காஷ்மீர் எல்லையில் இந்திய ராணுவம் பதிலடி.. 5 பாக். ராணுவ வீரர்கள் பலி
போர் நிறுத்த ஒப்பந்தத்தை மீறி எல்லையில் அத்துமீறி தாக்குதல் நடத்திய பாகிஸ்தான் ராணுவ வீரர்கள் மீது நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூட்டில் 5 வீரர்கள் பலியாகியுள்ளனர்.
நவ்ஷோரா: எல்லையில் அத்துமீறி தாக்குதல் நடத்திய பாகிஸ்தான் ராணுவ வீரர்கள் மீது இந்திய வீரர்கள் தாக்குதல் நடத்தியதில் அந்நாட்டு வீரர்கள் 5 பேர் பலியாகிவிட்டனர்.
ஜம்மு- காஷ்மீர் மாநில எல்லையில் உள்ள இந்திய நிலைகள் மீது பாகிஸ்தான் ராணுவத்தினர் அவ்வப்போது தாக்குதல் நடத்தி வருகின்றனர். போர் நிறுத்த ஒப்பந்தத்தை மீறி இதுபோன்ற இந்திய நிலைகள் மீது தாக்குதல்கள் அவ்வப்போது நடத்தப்பட்டு வருகிறது.

இந்திய ராணுவத்தினரும் பதிலடி கொடுத்து வருகின்றனர். இந்நிலையில் ரஜௌரி மற்றும் பூஞ்ச் பகுதிகளில் இன்று அத்துமீறி தாக்குதல் நடத்தப்பட்டது. அப்போது இந்திய வீரர்கள் சார்பில் பதிலடிக் கொடுக்கப்பட்டது.
இதைத் தொடர்ந்து நவ்ஷோராவில் பிம்பெர் மற்றும் பட்டால் செக்டாரில் அத்துமீறி தாக்குதல் நடத்திய பாகிஸ்தானுக்கு இந்திய ராணுவம் கொடுத்த பதிலடியில் பாகிஸ்தானை சேர்ந்த 5 ராணுவ வீரர்கள் உயிரிழந்தனர். மேலும் 6 பேர் காயம் அடைந்து உள்ளனர்.
இதனிடையே இந்த தாக்குதல் குறித்து காஷ்மீர் எல்லையில் பணியில் உள்ள 7 தளபதிகளுடன் ராணுவத் தலைமைத் தளபதி பிபின் ராவத் ஆலோசனை மேற்கொண்டார். எல்லையில் ராணுவ வீரர்கள் போக்குவரத்து மற்றும் தளவாடங்கள் கொண்டுசெல்வது குறித்தும் ஆலோசனை மேற்கொள்ளப்படுகிறது.
எல்லை துப்பாக்கி சூடு சம்பவம் தொடர்பாக இந்திய துணை தூதர் ஜெபி சிங்குக்கு பாகிஸ்தான் வெளியுறவுத்துறை சம்மன் அனுப்பி உள்ளது.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications