இதை நாசால தேடிகிட்டு இருக்காங்க.. வெறும் தகரத்தை ரூ.1.4 கோடிக்கு விற்று மோசடி.. ரைஸ் புல்லிங் வித்தை
வெறும் தகரத்தை, அபூர்வமான தகரம் என்று பொய் சொல்லி 1.4 கோடி ரூபாய்க்கு விற்று டெல்லியில் ஒரு கும்பல் மோசடி செய்து இருக்கிறார்கள்.
Recommended Video

டெல்லி: வெறும் தகரத்தை, அபூர்வமான தகரம் என்று பொய் சொல்லி 1.4 கோடி ரூபாய்க்கு விற்று டெல்லியில் ஒரு கும்பல் மோசடி செய்து இருக்கிறார்கள். ரைஸ் புல்லிங் எனப்படும் மோசடி முறையை பயன்படுத்தி இந்த செயலை அந்த கும்பல் செய்துள்ளது.
ரைஸ் புல்லிங் மோசடியில், பொதுவாக ஒரு பழைய தகரத்தையோ, செம்பு கலசத்தையோ எடுத்து வந்து, இதில் மின்னல் தாக்கி அதிக சக்தி உருவாகி இருக்கிறது, இது அரிசியை தன் பக்கம் இழுக்கும் அளவிற்கு ஆற்றல் கொண்டது, இதை கையில் வைத்து இருப்பவர்கள் கோடிகளில் சம்பாதித்து சக்ரவர்த்தியாக மாறலாம், என்று சதுரங்க வேட்டை படத்தில் ஏமாற்றுவது போல விற்று ஏமாற்றுவார்கள். அதையேதான் இவர்கள் டெல்லியிலும் செய்து இருக்கிறார்கள்.
டெல்லியில் நரேந்திர் என்ற வியாபாரியின் வீட்டில் அவர்கள் இப்படி ஏமாற்றி பணம் பறித்து இருக்கிறார்கள். அதுவும் கொஞ்சம் இல்லை மொத்தமாக 1.4 கோடி, இன்னும் 9 கோடி ஏமாற்றுவதற்கு அவர்கள் தயாராக இருந்துள்ளனர்.

எப்படி
டெல்லியை சேர்ந்த பெரிய தொழிலதிபர்களில் ஒருவரான நரேந்திராவை சந்தித்து முதலில், இந்த ரைஸ் புல்லிங் பற்றி விளக்கி இருக்கிறார்கள். வீரேந்திர மோகன், பாபா பார் உள்ளிட்ட ஐந்து பேர் இந்த மோசடியை செய்து இருக்கிறார்கள். இதை வைத்து இருந்தால் பெரிய அளவில் சம்பாதிக்கலாம் என்று கூறியுள்ளனர். ஆனால் அதை ஆராய்ச்சி செய்ய தன்னிடம் பணம் இல்லை, உங்கள் நிறுவனம்தான் உதவ வேண்டும் என்று நரேந்திராவை பேசி மடக்கி உள்ளனர்.

நாசா கேட்டுள்ளது
அதுமட்டுமில்லாமல், இந்த தகரத்தை ஆராய்ச்சி செய்ய பத்து கோடி தேவைபடும். அதில் இப்போது ஒரு கோடி கொடுத்தால், டோக்கன் போட்டுக் கொள்ளலாம். மத்திய அரசின் டிஆர்டிஓ அமைப்பில் சோதனை நடத்த வேண்டும். அவர்கள் கொடுக்கும் சான்றிதழை வைத்து இதை நாசாவில் விற்கலாம், நாசா இதை பலவருடமாக தேடிக்கொண்டு இருக்கிறது. நாசா இதற்கு 34,000 கோடி ரூபாய் கொடுக்க தயாராக இருக்கிறது என்றுள்ளார்.

பணம் வாங்கினார்கள்
இப்படி கதை சொன்னதோடு, அந்த பழைய தகரத்தை அவரிடமே கொடுத்துவிட்டு முன்பணமாக 80 லட்சம் வாங்கியுள்ளனர். பின் இன்னும் 20 லட்சம் வாங்கிவிட்டு தகரத்தையும் எடுத்துக் கொண்டு சென்றுள்ளனர். ஆராய்ச்சி முடிந்து நாசாவில் விற்ற பின் வரும் பணத்தில் 70-30 என பிரித்துக் கொள்ளலாம் என்று ஏமாற்றி உள்ளனர். ஆனால் பணம் வாங்கி சென்றவர்கள் அதன்பின் திரும்பவே இல்லை. இரண்டு மாதம் பொறுத்து பார்த்த நரேந்திரன் பின் போலீசில் புகார் அளித்துள்ளார்.

போலீஸ் கைது
அவர்கள் இதில் இன்னொரு மோசடியும் செய்துள்ளனர். இந்த தகரத்தில் அணு கதிர் வீச்சு வரும், அதனால், அதற்கு என்று தனி உடை வாங்க வேண்டும் என்று வெள்ளி நிற உடை வாங்கி அதற்கும் 2,00,000 பணம் வாங்கியுள்ளனர். அவர்கள் பயன்படுத்திய சிம் கார்ட் விவரங்களை வைத்து போலீஸ் அவர்களை கைது செய்துள்ளது. மொத்தம் ஐந்து பேரை கைது செய்துள்ளது. இவர்கள் இன்னும் நிறைய பேரை ஏமாற்றி இருக்கலாம் என்று கூறப்படுகிறது.
-
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக -
விஜய்யை இப்படியே விடக்கூடாது.. பாஜக பாணியை கையில் எடுக்கும் திமுக.. பெரிய மாற்றம் வரப்போகுது -
மம்தாவை கதறவிடும் முதல் முறை எம்எல்ஏ.. 60 எம்எல்ஏக்களை அபகரித்தது எப்படி? தி.காங்கிரஸ் பிளவு பின்னணி -
காங்கிரஸுக்கு ராஜ்யசபா சீட்.. அலேக்காக தப்பிக்கும் தவெக! பிளான் இதுதான்! -
அழுதபடி அலிசா அப்துல்லா புகார்.. ஒரே நாளில் திருச்சி சூர்யாவை தூக்கிய போலீஸ்! தலைமறைவான முக்தார்? -
பயங்கரமான ஆளுங்க விஜய்! காங்கிரஸுக்கு தான் சீட்டு.. ஆனா எம்பி எங்களுங்க! ராஜ்சபா சீட்டு யாருக்கு? -
துன்பத்திலும் ஒரு இன்பம்.. மத்திய அமைச்சராகும் நயினார்! தமிழக பாஜக புதிய தலைவர் இவரா? கலகல கமலாலயம்! -
ரூ.72 லட்சம் பணம் அக்கவுண்டில் ஏறியதும் ஊரைவிட்டே ‘எஸ்கேப்’.. மோசடி புகாரில் தவெக நிர்வாகி கைது! -
தவெக பெண் எம்எல்ஏவை அவமானப்படுத்திய சென்னை மேயர் பிரியா? குத்துவிளக்கேற்றுவதில் வெடித்த மோதல்! -
திருச்செந்தூர் முருகனின் விஸ்வரூப தரிசனம்! அடுத்தடுத்து முதல்வர்களான விஜய், டி.கே.சிவக்குமார்!












Click it and Unblock the Notifications