ஓகி புயலில் சிக்கி தமிழக மீனவர்கள் 400 பேர் உட்பட 661 பேரை காணவில்லை- மத்திய அரசு
ஓகி புயலில் சிக்கி 400 தமிழக மீனவர்களைக் காணவில்லை என மத்திய அரசு அறிவித்துள்ளது.
Subscribe to Oneindia Tamil
டெல்லி: ஓகி புயலில் சிக்கிய தமிழக மீனவர்கள் 400 பேர் உட்பட 661 பேரை காணவில்லை என மத்திய அரசு அறிவித்துள்ளது.

இது தொடர்பாக பாதுகாப்புத்துறை அமைச்சகம் வெளியிட்ட அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:
ஓகி புயலைத் தொடர்ந்து கடற்படை, கடலோர காவல்படை, விமானப் படை இணைந்து டிசம்பர் 20-ந் தேதி வரை மொத்தம் 821 பேரை மீட்டுள்ளன. வர்த்தக கப்பல்கள் உள்ளிட்டவைகள் மூலமாக 24 பேர் காப்பாற்றப்பட்டுள்ளனர்.
தமிழகத்தில் 453; கேரளாவில் 362; லட்சத்தீவில் 30 பேர் காப்பாற்றப்பட்டுள்ளனர். இதேபோல் மாநில அரசு தெரிவித்துள்ள தகவல்களின் படி டிசம்பர் 15-ந் தேதி வரை
தமிழகத்தில் 400; ,கேரளாவில் 261 பேர் என மொத்தம் 661 மீனவர்களை காணவில்லை.
இவ்வாறு பாதுகாப்பு அமைச்சக செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications