பாதி பஸ்ஸையே காணோமே.. பாறையில் மோதி உருக்குலைந்த பேருந்து.. குஜராத்தில் பக்தர்கள் 46 பேர் படுகாயம்!
அகமதாபாத்: குஜராத் மாநிலத்தில் உள்ள கோவில் நகரமான அம்பாஜி அருகே சாலையோரம் இருந்த பாறையில் தனியார் சொகுசு பேருந்து மோதியதில் பேருந்தின் மேற்பகுதி முற்றிலுமாக சிதைந்தது. பேருந்தில் பயணித்த 46 பக்தர்கள் காயமடைந்துள்ளனர்.
குஜராத் மாநிலம் பனஸ்கந்தா மாவட்டத்தில் உள்ள கோவில் நகரமான அம்பாஜியில் ஒவ்வொரு ஆண்டும் பதர்வி பூனம் திருவிழா வெகுவிமரிசையாக நடத்தப்படுகிறது. இந்த நேரத்தில் குஜராத் மற்றும் வெளிமாநிலங்களில் இருந்து 15 லட்சத்திற்கும் அதிகமான பக்தர்கள் வருகை தருகின்றனர்.

இந்நிலையில், இன்று மலைப்பகுதியில் உள்ள கோவிலில் வழிபாடு செய்துவிட்டு பேருந்தில் திரும்பிக் கொண்டிருந்தபோது விபத்து ஏற்பட்டதில் 46 பயணிகள் காயமடைந்துள்ளனர். இந்த விபத்தில் பேருந்தின் மேற்பகுதி முழுமையாக சேதமடைந்துள்ளது.
கேடா மாவட்டத்தில் உள்ள கஞ்சாரி கிராமத்தில் இருந்து 46 பக்தர்களை ஏற்றிச் சென்ற தனியார் சொகுசுப் பேருந்து, மலைப்பாங்கான சரிவில் வந்து கொண்டிருந்தபோது, பேருந்து டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்ததால் விபத்துக்குள்ளானது.

இந்தப் பேருந்து சாலையோரம் இருந்த பாறையில் மோதி விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் பேருந்தின் மேற்கூரை மொத்தமாக சிதைந்துள்ளது. இந்த கோர விபத்தில் பேருந்தில் பயணித்த 46 பயணிகள் காயமடைந்துள்ளனர். பத்துக்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்துள்ளனர்.
#WATCH | Gujarat: A bus going from Ambaji to Anand met with an accident near Chikhla. More details awaited pic.twitter.com/VSgrqJHXbo
— ANI (@ANI) September 24, 2023
காயமடைந்த பயணிகளில் 18 பேர் மாவட்டத் தலைமையகமான பலன்பூரில் உள்ள சிவில் மருத்துவமனைக்கு மாற்றப்பட்டுள்ளனர். மீதமுள்ளவர்கள் அம்பாஜி நகரில் உள்ள அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதாக உள்ளூர் காவல் ஆய்வாளர் தவால் படேல் தெரிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications