பஞ்சாப்:அமிர்தசரஸ் தனியார் மருத்துவமனையில் 5 கொரோனா நோயாளிகள் மரணம்- ஆக்சிஜன் பற்றாக்குறையால் திணறல்
அமிர்தசரஸ்: பஞ்சாப் மாநிலம் அமிர்தசரஸில் உள்ள நீல்கந்த் என்ற தனியார் மருத்துவமனையில் 5 கொரோனா நோயாளிகள் இறந்தது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இம்மருத்துவமனையில் கடந்த 48 மணிநேரமாக ஆக்சிஜன் பற்றாக்குறை தொடருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
நாடு முழுவதும் கொரோனா பாதிப்பு உச்சத்தில் இருப்பதால் மருத்துவமனைகள் நோயாளிகளால் நிரம்பி வழிகின்றன. கொரோனா நோயாளிகளுக்கான ஆக்சிஜன் கொடுப்பதில் பெரும் தட்டுப்பாடு நிலவுகிறது.

டெல்லி தனியார் மருத்துவமனையில் நேற்று இரவு ஆக்சிஜன் பற்றாக்குறையால் 20 நோயாளிகள் மரணமடைந்தனர். மேலும் 200 நோயாளிகள் உயிருக்கு ஆபத்தான நிலையில் ஆக்சிஜனுக்காக காத்திருக்கின்றனர்.
இந்த நிலையில் பஞ்சாப் மாநிலம் அமிர்தசரஸ் நீல்கந்த் மருத்துவமனையில் 5 கொரோனா நோயாளிகள் உயிரிழந்துள்ளனர். இம்மருத்துவமனையிலும் கடந்த 48 மணிநேரமாக ஆக்சிஜன் பற்றாக்குறை இருப்பதாக மருத்துவர்கள் தெரிவித்தனர்.
இது தொடர்பாக மாநில அரசிடம் கோரிக்கை வைத்த போதும், அரசு மருத்துவமனைகளுக்குத்தான் முன்னுரிமை முதலில் தரப்படும்; தனியார் மருத்துவமனைகளுக்கு பின்னர்தான் ஆக்சிஜன் கொடுப்போம் என கூறிவிட்டதாகவும் நீல்கந்த் மருத்துவமனை மருத்துவர்கள் கூறினர்.
-
கதறும் கராச்சி.. குடிநீர், மின்சாரம், கேஸ் எதுவும் இல்லை.. சிந்து நதியை நிறுத்தியதால் நிலைமை மோசம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
இனி ஒன்று இல்லை.. இரண்டு OTP-க்கள் வேண்டும்.. ஒரு பைசா கூட ஏமாற்ற முடியாது.. அதிரடி அறிவிப்பு -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
“இந்திய எல்லையை ஆக்கிரமித்திருக்கிறோம்..” நேபாள பிரதமரின் பேச்சால் உள்நாட்டில் வெடித்த சர்ச்சை! -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்!












Click it and Unblock the Notifications