அருணாசலபிரதேசத்தில் நிலநடுக்கம்- 5.1 ரிக்டெர் ஆக பதிவு
அருணாசலபிரதேச மாநிலத்தில் 5.1 ரிக்டெர் அளவு நிலநடுக்கம் பதிவாகியுள்ளது.
Subscribe to Oneindia Tamil
இடாநகர்: வடகிழக்கு மாநிலமான அருணாச்சல பிரதேசத்தில் இந்திய சீன எல்லையில் இன்று காலையில் நிலநடுக்கம் உணரப்பட்டது.
அலாங் பகுதியில் இருந்து 198 கிலோ மீட்டர் பகுதியில் ஏற்பட்ட இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவு கோளில் 5.1 ஆக பதிவானது.

காலை 6 மணியளவில் ஏற்பட்ட நிலநடுக்கத்தால் வீடுகள் லேசாக அதிர்ந்தது. இதனால், மக்கள் பீதியடைந்தனர். நிலநடுக்கத்தால் ஏற்பட்ட சேதம் குறித்து தற்போது வரை எந்த தகவலும் இல்லை.
இதனிடையே அதிகாலை 4 மணிக்கு சீனா எல்லையில் திபெத் பகுதியில் 6.3 ரிக்டெர் அளவிற்கு நிலநடுக்கம் பதிவாகியுள்ளது.












Click it and Unblock the Notifications