புதிய அமைச்சர்களில் 4 பேர் மீது கிரிமினல் வழக்குகள்.. 16 பேர் கோடீஸ்வரர்கள்.. இது குஜராத் நிலவரம்!
அகமதாபாத் : குஜராத் மாநிலத்தில் புதிதாக பொறுப்பேற்றுள்ள அமைச்சர்களில் 4 பேர் மீது கிரிமினல் வழக்குகள் உள்ளன. அமைச்சரவையில் இடம்பெற்றுள்ளவர்களில் ஒருவரைத் தவிர அத்தனை பேருமே கோடிஸ்வரர்கள் ஆவார்கள்.
குஜராத் சட்டசபை தேர்தலில் பாஜக அமோக வெற்றி பெற்று தொடர்ந்து 7-வது முறையாக ஆட்சி அமைத்துள்ளது. இதையடுத்து அங்கு பூபேந்திர படேல் மீண்டும் முதலமைச்சராகப் பதவி ஏற்றார்.
முதல்வர் பூபேந்தர் படேல் தலைமையில் குஜராத் அமைச்சரவை பதவி ஏற்பு விழா கடந்த 12ஆம் தேதி நடைபெற்றது. இதில் பிரதமர் மோடி, மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா, பாஜக தேசிய தலைவர் நட்டா மற்றும் பல்வேறு கட்சியை சேர்ந்த தலைவர்கள் கலந்து கொண்டனர்.

குஜராத் அமைச்சரவை
குஜராத் மாநில சட்டப் பேரவைத் தேர்தலில் பாஜக தொடர்ந்து ஏழாவது முறையாக வெற்றி பெற்றதைத் தொடர்ந்து, பூபேந்திர படேல் இரண்டாவது முறையாக குஜராத் முதல்வராகப் பதவியேற்றார். அவருடன் 16 அமைச்சர்கள் பதவி ஏற்றுக்கொண்டனர். அவர்களில் 8 பேர் கேபினட் அந்தஸ்து அமைச்சர்கள் ஆவார்கள். 2 பேர் தனிப்பொறுப்புடன் கூடிய ராஜாங்க அமைச்சர்கள், 6 பேர் ராஜாங்க அமைச்சர்கள் ஆவார்கள். அமைச்சரவையில் ஒரே ஒரு பெண்ணிற்கு மட்டுமே கேபினட் அந்தஸ்து கொண்ட அமைச்சர் பதவி வழங்கப்பட்டுள்ளது.

ஏ.டி.ஆர் அறிக்கை
குஜராத்தில் புதிதாக பதவி ஏற்றுள்ள முதலமைச்சர் பூபேந்திர படேல் மற்றும் 16 புதிய அமைச்சர்கள் பற்றி ஆராய்ந்து ஏ.டி.ஆர் என்று அழைக்கப்படுகிற ஜனநாயக சீர்திருத்தங்களுக்கான சங்கம் சில முக்கிய தகவல்களை வெளியிட்டுள்ளது. அதன்படி, பூபேந்திர படேல் உட்பட 17 பேர் கொண்ட குஜராத் அமைச்சரவையில், 7 ஓபிசி அமைச்சர்கள், நான்கு பட்டிதார் சமூகத்தைச் சேர்ந்த அமைச்சர்கள், பழங்குடி சமூகத்திலிருந்து 2 பேர், பட்டியல் சாதி, பிராமணர், ஜெயின் மற்றும் ராஜ்புத் சமூகங்களிலிருந்து தலா ஒருவர் அமைச்சர்களாகி உள்ளனர்.

4 அமைச்சர்கள் மீது
குஜராத்தின் புதிய அமைச்சர்களில் 4 அமைச்சர்கள் மீது கிரிமினல் வழக்குகள் நிலுவையில் உள்ளன. மீன் வளத்துறை ராஜாங்க அமைச்சர் பர்சோத்தம் சோலங்கி மீது இந்திய தண்டனைச்சட்டம் பிரிவு 420 மற்றும் 465-ன் கீழ் மோசடி வழக்கு உள்ளது. அமைச்சர்கள் ஹர்ஷ் சங்கவி, ருஷிகேஷ் படேல், ராகவ்ஜி படேல் ஆகியோர் மீது இந்திய தண்டனைச்சட்டம் பிரிவுகள் 188, 500-ன் கீழ் பொது ஒழுங்குக்கு கீழ்ப்படியாமை மற்றும் அவதூறு வழக்குகள் உள்ளன.

கிரிமினல் வழக்குகள்
குஜராத் மாநிலத்தில் புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்ட எம்.எல்.ஏக்களில் 40 பேர் மீது கிரிமினல் வழக்குகள் உள்ளன. கட்சி வாரியாக பார்த்தால், பாஜகவில் 26 பேர், காங்கிரஸ் கட்சியில் 9 பேர், ஆம் ஆத்மியில் 2 பேர், சுயேச்சைகளில் 2 பேர், சமாஜ்வாடி கட்சியின் ஒரு எம்.எல்.ஏ மீது இந்த வழக்குகள் உள்ளன. இவர்களில் 29 பேர் மீது கொலை முயற்சி, கற்பழிப்பு உள்ளிட்ட கொடிய வழக்குகள் இருக்கின்றன. இந்த 29 பேரில் 20 பேர் பாஜகவினர், 4 பேர் காங்கிரஸ் கட்சியினர், 2 பேர் ஆம் ஆத்மி கட்சியினர், 2 பேர் சுயேச்சைகள், ஒருவர் சமாஜ்வாடி கட்சியைச் சேர்ந்தவர் ஆவார். முந்தைய சட்டசபையில் 47 எம்.எல்.ஏ.க்கள் மீது கிரிமினல் வழக்குகள் இருந்தது குறிப்பிடத்தக்கது.

கோடீஸ்வர அமைச்சர்கள்
புதிய அமைச்சரவையில் இடம்பெற்றுள்ளவர்களில் முதலமைச்சர் பூபேந்திர படேல் உள்பட 16 பேர் கோடீசுவரர்கள் ஆவார்கள். புதிய அமைச்சர்களின் சராசரி சொத்து மதிப்பு ரூ.32.7 கோடி. முந்தைய குஜராத் அமைச்சரவைல் அமைச்சர்களின் சராசரி சொத்து மதிப்பு ரூ.3.95 கோடி என்பது குறிப்பிடத்தக்கது. கோடீஸ்வர அமைச்சர்களில் முதல் இடம் பிடித்திருப்பவர் பல்வந்த்சிங் ராஜ்புத். இவரது சொத்து மதிப்பு ரூ.372.65 கோடி. அமைச்சர்களில் மிகக்குறைந்த சொத்துகளை உடையவர் பாச்சுபாய் காபத் ஆவார். இவரது சொத்து மதிப்பு ரூ.92.85 லட்சம். அமைச்சர்களில் இவரது சொத்து மதிப்பு மட்டுமே 1 கோடிக்கும் குறைவு.

படிப்பறிவு
குஜராத் அமைச்சர்களில் 6 அமைச்சர்கள் 8-ஆம் வகுப்பு முதல் 12-ஆம் வகுப்பு வரை படித்தவர்கள். 8 அமைச்சர்கள் பட்டப்படிப்பு அல்லது பட்ட மேற்படிப்பு படித்தவர்கள். 3 அமைச்சர்கள் பட்டயப்படிப்பு படித்தவர்கள். முதலமைச்சர் பூபேந்திர படேலும் சிவில் என்ஜினீயரிங்கில் பட்டயப்படிப்பு படித்தவர்தான். 3 அமைச்சர்கள் 50 வயதுக்கு குறைவானவர்கள். ஹர்ஷ் சங்கவி (37) மிக இளைய அமைச்சர் ஆவார். கனுபாய் தேசாய்தான் மிக மூத்த மந்திரி. இவரது வயது 71.
-
அசைக்க முடியாத சாதனையைச் செய்த மோடி! 8,931 நாள் அரசு பதவி! உலக அளவில் உயரும் டிஜிட்டல் செல்வாக்கு! -
“போர் நடந்தாலும்.. எரிபொருள் கொள்முதலில் பாதிப்பு இருக்காது”.. நாடாளுமன்றத்தில் மோடி உறுதி! -
தங்கம்.. 'தரை' தட்டியது ஏன்? கூடை கூடையாக மார்க்கெட்டில் விற்ற அரபு நாடுகள்.. ஒரு ராட்சனின் வீழ்ச்சி -
கேஸ் சிலிண்டர் விலை மாறுது! ஏப்.1 முதல் புதிய விலை! இல்லத்தரசிகள் மாத பட்ஜெட்டில் என்ன தாக்கம்? -
டெல்லி தந்த கிரீன் சிக்னல்.. 4 வழியாக மாறும் தமிழ்நாட்டின் மூன்று முக்கிய சாலைகள்.. மெகா பிளான்! -
இமாச்சல் போல.. தமிழகத்தில் அரசு ஊழியர்களின் மாத சம்பளத்தை 30% குறைக்க வேண்டியது வரும்.. அன்புமணி -
1 சவரன் தங்க நகை வாங்க போறீங்களா? கடைக்காரர் போடும் கணக்கில் அதிக மாற்றமா? ஏமாறாமல் இருக்க பில் தேவை -
10 பைசா கூட வராது.. தங்கத்தை மொத்தமாக விற்கும் முதலீட்டாளர்கள்.. நெருங்கி வரும் பேரழிவு? -
அதை சொல்ல யாருக்கும் அருகதை இல்லை.. வீட்டிலும், ஆபீஸிலும் இதுதான் நடக்குது செல்வராகவன் ஆதங்கம் -
56 out of 234: விசிகவுக்கு "6+2!" திமுக கூட்டணியில் எந்தெந்த கட்சிகளுக்கு எத்தனை தொகுதிகள்? -
அதிமுக கூட்டணியில் பாமகவுக்கு 18, அமமுகவுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கீடு! -
கேஸ் மானியம் ₹300 வந்தாச்சா? வங்கிக்கு போகவே வேண்டாம்… வீட்டிலேயே 2 நிமிஷத்தில் தெரிஞ்சுக்கலாம்












Click it and Unblock the Notifications