காத நேரத்தில் முகம்மதுவின் கழுத்தை கத்தியால் அறுத்துக் கொலை செய்தான்.
மக்கள் நடமாட்டம் மிகுந்த சாலையில் நடந்த இந்தக் கொடூர சம்பவத்தால் பரபரப்பு ஏற்பட்டது. விரைந்து செயல்பட்ட பொதுமக்கள், விஜயகுமாரை மடக்கிப் பிடித்து அருகில் இருந்த மின்கம்பத்தில் கட்டி வைத்தனர். தகவலறிந்து விரைந்து வந்த போலீசார் விஜயகுமாரைக் கைது செய்தனர்.
விஜயகுமார் பாஜக தொண்டர் எனக் கூறப்படுகிறது. விஜயகுமாருக்கும், முகம்மதுவின் தந்தைக்கும் ஏற்பட்ட பகை காரணமாக இந்தக் கொலை நடந்துள்ளதா என்ற கோணத்தில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். முகம்மதுவின் தந்தை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியைச் சேர்ந்தவர் ஆவார்.
விஜயகுமார் ஏற்கனவே பொய்யான வெடிகுண்டு மிரட்டல் விடுத்த புகாரில் கைது செய்யப்பட்டவர் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும், விஜயகுமார் மனநலம் பாதித்தவர் எனவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன?












Click it and Unblock the Notifications