பள்ளியில் சக மாணவியிடம் சில்மிஷம்..டெல்லியை சேர்ந்த நான்கு வயது மாணவன் மீது வன்புணர்வு வழக்கு
டெல்லியில் படிக்கும் நான்கு வயது மாணவன் ஒருவன் மீது பாலியல் குற்றச்சாட்டு செய்யப்பட்டு இருக்கிறது.
டெல்லி: டெல்லியில் படிக்கும் நான்கு வயது மாணவன் ஒருவன் பாலியல் குற்றச்சாட்டு காரணமாக கைது செய்யப்பட இருக்கிறான். பள்ளியில் இருக்கும் சக வயது மாணவி ஒருவரை இந்த சிறுவன் பலமுறை பாலியல் தொல்லைக்கு உட்படுத்தி இருக்கிறான்.
அந்த மாணவி இது குறித்து போலீசிடமும், பள்ளி நிர்வாகத்திடமும் வாக்குமூலம் அளித்து இருக்கிறார். அந்த சிறுவன் எப்போது வேண்டுமானாலும் கைது செய்யப்படலாம் என்று கூறப்படுகிறது.
இந்த சம்பவம் அங்கு பெரும் பரப்பை ஏற்படுத்தி உள்ளது. டெல்லியில் உள்ள மற்றொரு பள்ளியில் இதே போல் பள்ளி மாணவன் ஒருவன் கொலை செய்யப்பட்ட வழக்கில் சக பள்ளி மாணவன் கைது செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.

மருத்துவரிடம் சோதனை
டெல்லியில் முக்கிய பகுதியான 'துவாரகா' என்று பகுதியில் இருக்கும் புகழ்பெற்ற பள்ளி ஒன்றில் இந்த சம்பவம் நடந்து இருக்கிறது. அந்த பள்ளியில் படித்து வந்து நான்கு வயது மாணவி ஒருவர் கடந்த சில நாட்களாக தீராத உடல் வலியால் கஷ்டப்பட்டு வந்து இருக்கிறார். பள்ளிக்கு செல்ல மாட்டேன் என்றும் ஆடம்பிடித்து இருக்கிறார். இதையடுத்து அந்த மாணவியை டாக்டரிடம் அழைத்து சென்று இருக்கின்றனர். டாக்டரை அந்த பெண்ணை யாரோ பாலியல் ரீதியாக துன்புறுத்தி இருப்பதாக கூறியிருக்கிறார்.

சக மாணவன் செய்த கொடூரம்
நேற்று பள்ளியில் இருந்து அழுது கொண்டே வந்த அந்த மாணவி அம்மாவிடம் சில உண்மைகளை சொல்லி இருக்கிறார். அதில், பள்ளியில் இருக்கும் சகவயது மாணவன் ஒருவன் தன்னை பாலியல் ரீதியாக துன்புறுத்தியதாக கூறியிருக்கிறார். மேலும் பென்சிலை வைத்து தன்னுடைய உடல் பாகங்களில் கொடுமை படுத்தியதாகவும் சொல்லி இருக்கிறார். மேலும் அந்த சம்பவம் நடந்த போது வேறு யாரும் அருகில் இல்லை என்றும் கூறியிருக்கிறார்.

மூடி மறைத்த நிர்வாகம்
மேலும் ஆடைகளை களைந்து அந்த பையன் செய்த செயல்கள் அனைத்தையும் ஒன்றுவிடாமல் அம்மாவிடம் வாக்குமூலமாக அந்த மாணவி அளித்துள்ளார். இதையடுத்து அந்த மாணவியின் பெற்றோர் அந்த பள்ளி நிர்வாகிகளிடம் இது குறித்து புகார் அளித்து இருக்கின்றனர். ஆனால் இந்த புகாரில் எந்த விதமான நடவடிக்கையும் இல்லாத காரணத்தால் அவர்கள் போலீசில் புகார் அளித்தனர்.

மாணவன் மீது வழக்கு
தற்போது போலீசார் அந்த மாணவன் மீது பாலியல் வன்புணர்வு வழக்கு பதிவு செய்து இருக்கின்றனர். ஆனாலும் அந்த மாணவன் இன்னும் கைது செய்யப்படவில்லை. மேலும் இதுகுறித்து டெல்லி போலீஸ் தீபேந்திர பதாக் கூறுகையில் ''குழந்தைகளுக்கு எதிரான பாலியல் வழக்குகளை போலீஸ் மிகவும் கவனமாக கண்காணித்து வருகிறது. ஆனால் இந்த வழக்கில் குற்றவாளியும் சிறுவன் என்பதால் மிகவும் கவனமாக வழக்கை நடத்த இருக்கிறோம்'' என்று குறிப்பிட்டார்.
-
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்!












Click it and Unblock the Notifications