For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

ஹே வாங்கடா.. இமைக்கும் நொடியில் டவலில் அலேக்காக பிடித்த இளைஞர்கள்.. ஒரு பூனையால் ஜாக்பாட்!

Google Oneindia Tamil News

டெய்ரா: 3ஆவது மாடியிலிருந்து விழுந்த பூனையை சிறிய காயமின்றி காப்பாற்றிய 4 பேருக்கு துபாய் நாட்டு அரசர் தலா ரூ 10 லட்சம் பரிசாக அளித்தார்.

துபாய் நாட்டில் டெய்ரா பகுதியில் அல் மராரில் ஒரு அடுக்குமாடிக் குடியிருப்பு உள்ளது. அந்த குடியிருப்பில் கேரளாவைச் சேர்ந்த பலர் வசித்து வருகிறார்கள்.

இந்த நிலையில் இவர்களில் சில பேர் பூனை வளர்க்கிறார்கள். இந்த பூனைகள் வீட்டிலிருந்து அவ்வப்போது வெளியேறி வீட்டின் சுவர்களில் ஏறி அங்குமிங்கும் சுற்றித் திரிவது வழக்கமான ஒன்று.

சேலம் ஆவின் பால் பண்ணையில் இனிப்பு இல்லாத பால்கோவா தயாரிப்பு.. சட்டசபையில் அமைச்சர் நாசர் தகவல்! சேலம் ஆவின் பால் பண்ணையில் இனிப்பு இல்லாத பால்கோவா தயாரிப்பு.. சட்டசபையில் அமைச்சர் நாசர் தகவல்!

3ஆவது மாடி

3ஆவது மாடி

சம்பவத்தினத்தன்று குடியிருப்பின் 3ஆவது மாடியின் பால்கனி பகுதியில் ஒரு பூனையானது சுற்றித் திரிந்தது. சுவரின் மீது ஏறிய அந்த பூனை திடீரென 3ஆவது மாடியிலிருந்து தவறி விழுந்தது. இதை கேரளாவை சேர்ந்த நசீர் முகமது பார்த்துவிட்டார்.

பூனை விழும் இடத்தில்

பூனை விழும் இடத்தில்

அவர் உடனே அங்குக் குடியிருந்த கோழிக்கோடு பகுதியைச் சேர்ந்த அப்துல் ரசீத், பாகிஸ்தானைச் சேர்ந்த மேலும் இருவரை தன்னுடன் அழைத்துக் கொண்டு அந்த பூனையை காப்பாற்ற முயற்சித்தார். இதற்காக தங்களிடம் இருந்த டவலை பூனை விழும் இடத்தில் வலை போல் விரித்தனர்.

மாடியிலிருந்து விழுந்த பூனை

மாடியிலிருந்து விழுந்த பூனை

இதையடுத்து மாடியிலிருந்து விழுந்த பூனை அதிர்ஷ்டவசமாக இவர்கள் விரித்த டவலில் விழுந்தது. இதனால் பூனைக்கு அடியேதும் படாமல் உயிர் பிழைத்தது. இந்த காட்சிகளை அப்பகுதியில் வசித்த சிலர் வீடியோவாக பதிவு செய்து அதை செல்போன் மூலம் சமூகவலைதளங்களில் வைரலாக்கினர்.

ரூ 10 லட்சம் சன்மானம்

துபாயின் துணை அதிபர் ஷேக் முகமது பின் ரஷீத் இந்த வீடியோவை பார்வையிட்டார். அவர் பூனையை மீட்ட கேரளத்தினர் இருவரையும் பாகிஸ்தான் நாட்டினரையும் பாராட்டினார். மேலும் தனது உதவியாளர் மூலம் பூனையை மீட்ட 4 பேருக்கும் தலா ரூ 10 லட்சம் பரிசை வழங்கினார்.

English summary
4 heroes get 50 thousand dhinar each from Dubai King for rescuing cat.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X