பேரதிர்ச்சி.. தீயில் கருகி இறந்த 5 ராணுவ வீரர்கள்! ஜம்மு காஷ்மீரில் சோகம் - பயங்கரவாத தாக்குதலா?
ஸ்ரீநகர்: ஜம்மு காஷ்மீரின் பூஞ்ச் மாவட்டத்தில் ராணுவ வாகனம் தீப்பிடித்து எரிந்த விபத்தில் 5 ராணுவ வீரர்கள் பரிதாபமாக உயிரிழந்தனர். இதில் ஒருவர் காயமடைந்து இருப்பதாக ராணுவ செய்தித்தொடர்பாளர் தெரிவித்து இருக்கிறார். மின்னல் தாக்கியதில் தீப்பிடித்து இருக்கலாம் என்று ஒரு தகவலும், பயங்கரவாதிகள் தாக்கியதாக மற்றொரு தகவலும் தெரிவிக்கிறது.
ஜம்மு காஷ்மீரின் பூஞ்ச் மாவட்டத்தில் உள்ள மலைப்பகுதி அருகே இந்திய ராணுவ வாகனத்தில் வீரர்கள் பிம்பர் காலி பகுதியில் இருந்து சங்கியோடிக்கொண்டு சென்றுகொண்டு இருந்தனர். அப்போது அந்த வாகனம் தீப்பிடித்து எரிந்தது. இதில் 5 இந்திய ராணுவ வீரர்கள் பரிதாபமாக உயிரிழந்தனர்.

வாகனம் சென்றுகொண்டு இருந்தபோது அங்குள்ள மெந்தர் துணைப் பிரிவு பகுதியில் அமைந்து இருக்கும் பாடா துரியன் நீர்வீழ்ச்சிக்கு அருகே இன்று பிற்பகல் 3.15 மணியளவில் மின்னல் தாக்கியதால் ராணுவ வாகனம் தீப்பிடித்து இருக்கலாம் என்று கூறப்படுகிறது. இந்த தகவலை இந்திய ராணுவத்தின் செய்தித் தொடர்பாளர் லெப்டினன் கர்னல் தேவேந்திர ஆனந்த் உறுதிபடுத்தி உள்ளார்.
அவர் கூறுகையில், "இந்திய ராணுவ வாகனம் இன்று 3 மணியளவில் பிம்பர் காலி பகுதியில் இருந்து சங்கியோடி நோக்கி சென்றுகொண்டு இருந்தது. அப்போது ஏற்பட்ட தீ விபத்து 5 இந்திய ராணுவ வீரர்கள் உயிரிழந்தனர். ஒருவர் காயமடைந்து இருக்கிறார்." என்றார். இதுகுறித்து தகவலறிந்த 13 வது பிரிவு ராஷ்டிரிய ரைபில் படை தலைவர் 13 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று பார்வையிட்டார்.
ராணுவ செய்தித் தொடர்பாளர் இவ்வாறு கூறி இருக்கும் நிலையில் பயங்கரவாதிகளின் தாக்குதலாக இருக்கலாம் என்ற செய்தியும் பரவி வருகிறது. பிற்பகல் 3 மணியளவில் இந்திய வீரர்களும் பயங்கரவாதிகளுக்கும் இடையே மோதல் ஏற்பட்டதாகவும் அப்போது பயங்கரவாதிகள் இந்திய ராணுவத்தின் வாகனம் மீது தாக்கியதில் தீ விபத்து ஏற்பட்டு இருக்கலாம் என்று செய்திகள் தெரிவிக்கின்றனர்.
இந்திய ராணுவத்தினர் பிம்பர் காலி பகுதியில் இருந்து சங்கியோடி நோக்கி சென்றுகொண்டு இருந்தபோது தாக்குதல் நடத்திய பயங்கரவாதிகள் கையெறி குண்டை வீசியதால் ராணுவ வாகனம் தீப்பிடித்து எரிந்து இருக்கலாம் என்று கூறப்படுகிறது. அடையாளம் தெரியாத பயங்கரவாதிகள் ராணுவ வாகனம் நோக்கி தாக்குதல் நடத்தியதாக ராணுவ தலைமையகம் தெரிவித்து உள்ளது.

உயிரிழந்த 5 வீரர்களும் ராஷ்டிரிய ரைபில் படையை சேர்ந்தவர்கள் என்று தெரிவிக்கப்பட்டு உள்ளது. காயமடைந்த வீரர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உள்ளார். அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. தாக்குதல் நடத்தியவர்களை கண்டுபிடிக்கும் பணிகள் முழு வீச்சில் நடந்து வருவதாக பாதுகாப்புத்துறை தெரிவித்து உள்ளது.
-
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ!












Click it and Unblock the Notifications