For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

சத்தீஸ்கரில் நக்சல்களுடன் துப்பாக்கி சூடு.. பாதுகாப்பு படையி வீரர்கள் 5 பேர் பலி... 20 பேர் படுகாயம்

Google Oneindia Tamil News

ராய்ப்பூர்: சத்தீஸ்கரில் நக்சல் ஒழிப்பு ஆப்ரேசன் போது ஏற்பட்ட துப்பாக்கிச் சூட்டில் ஐந்து பாதுகாப்புப் படையினர் உயிரிழந்தனர். மேலும் 20 பேர் படுகாயம் அடைந்தனர்.

சத்தீஸ்கர் மாநிலத்தில் உள்ள நக்சலைட்டுகளின் நடமாட்டம் அதிகமாக உள்ளதாகக் கூறப்படுகிறது. எனவே, நக்சல்களை ஒடுக்கப் பாதுகாப்புப் படையினர் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகின்றனர்.

5 jawans killed, 20 injured in Bijapur encounter 2 Naxals also gunned down in Chhattisgarh

இந்நிலையில் இன்று பிஜபுர் டர்ரெம் அருகே நக்சல் ஒழிப்பு ஆப்ரேசனை பாதுகாப்புப் படையினர் மேற்கொண்டனர். அங்குள்ள காட்டுப்பகுதியில் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டிருந்த போது, திடீரென்று அங்குப் பதுங்கியிருந்த நக்சல்கள் துப்பாக்கியால் சுட தொடங்கினர்.

இதனால் பாதுகாப்புப் படையினரும் பதிலுக்குத் துப்பாக்கிச் சூடு நடத்தினர். இதில் ஒரு பெண் உட்பட இரண்டு நக்சலைட்டுகள் கொல்லப்பட்டதாகப் பாதுகாப்புப் படையினர் தெரிவித்துள்ளனர்.

வீட்டு செலவுக்கு வைத்திருந்த பணம்..ஸ்டாலின் மகள் வீட்டில் கைப்பற்றப்பட்ட ரொக்கம் எவ்வளவு?ரசீது வைரல்வீட்டு செலவுக்கு வைத்திருந்த பணம்..ஸ்டாலின் மகள் வீட்டில் கைப்பற்றப்பட்ட ரொக்கம் எவ்வளவு?ரசீது வைரல்

மேலும். இதில் பாதுகாப்புப் படையினர் தரப்பில் ஐந்து பேர் உயிரிழந்தனர். மேலும் 20 பேர் படுகாயம் அடைந்தனர். காயமடைந்தவர்களை மீட்க ஒன்பது ஆம்புலன்ஸ்கள், இரண்டு ராணுவ ஹெலிகாப்படர்கள் அப்பகுதிக்கு அனுப்பப்பட்டுள்ளது.

முன்னதாக, கடந்த மார்ச் 23ஆம் தேதி பாதுகாப்புப் படையினர் சென்று கொண்டிருந்த பேருந்தின் மீது நக்சல்கள் எல்இடி வெடிகுண்டு தாக்குதல் நடத்தினர். அதில் ஐந்து பாதுகாப்புப் படையினர் கொல்லப்பட்டனர். இந்தச் சம்பவம் தொடர்பாக இதுவரை மூன்று நக்சல்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

English summary
5 jawans killed, 20 injured in anti-Naxal operation in Chhattisgarh
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X