அதிகாலையில் குலுங்கிய கட்டிடங்கள்.. அலறி அடித்து வெளியே ஓடிய மக்கள்.. அடுத்தடுத்து 5 நிலநடுக்கம்!
ஸ்ரீநகர்: ஜம்மு காஷ்மீரின் கத்ரா பகுதியில் இன்று அதிகாலை 3.50 மணியளவில் திடீரென நிலநடுக்கம் ஏற்பட்டது. ஜம்மு காஷ்மீர் மற்றும் லடாக் பகுதிகளில் கடந்த 14 மணி நேரத்திற்குள் 5 நில நடுக்கங்கள் ஏற்பட்டுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
ஜம்மு-காஷ்மீருக்கு கிழக்கே கத்ரா பகுதியை மையமாக கொண்டு இன்று அதிகாலை 3.50 மணிக்கு திடீரென நிலநடுக்கம் ஏற்பட்டதாக நில அதிர்வுக்கான தேசிய மையம் தெரிவித்துள்ளது. அதிகாலையில் ஏற்பட்ட இந்த நிலநடுக்கத்தால் கட்டிடங்கள் அதிர்ந்தன. இதனால் மக்கள் அச்சமடைந்து வீடுகளை விட்டு வெளியேறினர்.

முன்னதாக, லடாக்கின் லே மாவட்டத்திலிருந்து வடகிழக்கே 295 கிலோமீட்டர் தொலைவில் இன்று அதிகாலை 2.16 மணியளவில் ரிக்டர் அளவுகோலில் 4.1 என்ற அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டது என தேசிய நில அதிர்வு மையம் தெரிவித்துள்ளது. இந்த நிலநடுக்கம் 10 கி.மீ ஆழத்தில் நிலநடுக்கம் ஏற்பட்டது.
நிலநடுக்கத்தால் ஏற்பட்ட சேதங்கள் குறித்து உறுதியான விவரங்கள் இதுவரை வெளியாகவில்லை. அதிகாலை வேளையில் இந்த இரு நில நடுக்கங்கள் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளன. லடாக் மற்றும் ஜம்மு காஷ்மீரில் நேற்று இரவும் நிலநடுக்கம் ஏற்பட்டது குறிப்பிடத்தக்கது.
ஜம்மு காஷ்மீரில் நேற்று (சனிக்கிழமை) பிற்பகல் 2.03 மணியளவில் 3.0 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் ஏற்பட்டது. நிலநடுக்கத்தின் மையம் ஜம்மு-ஸ்ரீநகர் தேசிய நெடுஞ்சாலையை ஒட்டிய மலைப்பாங்கான ரம்பன் மாவட்டத்தில் இருந்துள்ளது.
இதைத்தொடர்ந்து லடாக்கின் வடகிழக்கே 271 கி.மீ தொலைவில் நேற்று இரவு 9.44 மணியளவில் மிதமான நிலநடுக்கம் ஏற்பட்டது. இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 4.5 ஆக பதிவானதாக தேசிய நிலநடுக்கவியல் மையம் தெரிவித்துள்ளது.
இதேபோல், நேற்று இரவு 9.55 மணியளவில் ஜம்மு காஷ்மீரின் தோடா பகுதியில் 4.4 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டது. தோடா மாவட்டத்தில் கடந்த ஐந்து நாட்களில் ஏற்பட்ட ஏழாவது நிலநடுக்கம் இதுவாகும்.
இவ்வாறாக கடந்த 24 மணி நேரத்தில் அதாவது, நேற்று பிற்பகல் 2 மணி முதல் இன்று அதிகாலை வரையில் ஜம்மு காஷ்மீர் மற்றும் லடாக் பகுதியில் 5 நிலநடுக்கங்கள் ஏற்பட்டுள்ளன. இதனால், அப்பகுதிகளில் பதற்றம் நிலவி வருகிறது.
-
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்!












Click it and Unblock the Notifications