Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

அசிங்கமா போச்சு குமாரு.. காந்திக்கு பதில் நடிகரின் படத்தை அச்சிட்டு.. சிக்கிய கள்ளநோட்டு கும்பல்

Subscribe to Oneindia Tamil

காந்திநகர்: குஜராத் மாநிலத்தில் ரூபாய் நோட்டில் மகாத்மா காந்தியின் படத்திற்கு பதில் திரைப்பட நடிகரான அனுபம் கேரின் புகைப்படத்தை அச்சடித்த கள்ள நோட்டு தயாரிக்கும் கும்பலை காவல் துறையினர் கைது செய்துள்ளனர். இதுதொடர்பான நடிகர் அனுபம் கேரின் இன்ஸ்டாகிராம் பதிவு சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

நம் நாட்டில் கள்ள நோட்டுகள் அச்சடித்து பிடிபடும் சம்பவம் வழக்கமானது தான். பொதுவாக கலர் பிரிண்டரைப் பயன்படுத்தி கள்ள நோட்டு அச்சடிக்கும் கும்பல் போலீஸில் வசமாக சிக்கும் சம்பவங்கள்தான் அதிக அளவில் நடக்கும். சீரியல் நம்பர், நோட்டின் தரம் போன்றவை மூலம் இந்த கள்ள நோட்டுகள் கண்டறியப்படும் சம்பவங்களை கேள்விப்பட்டிருப்போம்.

Gujarat Fake currency Mahathma Gandhi

ஆனால், குஜராத் மாநிலத்தில் தற்போது கள்ளநோட்டு கும்பல் ஒன்று சிக்கியுள்ளது வேற ரகம். கள்ள நோட்டில் மகாத்மா காந்திக்கு பதிலாக பாலிவுட் நடிகர் அனுபம் கேர் புகைப்படத்தை அச்சடித்து வசமாக சிக்கியுள்ளது ஒரு கும்பல். காந்தி மட்டுமா என்றால் இல்லை ரிசர்வ் பேங்கின் பெயரையே மாற்றி அச்சடித்துள்ளனர். இச்சம்பவம் குறித்து விரிவாக தெரிந்து கொள்ளலாம் வாங்க.

குஜராத் மாநிலம், அகமதாபாத்தில் தான் இச்சம்பவம் அரங்கேறியுள்ளது. வியாபாரி ஒருவர் இரண்டு நபர்களால் தான் ஏமாற்றப்பட்டதாக தனது சமூக சமூக வலைதளப் பக்கத்தில் இச்சம்பவத்தைப் பகிர்ந்துள்ளார். குஜராத் மாநிலம், சூரத் நகரில் ஆன்லைன் ஆடை விற்பனை நிலையம் ஒன்று செயல்பட்டு வந்துள்ளது. இந்த கடையில் ஆடை விற்பனை செய்வதுபோல கள்ள நோட்டுகளை அச்சிட்டு வந்துள்ளனர்.

இதுகுறித்து, சூரத் சிறப்புக் காவல் படையினருக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது. இதையடுத்து, சம்பவ இடத்துக்குச் சென்ற போலீஸார் அங்கிருந்த 3 பேரைக் கைது செய்தனர். மேலும், அவர்கள் வைத்திருந்த ரூ. 1.20 லட்சம் மதிப்பிலான உயர் ரக கள்ள நோட்டுகளைப் பறிமுதல் செய்தனர். அதைத்தொடர்ந்து, இச்சம்பவம் தொடர்பாக நான்காவது நபரையும் போலீஸார் கைது செய்துள்ளனர்.

அந்தப் பணக் கட்டுகளில் மகாத்மா காந்திக்கு பதிலாக பாலிவுட் நடிகரான அனுபம் கேர் புகைப்படத்தை போலீஸார் கண்டுபிடித்துள்ளனர். இதைத்தொடர்ந்து, அச்சிடப்பட்டிருந்த மொத்த கள்ள நோட்டுகளையும் போலீஸார் பறிமுதல் செய்தனர். மேலும், அந்தப் பணத்தில் இந்திய ரிசர்வ் வங்கிக்கு பதிலாக இந்திய ரிசோல் வங்கி என்று அச்சிடப்பட்டிருந்தது.

ஃபார்சி என்ற ஹிந்தி வெப் சீரீஸைப் பார்த்து கள்ளநோட்டுகளை அச்சடித்ததாக குற்றவாளிகள் தெரிவித்துள்ளனர். இதுதொடர்பான செய்தியை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பாலிவுட் நடிகர் அனுபம் கேர் பதிவிட்டுள்ளார். அந்தப் பதிவில், ஐநூறு ரூபாய் நோட்டில் மகாத்மா காந்திக்குப் பதிலாக என்னுடைய புகைப்படமா?.. என்னவெல்லாம் நடக்கிறது பாருங்கள்.. என்று பதிவிட்டுள்ளார்.

இச்சம்பவம் சமூக வலைதளங்களில் தற்போது வைரலாகி வருகிறது. நமக்கு காந்தியும் தெரியல, ரிசர்வ் பேங்குக்கு ஸ்பெல்லிங்கும் தெரியல.. ஒரே அசிங்கமா போச்சு குமாரு என்பது போன்ற பல கமெண்ட்டுகளை நெட்டிசன்கள் பதிவிட்டு வருவது குபீர் சிரிப்புக்குள்ளாக்கி உள்ளது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+