கங்கப்பாவின் கள்ளக்காதல்.. இடையில் வந்த ரோகிணி.. பாதியில் கட் ஆனதால் கோபம்.. போட்டுத் தள்ளிய கல்பனா!
பெலகாவி: கர்ப்பிணி உள்பட 2 பெண்கள் கொலை செய்யப்பட்ட வழக்கில் ஒரு பெண் உள்பட 5 பேரை போலீஸார் கைது செய்துள்ளனர்.
பெலகாவி அருகே மச்சே கிராமத்தைச் சேர்ந்தவர் கங்கப்பா. இவரது மனைவி ரோகிணி (23). இவருக்கு கடந்த 2019-ஆம் ஆண்டுதான் திருமணம் நடந்தது. தற்போது ரோகிணி கர்ப்பமாக இருந்தார்.
இந்த நிலையில் ரோகிணி தனது உறவினரான ராஜஸ்ரீ என்பவருடன் கடந்த மாதம் கிராம எல்லையில் நடைப்பயிற்சி மேற்கொண்டிருந்தார். அந்த சமயத்தில் அங்கு வந்த மர்மநபர்கள் சிலர் ரோகிணி, ராஜஸ்ரீயை சரமாரியாக தாக்கியதில் அவர்கள் இருவரும் உயிரிழந்தனர்.

விசாரணை
பின்னர் மர்மநபர்கள் தப்பி ஓடிவிட்டனர். கர்ப்பிணி உள்பட 2 பெண்கள் கொல்லப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த இரட்டை கொலை தொடர்பாக பெலகாவி புறநகர் போலீஸார் வழக்குப் பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தி வந்தனர்.

பரபரப்பு தகவல்கள்
மேலும் பெலகாவி உதவி போலீஸ் கமிஷனர் விக்ரம் டர்டே தலைமையில் தனிப்படையும் அமைக்கப்பட்டது. இந்த நிலையில் இந்த இரட்டை கொலை வழக்கில் பெண் உள்பட 5 பேரை போலீஸார் கைது செய்துள்ளனர். அவர்களிடம் விசாரணை நடத்தியதில் பரபரப்பு தகவல்கள் கிடைத்துள்ளன.

கள்ளத்தொடர்பு
கைதானவர்கள் பெலகாவி அருகே கலேநட்டி கிராமத்தை சேர்ந்த கல்பனா பசரிமாரா (35), மராட்டியத்தை சேர்ந்த மகேஷ் நாயக், பெலுகுந்தியை சேர்ந்த ராகுல் பட்டீல், கணேஷ்பூரை சேர்ந்த ரோகித் வாடர், கலேநட்டியை சேர்ந்த ஷானூர் பன்னா ஆகியோர் ஆவார்கள். இவர்களில் கல்பனாவுக்கும் ரோகிணியின் கணவர் கங்கப்பாவுக்கு கள்ளத்தொடர்பு இருந்து வந்துள்ளது.

கங்கப்பா
கங்கப்பாவுக்கு கடந்த ஆண்டுதான் ரோகிணியுடன் திருமணம் நடந்துள்ளது. இதனால் திருமணத்திற்கு பிறகு கங்கப்பா, கல்பனாவுடனான கள்ளத்தொடர்பை நிறுத்திக் கொண்டுள்ளார். ஆனால் இதற்கு கல்பனா ஒப்புக் கொள்ளவில்லை. இதனால் கல்பனாவின் கோபம் முழுவதும் ரோகிணியின் மீது திரும்பியது. இதனால் கல்பனாவை கொலை செய்ய திட்டமிட்டார்.

மகேஷ் நாயக்
இதையடுத்து கல்பனா தனது உறவினர் மகேஷ் நாயக் உள்ளிட்டோருடன் இணைந்து ரோகிணியை கொலை செய்தனர். இந்த கொலையை பார்த்த ராஜஸ்ரீயையும் கொன்றுவிட்டார்கள். கள்ளக்காதலனை அடைய கர்ப்பிணி என்றும் பாராமல் இரு பெண்களை கல்பனா கொன்றது தெரியவந்தது. இதையடுத்து அவர்கள் 5 பேரும் சிறையில் அடைக்கப்பட்டனர்.
-
தூத்துக்குடி கொடூரனுக்கு இரட்டை தூக்கு.. கோவை கேஸிலும் இதே தீர்ப்பை கொடுங்க! மாணவியின் தந்தை குமுறல் -
கல்லூரி மாணவி குளிப்பதை ஜன்னல் வழியாக எட்டிப்பார்த்த தவெக நிர்வாகி கைது -
எனக்கே தெரியாமல் குழந்தையை எரிச்சுட்டாங்க! கணவர் மீது கோவை சிறுமியின் தாய் பகீர் குற்றச்சாட்டு -
மகளிர் உரிமைத் தொகை ரூ.2500 இருக்கட்டும், புதிய பயனாளிகளுக்கு அடுத்த விண்ணப்பம் எப்போது -
224 யூனிட்டுகளுக்கு 200 யூனிட் இலவசம் என்றால் 112 தானே வரனும்.. ஏன் 312 காட்டுகிறது.. விளக்கம் -
ஒரு கூட்டு கிளியாக ஒரு தோப்பு குயிலாக! கோபத்தில் குட்டி சிறுத்தைகள்! வெள்ளைக் கொடியோடி தாய் சிறுத்தை -
சரண்டரான சி.வி.சண்முகம் டீம்.. மீண்டும் இணைகிறது அதிமுக.. எடப்பாடி போட்ட கண்டிஷன்! -
கூண்டோடு காலியாகிறது.. விசிக டாப் தலைகள் மொத்தமாக திமுகவில் ஐக்கியம்? சில்லு சில்லாக சிதறுது! -
கிண்டலுக்குள்ளாகும் தவெக அமைச்சர்கள் பிரஸ் மீட்.. நடிகர் சரத்குமார் தந்த அறிவுரை -
நடிகை ரம்பா வீட்டில் ஏற்பட்ட துயரம்.. "உலகமே வெறுமையாகி விட்டது” என உருக்கமான பதிவு -
கோவை சூலூர் சிறுமியை கொன்றது ஏன்? குற்றவாளி கார்த்தி பரபரப்பு வாக்குமூலம் -
சஞ்சு சாம்சன் மூலமாக சிஎஸ்கே அணிக்குள் நுழைய முயற்சிக்கும் அஸ்வின்.. பின்னணியில் நடப்பது என்ன?












Click it and Unblock the Notifications