கட்டுப்பாட்டை மீறி ரயில்வே மேம்பாலத்திலிருந்து கவிழ்ந்த பேருந்து! 4 பேர் பலி.. ராஜஸ்தானில் சோகம்
ஜெய்ப்பூர்: ராஜஸ்தான் மாநிலம் தௌசா மாவட்டத்தில் ரயில்வே மேம்பாலத்திலிருந்து பேருந்து கவிழ்ந்ததால் ஏற்பட்ட விபத்தில் 4 பேர் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர். அதேபோல 28 பேர் படுகாயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
தௌசா மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு அருகே உள்ள மேம்பாலத்தில் பேருந்து சென்றுக்கொண்டிருந்தபோது திடீரென கட்டுப்பாட்டை இழந்து தண்டவாளத்தில் விழுந்துள்ளது. விபத்து அதிகாலையில் நிகழ்ந்ததால் மீட்பு பணியில் தாமதம் ஏற்பட்டிருக்கிறது.

இப்படியொரு விபத்து ஏற்பட்டிருக்கிறது என்பதே விபத்து நடந்து சிறிது நேரத்திற்கு பின்னர்தான் தெரிய வந்ததுள்ளது. இதனையடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்த காவல்துறையினர் காயமடைந்தோரை மீட்டு மருத்துவமனையில் அனுமதித்தனர்.
விபத்து குறித்து தௌசா கூடுதல் ஆட்சியர் ராஜ்குமார் கஸ்வா கூறுகையில், "காயமடைந்தோருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. விபத்தில் 4 பேர் பலியாகியுள்ளது சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. அதேபோல விபத்து குறித்து தீவிரமாக விசாரிக்க உத்தரவிடப்பட்டிருக்கிறது" என கூறியுள்ளார்.
இச்சம்பவம் ராஜஸ்தானில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. பேருந்து தண்டவாளத்தில் கவிழ்ந்த போது அந்த பக்கமாக எந்த ரயிலும் வராததால் பெரும் விபத்து தவிர்க்கப்பட்டுள்ளதாகவும் காவல்துறையினர் கூறியுள்ளனர்.
-
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார்












Click it and Unblock the Notifications