மிரட்டும் நோட்டா.. தமிழ்நாட்டில் பாஜக பெரியாள்னா.. ம.பியில் சமாஜ்வாடி, ஆம் ஆத்மி!
Recommended Video

போபால்: தமிழகத்தில் எப்படி பாஜக நோட்டாவுடன் மல்லுக்கட்டி போராடி வருகிறதோ அதே போல மத்தியப் பிரதேசத்தில் இரண்டு கட்சிகள் அடித்து மோதிக் கொண்டுள்ளன.
தமிழகத்தில் பாஜகவின் நேரடி எதிரி யார் என்று பார்த்தால் அது நோட்டா மட்டுமே. அதை வெல்ல முடியாமல் பாஜக திக்கித் திணறிக் கொண்டிருக்கிறது.
ஆனால் பாஜக இனியும் தனியாக வெதும்பிக் கொண்டிருக்கத் தேவையில்லை. அக்கட்சிக்கு கம்பெனி கொடுக்க இரண்டு தேசியக் கட்சிகள் களம் இறங்கியுள்ளன. அது சமாஜ்வாடி கட்சி மற்றும் ஆம் ஆத்மி!.

மத்தியப் பிரதேச தேர்தலில்
மத்தியப் பிரதேச சட்டசபைத் தேர்தலில் நோட்டா முக்கியப் பங்கு வகித்துள்ளது. சமாஜ்வாடி, ஆம் ஆத்மி ஆகிய இரு கட்சிகளுக்கும் இது பெரும் சவாலாக மாறியுள்ளது.

அடப் பரிதாபமே
சமாஜ்வாடி, ஆம் ஆத்மி ஆகிய கட்சிகளின் வாக்குகளை விட நோட்டாவுக்குக் கிடைத்த வாக்குகள்தான் இப்போது ம.பியின் பரபரப்பு பேச்சாக மாறியுள்ளது.

அவர்களை விட ஜாஸ்தி
இதுவரை நோட்டாவுக்கு அங்கு கிட்டத்தட்ட 1.4 லட்சம் வாக்குகள் கிடைத்துள்ளன. இது மொத்த வாக்குகளில் 1.5 சதவீதமாகும். இது ஆம் ஆத்மி, சமாஜ்வாடி கட்சிகள் பெற்ற மொத்த வாக்குகளை விட அதிகமாகும்.

தமிழக பாஜக போல
தமிழகத்தில் எப்படி பாஜகவுக்கு போட்டியாக நோட்டா திகழ்கிறதோ அதேபோல ம.பி தேர்தலில் சமாஜ்வாடி, ஆம் ஆத்மி கட்சிகளின் வாழ்க்கையில் விளையாடி விட்டது இந்த நோட்டா. சமாஜ்வாடியை விட்டு விடலாம், குறைந்தது ஆம் ஆத்மி கட்சிக்காவது மக்கள் வாக்களித்திருக்கலாமே.. ஏன் வாக்கு போகவில்லை. யோசிக்க வேண்டிய விஷயம்.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications