காஷ்மீர் எல்லையில் பாகிஸ்தான் அத்துமீறி தாக்குதல்: பொதுமக்கள் 6 பேர் காயம்
ஸ்ரீநகர்: ஜம்மு காஷ்மீர் மாநிலத்தின் பூஞ்ச் மாவட்டத்தில் பாகிஸ்தான் ராணுவத்தினர் அத்துமீறி நடத்திய தாக்குதலில் 6 பேர் காயம் அடைந்தனர்.
ஜம்மு காஷ்மீரில் பாகிஸ்தான் ராணுவம் அத்துமீறி இந்திய நிலைகள் மீது துப்பாக்கி சூடு தாக்குதல் நடத்தியுள்ளது. பூஞ்ச் மாவட்டம் சப்ஜியான் மற்றும் மாண்டி பகுதியில் இந்திய பகுதியின் மீது பாகிஸ்தான் ராணுவம் தாக்குதல் நடத்தியது. சிறிய ஆயுதங்கள், தானியங்கி ஆயுதங்கள் மற்றும் மோட்டார் குண்டுகளை கொண்டு பாகிஸ்தான் தாக்குதலில் ஈடுபட்டது என்று இந்திய ராணுவம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பாகிஸ்தான் நடத்திய துப்பாக்கி சூட்டில் இரண்டு பெண்கள் உள்பட 6 பேர் காயம் அடைந்துள்ளனர். ஆறு வீடுகளும் சேதம் அடைந்துள்ளன.
இந்த தாக்குதல்களுக்கு இந்திய வீரர்களும் பதிலடி அளித்தனர். நேற்று மாலை தொடங்கிய துப்பாக்கி சூடு நள்ளிரவு வரையில் தொடர்ந்து நடைபெற்றுள்ளது. பாகிஸ்தான் வீரர்களின் இந்த அத்துமீறிய தாக்குதல்களுக்கு இந்திய வீரர்களும் தகுந்த பதிலடி கொடுத்தனர். இதனால் இரு தரப்புக்கும் இடையே தொடர்ந்து துப்பாக்கிச்சண்டை நடந்தது. இரவு முழுவதும் மாறி மாறி நடந்த இந்த தாக்குதல் சம்பவங்கள், நள்ளிரவு முடிவுக்கு வந்துள்ளது.
இந்த தாக்குதலில் உயிரிழப்பு எதுவும் ஏற்படவில்லை. இருப்பினும் எல்லையில் மீண்டும் பதற்றம் ஏற்பட்டுள்ளது.
-
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
கனவுகள் தகர்ந்தன! மாணவர்களால் மறக்க முடியாத மே மாதம்! 24 லட்சம் மாணவர்களை பாதித்த தேர்வு குளறுபடிகள் -
கதறும் கராச்சி.. குடிநீர், மின்சாரம், கேஸ் எதுவும் இல்லை.. சிந்து நதியை நிறுத்தியதால் நிலைமை மோசம் -
இந்தியாவில் விருப்பப்பட்டு ஒருவர் பாலியல் தொழில் செய்வது குற்றமல்ல! உச்ச நீதிமன்றம் முக்கிய தீர்ப்பு -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்!












Click it and Unblock the Notifications