அமித்ஷா டூ ஜெய்சங்கர்.. குஜராத்திலிருந்து கேபினேட் அமைச்சர்களான 4 எம்பிக்கள்! லிஸ்ட் இதுதான்
காந்திநகர்: லோக்சபா தேர்தலில் என்டிஏ கூட்டணி பெரும்பாண்மை பெற்றிருக்கும் நிலையில், மூன்றாவது முறையாக பிரதமராக நரேந்திர மோடி இன்று பதவியேற்றார். இந்நிலையில், குஜராத்திலிருந்து 4 எம்பிக்கள் மத்திய அமைச்சராக பதவியேற்றிருக்கின்றனர்.
நடந்து முடிந்த லோக்சபா தேர்தலில் பாஜகவுக்கு தனிப்பெரும்பான்மை கிடைக்கவில்லை. இருப்பினும், பாஜக தலைமை தாங்கும் என்டிஏ கூட்டணிக்கு பெரும்பான்மை கிடைத்திருக்கிறது. எனவே, ஆதரவு எம்பிக்களின் பட்டியலை கொடுத்து ஆட்சியமைக்க நரேந்திர மோடி, குடியரசுத் தலைவர் திரௌபதி முர்முவிடம் உரிமை கோரினார். குடியரசுத் தலைவரும் ஆட்சியமைக்க அழைப்பு விடுத்துள்ள நிலையில், இன்று மாலை நரேந்திர மோடி மீண்டும் பிரதமராக பதவியேற்கிறார்.

நேருவுக்கு பின்னர் தொடர்ந்து மூன்றாவது முறையாக பிரதமராகும் தலைவர் என்கிற பெருமையுடன் மோடி பதவியேற்கிறார். அதேபோல 30 எம்பிக்கள் மத்திய அமைச்சர்களாக இன்று தேர்வு செய்யப்படுகின்றனர். இதில் குஜராத் மாநிலத்திலிருந்து 4 பேர் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.
அமித்ஷா: மோடியின் 2.O அரசாங்கத்தில் மத்திய உள்துறை அமைச்சராக அமித்ஷா இருந்திருக்கிறார். இந்த லோக்சபா தேர்தலில் காந்த நகர் தொகுதியில் போட்டியிட்ட அவர், காங்கிரஸ் வேட்பாளரை 10 லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் தோற்கடித்துள்ளார். சிஏஏ தொடங்கி பல முக்கிய மசோதக்கள் நிறைவேற்றப்பட்ட நிலையில், இது தொடர்பாக கடுமையான விமர்சனங்களை அமித்ஷா சந்தித்திருந்தார்.
சமீபத்தில் தேர்தல் ரிசல்ட்டுக்கு முன்னதாக பங்குச் சந்தைகளில் முதலீடு செய்யும்படி தனியார் செய்தி ஊடகத்திற்கு வழங்கிய நேர்காணலில் அவர் கூறியிருந்தது பெரும் பஞ்சாயத்தை ஏற்படுத்தியது. ரிசல்ட்டுக்கு பிறகு பங்கு சந்தை சரிந்ததால் ரூ.30 லட்சம் கோடி வரை முதலீட்டாளர்கள் இழந்தார்கள் என்று கூறி, அமித்ஷா மீது விசாரணை நடத்தப்பட வேண்டும் என்று ராகுல் காந்தி வலியுறுத்தியிருந்தார். ஆனால் இந்த விமர்சனங்கள், குற்றச்சாட்டுகளை கடந்து அமித்ஷா அரசியல் சாணக்கியராக திகழ்ந்து வருகிறார்.
ஜெய்சங்கர்: மோடியின் 2.O அரசாங்கத்தில் மத்திய வெளியுறவுத்துறை அமைச்சராக ஜெய்சங்கர் இருந்திருக்கிறார். இந்த லோக்சபா தேர்தலில் இவர் போட்டியிடவில்லை. ஆனால் ராஜ்யசபா உறுப்பினர் என்கிற முறையில் அவர் இன்று மத்திய அமைச்சராக மீண்டும் பதவியேற்றிருக்கிறார். குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு அவருக்கு பதவி பிரமாணம் செய்து வைத்திருக்கிறார்.
கடந்த ஆட்சியில் சீனா விவகாரத்தில் ஜெய்சங்கர் மீது ஏராளமான குற்றச்சாட்டுகள் குவிந்தன. மட்டுமல்லாது இலங்கையில் சீனாவின் ஆய்வு கப்பல் நிறுத்தியது, மாலத்தீவிலிருந்து இந்திய ராணுவ வீரர்கள் வெளியேற்றப்பட்டது போன்ற விவகாரங்களிலும் ஜெய்சங்கர் மீது விமர்சனங்கள் எழுந்தன. ஆனால், உக்ரைன் போரின் போது அங்கிருந்த இந்தியர்களை மீட்ட விவகாரத்தில் இவருடைய பணி சிறப்பாக இருந்ததாக பாஜக கூறியுள்ளது.
மன்சுக் மாண்டவியா: மோடியின் 2.O அரசாங்கத்தில் மத்திய சுகாதாரத்தறை அமைச்சராக மன்சுக் மாண்டவியா இருந்திருக்கிறார். இந்த லோக்சபா தேர்தலில் குஜராத்தின் போர்பந்தர் தொகுதியில் போட்டியிட்ட அவர், காங்கிரஸ் வேட்பாளரை 3 லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் தோற்கடித்துள்ளார். கடந்த ஆட்சியின்போது, சுகாதாரத்துறையின் லோகோவை மாற்றியது, கேரளா உள்ளிட்ட மாநிலங்களுக்கு துறை ரீதியாக போதுமான நிதியை ஒதுக்காதது போன்ற குற்றச்சாட்டுகளை எதிர்கொண்டிருந்தார்.
மட்டுமல்லாது மருத்தவ துறையில் உள்ள பலவீனத்தை அகற்றி, துறையை பலப்படுத்த வேண்டும் என்றும் விமர்சனங்கள் எழுந்திருக்கின்றன. இந்நிலையில் இன்று மீண்டும் மத்திய அமைச்சராக பதவியேற்றிருக்கிறார். இவருக்கு குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு பதவி பிரமாணம் செய்து வைத்திருக்கிறார்.
சி.ஆர்பாட்டீல்: இவர் மகாராஷ்டிராவை சேர்ந்தவராக இருந்தாலும், குஜராத் மக்கள் தங்கள் அரசியல் தலைவராக இவரை அங்கீகரித்துக்கொண்டனர். கடந்த மூன்று முறை இவர் குஜராத்தின் நவ்சாரி தொகுதியில் நின்று லோக்சபாவுக்கு தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கிறார். இந்நிலையில் நான்காவது முறையாக சமீபத்தில் நடந்த தேர்தலில் தேர்தவாகியுள்ளார். இந்த முறை தன்னை எதிர்த்து நின்ற காங்கிரஸ் வேட்பாளரை 7 லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் தோற்கடித்துள்ளார்.
எனவே இந்த முறை இவருக்கு மத்திய அமைச்சரவையில் இடம் கொடுக்கப்பட்டிருக்கிறது. இவருக்கு குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு பதவி பிரமாணம் செய்தி வைத்திருக்கிறார்.
-
"கடிதத்தை வெளியிட்டதிலேயே குட்டு அம்பலமாகிவிட்டது".. நிர்மலா சீதாராமனை விமர்சித்த முதல்வர் ஸ்டாலின் -
ஒடிசாவில் அசிங்கப்படுத்திவிட்டு.. தமிழ்நாட்டில் வாழை இலை விருந்து கேட்குதா? பாஜகவிற்கு கேள்வி! -
Delimitation: நீதிமன்றத்திற்கு கூட போக முடியாது! தமிழ்நாட்டுக்கு காத்திருக்கும் பெரிய ஆபத்து! -
வாழ வழி கேட்டால்.. இறுதி சடங்கு செய்ய ரூ.10 ஆயிரமாம்! பாஜக வாக்குறுதியால் ஷாக்! -
திருப்பரங்குன்றத்தில் தீபம் ஏற்றப்படும், 3 சிலிண்டர்கள் இலவசம்.. தேர்தல் அறிக்கையை வெளியிட்ட பாஜக! -
கொடநாட்டில் கைகட்டி நின்றது மறந்துடுச்சா விஜய்.. குறும்படம் காட்டிய சரத்குமார் -
ஜெயித்தே ஆகணும்.. இளம் வாக்காளர்களை விடாதீர்கள்.. பாஜக பூத் கமிட்டிக்கு பிரதமர் மோடி போட்ட உத்தரவு -
Vanathi Srinivasan: முகத்தில் சோகம்.. வானதி சீனிவாசன் திடீர் வீடியோ.. மருத்துவமனை பெட்டில் இருந்தபடி உருக்கம் -
சுந்தர் சி வேண்டாம்னு ஏன் சொன்னாருனு எனக்கு அப்போ புரியலை, இப்போ புரியுது! அண்ணாமலை கலகல! -
"அம்மா குணமாகி வரணும்.. NDA வேட்பாளர்கள் ஜெயிக்கணும்" கோவையில் வானதி சீனிவாசன் இளைய மகன் வழிபாடு! -
வானதி சீனிவாசனுக்காக களத்தில் இறங்கிய கஸ்தூரி.. கோவை வடக்கை குறிவைத்து தீவிர பிரசாரம் -
சாத்தூரில் பாஜக ஜெயித்ததே இல்லை.. நயினாருக்கு காத்திருக்கும் சவால்! அதிக முறை வென்றது யாரு தெரியுமா?












Click it and Unblock the Notifications