கண்கள் கலங்குதே.. உலகில் அதிக பலியை ஏற்படுத்திய ‛டாப்’ 5 ரயில் விபத்து இதுதான்! இப்படியும் நடக்குமா?

Subscribe to Oneindia Tamil

புவனேஸ்வர்: மேற்கு வங்கத்திலிருந்து சென்னை நோக்கி வந்துகொண்டிருந்த கோரமண்டல் ரயில் உட்பட மூன்று ரயில்கள் ஒன்றுடன் ஒன்று மோதி விபத்தில் சிக்கியுள்ள நிலையில், விபத்தில் 280 பேர் வரை உயிரிழந்துள்ளனர். இந்த விபத்து உலகின் மிகவும் மோசமன ரயில் விபத்துக்களில் ஒன்றாக பதிவாகியுள்ளது.

ரயில்கள் பயன்பாட்டுக்கு வந்து சுமார் 200 ஆண்டுகள் ஆகின்றன. ஒரு ஊரையே சில மணி நேரங்களில் மாநிலம் விட்டு மாநிலம் கொண்டு சேர்க்கும் ஒரே வாகனம் ரயில் மட்டும்தான். இந்த ரயில்கள் கடந்த 200 ஆண்டுகளாக மேம்படுத்தப்பட்டு வந்திருக்கின்றன. தொடக்கத்தில் 30-40 கிமீ வேகத்தில் இயங்கிய ரயில்கள் தற்போது குறைந்தபட்சம் 90-100 கி.மீ வேகத்தில் இயக்கப்படுகிறது. இப்படி எவ்வளவுதான் சிறப்பம்சங்களை அடுக்கிக்கொண்டே போனாலும், ரயில் விபத்து என்பது தவிர்க்க முடியாததாகதான் இருக்கிறது.

 5 worst train accidents in the world

அப்படி உலகம் முழுவதும் ஏற்பட்ட 5 மறக்க முடியாத ரயில் விபத்துக்கள் ரயில் பயணத்தின் கறுப்பு பக்கங்களை நமக்கு நினைவூட்டுகிறது. 1917ம் ஆண்டு தொடங்கி 1989ம் ஆண்டு வரை இந்த விபத்துக்கள் பதிவாகியுள்ளன. அப்படி இந்த விபத்தில் மிகவும் கோரமானதாக பார்க்கப்படுவது, யுஃபா ரயில் விபத்துதான்.

கடந்த 1989ம் ஆண்டு ஜூன் மாதமொன்றில் ரஷ்யாவின் யூரல் மலைகளில் உள்ள உஃபா மற்றும் ஆஷா நகரங்களுக்கு இடையே இரண்டு பயணிகள் ரயில்கள் சென்றுக்கொண்ருந்தன. இந்த ரயில்கள் பயணித்த தண்டவாளம் வெவ்வேறுதான். இதில் எந்த பிரச்னையும் கிடையாது. ஆனால், இந்த தண்டவாளங்கள் அமைக்கப்பட்டுள்ள இடத்தையொட்டி கேஸ் பைப் வழியாக கொண்டு செல்லும் இடமும் இருந்துள்ளது. ஆள் அரவமற்ற இந்த இடத்தில் கேஸ் கசிவு ஏற்பட்டிருக்கிறது.

இந்நிலையில், இந்த பைப் லைனை பயணிகள் ரயில் தாண்டும்போது தண்டவாளத்தில் சக்கரம் உரசி தீப்பொறி பறந்துள்ளது. அவ்வளவுதான் மொத்தமும் முடிந்துவிட்டது. அதாவது சுமார் 10,000 டன் TNT வெடித்தால் எந்த அளவுக்கு வெப்பம் வெளியேறுமோ அந்த அளவுக்கு தீப்பொறி ரயிலுக்குள் பாய்ந்தது. ரயிலின் 40 பெட்டிகளில் மொத்தம் 1,300க்கும் அதிகமானோர் பயணித்திருந்தனர். இதில், 181 சிறுவர்கள் உட்பட 575 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.

ஆனால் இந்த உயிரிழப்பு இதைவிட அதிகமாக இருக்கும் என்று சொல்லப்படுகிறது. அதாவது 800க்கும் அதிகமானவர்கள் உயிரிழந்திருக்கலாம் என்று மீட்பு பணியில் இருந்தவர்கள் கூறுகின்றனர். இந்த விபத்தில் சிக்கியவர்களுக்கு சிகிச்சை அளிக்க சென்ற மைக்கேல் கலினின் இது குறித்து கூறுகையில், "நான் இதற்கு முன்னர் இப்படி ஒரு அவலத்தை பார்த்ததில்லை" என்று கூறியுள்ளார்.

இதற்கடுத்து இதே மோசமான மற்றொரு விபத்து, மெக்சிகோவில் நடந்தது. கடந்த 1915ம் ஆண்டு, மெக்சிகோவிற்கு ஒரு கொந்தளிப்பான ஆண்டாக இருந்தது. ஏனெனில், அதற்கு முன்னர் அதாவது 1913ம் ஆண்டு அதிபர் பிரான்சிஸ்கோ மடெரோ படுகொலை செய்யப்பட்டார். இது ஓர் அதிகார வெற்றிடத்தை உருவாக்கியது. இதனையடுத்து அடுத்த அதிபராக விக்டோரியானோ ஹுர்டா பொறுப்பேற்றுக்கொண்டார். இதற்கு பாஞ்சோ வில்லா மற்றும் வெனுஸ்டியானோ கரான்சா ஆகியோர் எதிர்ப்பு தெரிவிக்க தொடங்கிவிட்டனர்.

இதனை சமாளிக்க கரான்சாவுக்கு பதவி வழங்கப்பட்டது. இருப்பினும், பாஞ்சோ புரட்சியை தொடர்ந்து நடத்திச் சென்றார். மட்டுமல்லாது குவாடலஜாரா எனும் முக்கிய பகுதியையும் கைப்பற்ற முடிவெடுத்தார். இதற்காக கரன்சாவுக்கு எதிராக சதித்திட்டம் தீட்டப்பட்டது. கரன்சா தனது குடும்பத்துடன் கொலிமாவிலிருந்து ரயிலில் புறப்பட்டு வந்துக்கொண்டிருந்தார். இந்த சந்தர்ப்பத்தை பாஞ்சோ குரூப் பயன்படுத்திகொள்ள நினைத்தது. ஆனால் அதற்கு முன்னரே இந்த சம்பவம் நடந்தது.

அதாவது இந்த ரயில் ஒரு பள்ளத்தாக்கில் வந்துக்கொண்டிருந்தபோது அதன் உச்சபட்ச வேகத்தையும் மீறி ரயில் பயணித்துக்கொண்டிருந்தது. இந்த வேகமே இப்பயணத்திற்கான முடிவை கட்டிவிட்டது. அதாவது ரயில் தடம் புரண்டு பள்ளத்தாக்கில் பாய்ந்தது. ரியல் 20 பெட்டிகளும் அடையாளம் தெரியாமல் சிதைந்தன. 1915ம் ஆண்டு ஜனவரி மாதம் 22ம் தேதி நடைபெற்ற இந்த விபத்தில் 600க்கும் அதிகமானவர்கள் உயிரிழந்தனர்.

இந்த விபத்துக்கள் எல்லாம் வெளிநாடுகளில் நடந்தவை. இதேபோல இந்தியாவிலும் ஒரு கோர விபத்து நடந்திருக்கிறது. கடந்த 1981ம் ஆண்டு ஜூன் மாதம் 6ம் தேதியன்று பீகார் மாநிலத்தில் மான்சி மற்றும் சகார்சா இடையே சுமார் 800க்கும் அதிகமான பயணிகளை ஏற்றிக்கொண்டு சென்ற ரயில் ஒன்று பாக்மதி எனும் ஆற்றில் கவிழ்ந்து விபத்திற்கு உள்ளானது.

இதில் மீட்பு பணிகளில் ஏற்பட்ட தோய்வு காரணமாக சுமார் 750க்கும் அதிகமானோர் உயிரிழந்தனர். முதல் கட்டமாக 200 உடல்களை மீட்கவே 5 நாட்கள் வரை தேவைப்பட்டது. இந்த விபத்துக்கு முக்கிய காரணம் பாலத்தின் மீது ரயில் சென்றுக்கொண்டிருந்தபோது திடீரென சடன் பிரேக் போட்டதுதான் என்று சொல்லப்படுகிறது.

இதற்கடுத்து நடந்த கோர விபத்து எனில், 700 பேரை பலி கொண்ட சியூரியா ரயில் விபத்துதான். கடந்த 1917ம் ஆண்டு ஜனவரி மாதம் ஐரோப்பா முதலாம் உலகப் போரால் கடுமையாக பாதிக்கப்பட்டது. குறிப்பாக ஜெர்மனியின் தாக்குதலிலிருந்து தப்பிக்க ருமேனியா மக்களும், ராணுவமும் நாலப்பக்கமும் சிதறி ஓடியது. தங்களது நாட்டை தாண்டி போகும் ரயில்களில் கூட்டம் கூட்டமாக ஏறினர். ரயில் சியூரியா ஸ்டேஷனை நெருங்கிக்கொண்டிருந்தது. இன்னும் 10 மைல் தூரம்தான். ஆனால் இந்த பாதை மிகவும் டேஞ்சரானது.

அதாவது, இந்த 10 மைல் தூரமும் மிகவும் சரிவானதாகும். ஏற்கெனவே அளவுக்கு அதிகமான பயணிகள் இருந்ததால் ரயிலின் 26 பெட்டிகளில் 24 பெட்டிகள் தடம்புரண்டு விபத்தில் சிக்கியது. இதில் 800-1000 பேர் வரை உயிரிழந்ததாக சொல்லப்படுகிறது.

இதேபோன்றுதான் பிரான்சில் உள்ள மவுரியன் பள்ளத்தாக்கில் ஏற்பட்ட ரயில் விபத்திலும் ஏராளமான ராணுவ வீரர்கள் பலியாகினர். முதல் உலகப்போரின் பொது இந்த விபத்து நடந்துள்ளது. இத்தாலியில் இருந்த வீரர்கள் சிறிய விடுமுறைக்காக பிரான்ஸ் நோக்கி சென்றுக்கொண்டிருந்தனர். அப்போது மவுரியன் பள்ளத்தாக்கின் சரிவில் ரயில் வந்தபோது கட்டுப்பாட்டை இழந்தது.

இந்த இடத்தில் மணிக்கு 20-30 கி.மீ வேகத்தில் வர வேண்டிய ரயில், சுமார் 80கி.மீ வேகத்தில் வந்துள்ளது. பிரேக் பிடிக்காமல் போனதால் 19 பெட்டிகள் கவிழ்ந்தது. அப்போது மின்சாரம் இல்லாததால் மெழுகுவர்த்திதான் பெட்டிகளில் பயன்படுத்தப்பட்டது. இதில் சோகம் என்னவெனில் ரயிலில் பயணித்தவர்கள் ராணுவ வீரர்கள் என்பதால், அவர்கள் தங்களுடன் சில வெடிபொருட்களையும் அனுமதியின்றி கொண்டு வந்துள்ளனர்.

இதன் காரணமாக பயங்கரமான வெடி விபத்து ஏற்பட்டு தீ பற்றி எரிய தொடங்கியது. இதனை அணைக்க அடுத்த நாள் காலை வரை ஆனதாக சொல்லப்படுகிறது. தற்போது இந்த விபத்துகளில் ஒடிசா ரயில் விபத்தும் இணைந்திருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+