டெல்லி, மும்பை உள்பட 5 நகரங்களுக்கு தீவிரவாத அச்சுறுத்தல்: உஷார் நிலையில் போலீஸ்
டெல்லி: டெல்லி, மும்பை, ஜெய்பூர், லக்னோ, சன்டிகர் ஆகிய 5 நகரங்களுக்கு தீவிரவாத அச்சுறுத்தல் இருப்பதாக உளவுத் துறை எச்சரிக்கை விடுத்துள்ளது.
டெல்லி, மும்பை, ஜெய்பூர், லக்னோ, சன்டிகர் ஆகிய 5 நகரங்களுக்கு தீவிரவாத அச்சுறுத்தல் இருப்பதாக உளவுத் துறை எச்சரிக்கை விடுத்துள்ளது. அந்த 5 மாநில போலீசாரையும் விழிப்புடன் இருக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

இது குறித்து உளவுத் துறை அதிகாரி ஒருவர் ஒன்இந்தியாவிடம் கூறுகையில்,
டெல்லி, மும்பை, ஜெய்பூர், லக்னோ, சன்டிகர் ஆகிய 5 நகரங்களை சில தீவிரவாத அமைப்புகள் தாக்க முயற்சிக்கக்கூடும் என்று நம்பத்தகுந்த தகவல் கிடைத்துள்ளது என்றார்.
குஜராத்திற்குள் லஷ்கர் இ தொய்பா, ஜெய்ஷ் இ முகமது ஆகிய தீவிரவாத அமைப்புகளை சேர்ந்த 10 தற்கொலைப்படை தீவிரவாதிகள் ஊடுருவியுள்ளதாகவும், அவர்கள் சிவராத்திரி கொண்டாட்டத்தின்போது தாக்குதல் நடத்தக்கூடும் என்றும் பாகிஸ்தானின் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் நசீர் கான் இந்திய பாதுகாப்பு ஆலோசகர் அஜீத் தோவலிடம் தெரிவித்தார்.
இதையடுத்து குஜராத்தில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. தேசிய பாதுகாப்பு படையினர் குஜராத் வந்துள்ளனர். மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் உயர் அதிகாரிகளை இன்று சந்தித்து குஜராத் நிலவரம் பற்றி ஆலோசனை நடத்தினார்.
இந்நிலையில் டெல்லியிலும் சில தீவிரவாதிகள் ஊடுருவியிருப்பதாக தகவல் கிடைத்துள்ளதையடுத்து அங்கும் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.
-
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல்












Click it and Unblock the Notifications