"விபச்சாரம்".. 40,000 பெண்களா? ஐய்யோ, மனித கடத்தல்? அதுவும் மோடியின் குஜராத்தில்.. பகீர் என்சிஆர்பி
காந்திநகர்: கடந்த 5 வருடங்களில் மட்டும், 40,000 க்கும் மேற்பட்ட பெண்கள் திடீரென மாயமாகி விட்டார்களாம். இப்படி காணாமல் போகும் பெண்கள், இளம்வயதிலேயே கடத்தப்பட்டு விபச்சாரத்திற்கு விற்கப்படுவதாகவும் பகீர் தகவல் வெளியாகி உள்ளது. மாயமாகிபோன 40 ஆயிரம் பெண்களும், பிரதமர் மோடியின் சொந்த மாநிலமான குஜராத்தை சேர்ந்தவர்கள் என்றும் அதிர்ச்சி செய்தி வெளியாகியிருக்கிறது.
'தி கேரளா ஸ்டோரி' படத்தின் பரபரப்பு இன்னமும் குறையாமல் உள்ளது.. சலசலப்பும், சர்ச்சைகளும் தினம் தினம் வெடித்து கிளம்பி கொண்டிருக்கின்றன..

கேரளாவைச் சேர்ந்த 32,000 பெண்கள் இஸ்லாம் மதத்துக்கு கட்டாய மதமாற்றம் செய்யப்பட்டு ஐ.எஸ்.ஐ.எஸ் அமைப்பில் இணைக்கப்படுவதாகவும் அந்த படத்தில் காட்சிகள் இடம் பெற்றிருந்தது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி கொண்டிருக்கிறது..
படம் ரிலீஸ்: படம் ரிலீஸ் ஆகி 3 நாட்களே ஆகியிருப்பதால், அந்த சலசலப்பே இன்னும் குறையவில்லை.. அதற்குள், குஜராத் மாநிலத்தில் கடந்த 5 ஆண்டுகளில் 40,000-க்கும் மேற்பட்ட பெண்கள் காணாமல் போயுள்ளனர் என்று தேசிய குற்ற ஆவண காப்பகம் அதிர்ச்சி தகவலை வெளியிட்டுள்ளது.

என்சிஆர்பி என்று சொல்லப்படும் தேசிய குற்ற ஆவணக் காப்பகம் (NCRB) வெளியிட்ட தரவுகளின்படி, 2016-ல் 7,105 பெண்களும், 2017-ல் 7,712 பெண்களும், 2018 ம் ஆண்டில் 9,246 பெண்களும், 2019-ல் 9,268 பெண்களும் காணாமல் போயுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 2020ம் ஆண்டில் 8,290 பெண்கள் காணாமல் போயுள்ளனர் என்றும், மொத்தம் 41,621 பெண்கள் காணாமல் போயுள்ளதாக என்சிஆர்பி வெளியிட்டுள்ள தரவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
விபச்சாரம்: இதுபற்றி ஓய்வு பெற்ற அதிகாரிகள் சொன்னதாவது: "காணாமல் போன வழக்கை பெரிதாக எடுத்துக் கொள்ளவில்லை. வழக்குகள் கொலை வழக்குகளைப் போலவே தீவிரமானவை ஆகும். ஒரு குழந்தை காணாமல் போனால், பெற்றோர்கள் தங்கள் குழந்தைக்காக வருடக்கணக்கில் காத்திருக்கிறார்கள். போலீஸ் அமைப்பு இதுபோன்ற வழக்குகளை தள்ளுபடி செய்வதை வாடிக்கையாக கொண்டுள்ளது.
காணாமல் போன சிறுமிகள் மற்றும் பெண்களின் புகார்களில் பெரும்பாலானவை மனித கடத்தல் தொடர்பானவை ஆகும். பெண்கள் மாயமான வழக்கு, கொலை வழக்கிற்கு சமமானது. ஆனால் இந்த விஷயத்தில் போலீசார் போதுமான அக்கறை காட்டுவதில்லை. மாயமாகும் பெண்களில் பலரும் பாலியல் தொழிலுக்காக வெளிமாநிலங்களுக்கு விற்கப்படுகின்றனர். சிறுமிகள் கொத்தடிமைகளைாக விற்கப்படுகின்றனர். இதுபோன்ற ஏராளமான வழக்குகள் தீர்க்கப்படாமல் உள்ளன" என்கின்றனர்.
என்ன காரணம்: இதை பற்றி காங்கிரஸ் செய்தித்தொடர்பாளர் ஹிரேன் பேங்கர் சொல்லும்போது, "கேரளா பெண்களை பற்றி பாஜக தலைவர்கள் விமர்சிக்கிறார்கள். ஆனால், நாட்டின் பிரதமர் மற்றும் உள்துறை அமைச்சரின் சொந்த மாநிலமான குஜராத்தில் 40,000 க்கும் மேற்பட்ட பெண்கள் மாயமாகியுள்ளனர்" என்று பரபரப்பு குற்றச்சாட்டை வைத்துள்ளார்.
-
அசைக்க முடியாத சாதனையைச் செய்த மோடி! 8,931 நாள் அரசு பதவி! உலக அளவில் உயரும் டிஜிட்டல் செல்வாக்கு! -
“போர் நடந்தாலும்.. எரிபொருள் கொள்முதலில் பாதிப்பு இருக்காது”.. நாடாளுமன்றத்தில் மோடி உறுதி! -
தங்கம்.. 'தரை' தட்டியது ஏன்? கூடை கூடையாக மார்க்கெட்டில் விற்ற அரபு நாடுகள்.. ஒரு ராட்சனின் வீழ்ச்சி -
கேஸ் சிலிண்டர் விலை மாறுது! ஏப்.1 முதல் புதிய விலை! இல்லத்தரசிகள் மாத பட்ஜெட்டில் என்ன தாக்கம்? -
டெல்லி தந்த கிரீன் சிக்னல்.. 4 வழியாக மாறும் தமிழ்நாட்டின் மூன்று முக்கிய சாலைகள்.. மெகா பிளான்! -
இமாச்சல் போல.. தமிழகத்தில் அரசு ஊழியர்களின் மாத சம்பளத்தை 30% குறைக்க வேண்டியது வரும்.. அன்புமணி -
1 சவரன் தங்க நகை வாங்க போறீங்களா? கடைக்காரர் போடும் கணக்கில் அதிக மாற்றமா? ஏமாறாமல் இருக்க பில் தேவை -
10 பைசா கூட வராது.. தங்கத்தை மொத்தமாக விற்கும் முதலீட்டாளர்கள்.. நெருங்கி வரும் பேரழிவு? -
அதை சொல்ல யாருக்கும் அருகதை இல்லை.. வீட்டிலும், ஆபீஸிலும் இதுதான் நடக்குது செல்வராகவன் ஆதங்கம் -
56 out of 234: விசிகவுக்கு "6+2!" திமுக கூட்டணியில் எந்தெந்த கட்சிகளுக்கு எத்தனை தொகுதிகள்? -
அதிமுக கூட்டணியில் பாமகவுக்கு 18, அமமுகவுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கீடு! -
கேஸ் மானியம் ₹300 வந்தாச்சா? வங்கிக்கு போகவே வேண்டாம்… வீட்டிலேயே 2 நிமிஷத்தில் தெரிஞ்சுக்கலாம்












Click it and Unblock the Notifications