For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

தினமும் 4 என்கவுண்டர்.. 1 ஆண்டில் 1,038 பேர் மரணம்.. கொலை களமாக யோகியின் உ.பி

உத்தர பிரதேசத்தில் தினமும் சராசரியாக 4 பேர் என்கவுண்டர் மூலம் கொலை செய்யப்படுவதாக அதிர்ச்சி தகவல் தெரிவிக்கிறது.

By Shyamsundar
Google Oneindia Tamil News

Recommended Video

    வருடத்திற்கு உ.பி.யில் 1038 பேர் என்கவுண்டர்கள்- வீடியோ

    லக்னோ: உத்தர பிரதேசத்தில் தினமும் சராசரியாக 4 பேர் என்கவுண்டர் மூலம் கொலை செய்யப்படுவதாக அதிர்ச்சி தகவல் தெரிவிக்கிறது. இந்த தகவல் யோகி ஆதித்யநாத்திற்கு பெரிய நெருக்கடியை கொடுத்து இருக்கிறது.

    காவி நிறம் தொடர்பாகவும், ராமர் தொடர்பாகவும் நிறைய வித்தியாசமான சட்டங்கள் கொண்டு வரப்படும் போதெல்லாம் இவர் காமடியனாக பார்க்கப்பட்டார். ஆனால் பலருக்கும் தெரியாத பல விஷயங்கள் அந்த மாநிலத்தில் நடந்து கொண்டு இருக்கிறது.

    அப்பாவிகள் எப்படி கொல்லப்படுகிறார்கள் என்பதே அதிர்ச்சி அளிக்க கூடியதாக இருக்கிறது. அதேபோல் கொலை செய்ய தேர்ந்தெடுக்கப்படும் நபர்களும் எப்படிப்பட்டவர்கள் என்பது அதிர்ச்சியை அளிக்கிறது.

    எல்லாம் அப்படித்தான்

    எல்லாம் அப்படித்தான்

    கடந்த 2017 ஜூன் மாதம் ஆதித்யநாத் ஒரு பேட்டி கொடுத்து இருந்தார். அதில் ''இங்கு யாருமே குற்றம் செய்ய கூடாது. குற்றம் செய்பவர்கள் கடுமையாக தண்டிக்கப்படுவார்கள். குற்றம் செய்பவர்களை சுடுவதில் கூட தவறு இல்லை'' என்று குறிப்பிட்டார். இதற்கு பலரும் எதிர்ப்பு தெரிவித்து இருந்தார்கள். ஆனாலும் அங்கு என்கவுண்டர்கள் நடந்து கொண்டு இருக்கிறது.

    எவ்வளவு பேர் இதுவரை

    எவ்வளவு பேர் இதுவரை

    உத்தர பிரதேச அரசு ஆவணங்களின்படி கடந்த ஒரு வருடத்தில் 1,038 பேர் என்கவுண்டர் மூலம் கொல்லப்பட்டு இருக்கிறார்கள். கணக்குப்படி தினமும் 4 பேர் மரணம் அடைகிறார்கள். ஒரு மாதத்திற்கு 120 பேர் வரை கொலை செய்யப்படுகிறார்கள். இந்த என்கவுண்டர்களில் 238 பேர் மோசமான காயங்களுடன் தப்பித்து இருக்கிறார்கள்.

     எப்படி கொல்லப்படுகிறார்கள்

    எப்படி கொல்லப்படுகிறார்கள்

    ஜெயிலில் இருக்கும் பலர் விடுதலை செய்யப்பட்டு ஒரு வாரம் கழித்து என்கவுண்டர் செய்யப்படுகிறார்கள். இவர்களை அரசே தங்கள் சொந்த செலவில் பெயிலில் எடுக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது. இல்லை என்றால் சாலை ஓரத்தில் கடை வைத்து இருக்கும் நபர்கள் இரவோடு இரவாக கைது செய்யப்பட்டு அடுத்த நாளே கொலை செய்யப்படுகிறார்கள்.

    கொடுமை

    கொடுமை

    இவர்கள் சாதாரணமாக கொலை செய்யப்படுவதில்லை. என்கவுண்டர் செய்யப்படுவதற்கு முன் கொடுமைப்படுத்தப்பட்டு இருக்கிறார்கள். பலருக்கு நெஞ்சு எலும்பு வரை உடைந்து இருக்கிறது. சிலரின் கைகள் தீயில் பொசுக்கப்பட்டு இருக்கிறது. இன்னும் மோசமான சித்திரவதை செய்யப்பட்டு இருக்கிறது.

    போலி என்கவுண்டர்

    போலி என்கவுண்டர்

    இதில் எல்லாமே போலி என்கவுண்டராக இருக்க வாய்ப்பு இருக்கிறது. ஜெயிலில் இருக்கும் நபர்களை வெளியே எடுத்து, அவர்கள் ஜெயிலில் இருந்த போது நடந்த குற்றங்கள் அவர்கள் மீது சுமத்தப்பட்டு பின் கொலை செய்யப்படுகிறார்கள். 20 வருடம் ஜெயிலில் இருந்த நபர்கள் கூட இப்படி வெளியே எடுக்கப்பட்டு கொலை செய்யப்பட்டு இருக்கிறார்கள்.

    பகுதி

    பகுதி

    பெரும்பாலில் ஷாரான்பூர், ஷாம்லி, முசாபர்நகர் ஆகிய பகுதிகளில் உள்ள மக்களே இப்படி கைது செய்யப்படுகிறார்கள். முக்கியமாக பெயிலில் எடுக்க பணம் இல்லாத வீடுகளில் உள்ள ஆண்கள் கைது செய்யப்பட்டு இருக்கிறார்கள். ஏற்கனவே குற்றம் ஏதாவது செய்து இருந்தால் இன்னும் வசதி இருக்கிறது.

    குடும்பமே

    குடும்பமே

    முக்கியமாக இதில் குடும்பங்கள் மொத்தமாக குறிவைக்கப்படுகிறது. ஒரு வீட்டில் ஒரு ஆண் கொலை செய்யப்பட்ட சில நாட்களில் அடுத்தடுத்த கைது அதே வீட்டில் நடக்கிறது. இப்படி 60க்கும் அதிகமான வீட்டில் கைதுகள் நடந்து இருக்கிறது.

    அதிகம் யார்

    அதிகம் யார்

    இந்த கொலையில் 14ல் 13பேர் இஸ்லாமியர்கள் என்பது உறையவைக்கும் உண்மை. சமோசா விற்கும் நபர்கள் கூட தீவிரவாதிகள் என்று கைது செய்யப்பட்டு இருக்கிறார்கள். தினமும் கொலை செய்யப்படும் நபர்களின் 4ல் 3 பேர் இஸ்லாமியர்கள் என்று கணக்கெடுப்பில் தெரியவந்துள்ளது.

    English summary
    4 a day, 1,038 an year, UP tops in police encounters. 13 of 14 people killed in these fake encounters are Muslims. Mostly encounters took place in Shamli, Muzaffarnagar, Saharanpur and Baghpat parts of UP.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X