3வயது சிறுவனை சித்ரவதை செய்த ஆசிரியை கைது... 5 நாள் போலீஸ் காவலுக்கு அனுமதி
கொல்கத்தா: குறும்பு செய்த 3 வயது சிறுவனை கொடூரமாக அடித்துத் துன்புறுத்திய டியூசன் ஆசிரியரை கொல்கத்தா போலீசார் கைது செய்துள்ளனர். அவரை ஐந்து நாள் காவலில் வைத்து விசாரிக்க நீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது.
கொல்கத்தா அருகே உள்ள லேக் டவுன் பகுதியைச் சேர்ந்த பெற்றோர், தனது 3 வயது சிறுவனுக்கு டியூசன் சொல்லி கொடுப்பதற்காக பூஜா சிங் என்ற ஆசிரியை ஒருவரை நியமித்திருந்தனர். வீட்டிற்கே வந்து சிறுவனுக்கு பாடம் சொல்லிக் கொடுத்துக் கொண்டிருந்த அந்த ஆசிரியர், கடந்த புதன்கிழமை குறும்பு செய்த சிறுவனை எட்டி உதைத்தும், கட்டிலில் தூக்கிப் போட்டும் கடுமையாகத் தாக்கியுள்ளார்.
கண்காணிப்புக் கேமராவில் பதிவான காட்சிகளைக் கண்டு அதிர்ச்சியடைந்த பெற்றோர் இது தொடர்பாக போலீசில் புகார் அளித்தனர். ஆனால், அதற்குள் உஷாரான ஆசிரியர் பூஜாசிங் தலைமறைவானார்.
அவரைப் போலீசார் தீவிரமாகத் தேடி வந்தனர். இந்நிலையில், நேற்று முன்தினம் பூஜாசிங்கை கைது செய்த போலீசார் கோர்ட்டில் ஆஜர் படுத்தினர்.
வழக்கை விசாரித்த நீதிபதி, பூஜாசிங்கை 5 நாட்கள் போலீஸ் காவலில் எடுத்து விசாரிக்க உத்தரவிட்டுள்ளார்.
-
மாமூல் தொல்லையில் இருந்து முதல்வர் விஜய் எங்களை காப்பாற்றிவிட்டார்.. டாஸ்மாக் பணியாளர் சங்கம் -
ரூட்டை மாற்றிய இந்திய ஐடி நிறுவனங்கள்.. இனியும் சும்மா இருந்தா வேலைக்கு ஆகாது! -
"முதலமைச்சருக்கு நன்றி.. ஆனால்! எதிரியின் எதிரி நண்பனா? விஜய் ரசிகர்கள் குறித்து பேசிய அஜித் சகோதரர் -
வீரமணி ஒரே போடு.. திருச்சியில் முதலமைச்சர் விஜய் பேசிய அந்த பேச்சால் மொத்த பேருக்கும் முகச்சுளிப்பு? -
இன்பதுரை வெற்றி செல்லாது என்ற தீர்ப்பால் அடுத்து என்ன நடக்கும்? முன்னாள் சபாநாயகர் அப்பாவு விளக்கம் -
விஜய்யின் ஆலோசகர் + 2 அமைச்சர்களால் நேர்ந்த அவமானம்.. சட்டசபை செயலாளர் சீனிவாசன் பதவி விலகியது ஏன்? -
கோவையில் அருவியாக மாறிய மேம்பாலம் .. மேட்டுப்பாளையம் ஊட்டி செல்லும் வழியில் மாறிய காட்சி -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி -
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
அரசியல் மோதலை விடுங்க.. 'கலைஞர்' கருணாநிதி பிறந்தநாளுக்கு முதல்வர் விஜய் போட்ட பதிவு! -
விஜய்க்கு அரசு பாதுகாப்பு மேல நம்பிக்கை இல்லையா? தனி பாதுகாவலரோடு வருவது ஏன்? லாக் செய்த அதிமுக












Click it and Unblock the Notifications