பெங்களூரில் 4 ஆப்பிரிக்கர்களை அடித்து நொறுக்கிய கும்பல்
பெங்களூர்: பெங்களூரில் ஆப்பிரிக்காவைச் சேர்ந்த 4 பேர் ஒரு கும்பலால் தாக்கப்பட்டுள்ளனர்.
வடகிழக்கு பெங்களூரில் உள்ள கொத்தனூர் அருகே இருக்கும் பைரதி பகுதியில் நேற்று முன்தினம் இரவு 12.30 மணி அளவில் ஒரு கும்பல் ஆப்பிரிக்காவைச் சேர்ந்த 4 பேரை தாக்கியுள்ளது. அந்த 4 பேரும் தொல்லையாக இருந்ததாக அப்பகுதி மக்கள் புகார் அளித்ததால் தான் அந்த கும்பல் தாக்கியதாக கூறப்படுகிறது.
இது குறித்து தாக்குதலுக்குள்ளானவர்களில் ஒருவரான ஜான் கூறுகையில்,
அந்த கும்பல் எங்களை இரவு 12.30 மணியில் இருந்து அதிகாலை 3 மணி வரை கொடூரமாகத் தாக்கியது. நானும், மேலும் 3 பேரும் வீட்டுக்கு சென்று கொண்டிருந்தோம். அப்போது தான் நாங்கள் தாக்கப்பட்டோம். அவர்கள் என்னை துரத்தி துரத்தி அடித்ததில் எனக்கு பல இடங்களில் காயம் ஏற்பட்டது. ஆனால் அவர்கள் எதற்காக எங்களை தாக்கினார்கள் என்று தெரியவில்லை என்றார்.
சம்பவம் பற்றி கூடுதல் கமிஷனர் அலோக் குமார் கூறுகையில்,
நான் கொத்தனூர் காவல் நிலையம் சென்று அந்த ஆப்பிரிக்க நாட்டவர்களிடம் பேசினேன். இது சிறிய சம்பவம் தான் என்று அவர்கள் தெரிவித்தனர். அவர்களை யாரும் தாக்கவில்லை. இது தொடர்பாக வழக்குப்பதிவு செய்ய விரும்பவில்லை என்று அவர்கள் தெரிவித்தனர். ஜானுக்கு காயம் எப்படி ஏற்பட்டது என்று விசாரித்து வருகிறோம் என்றார்.


Click it and Unblock the Notifications
