இமாச்சலில் அரசியல் சலசலப்பு.. பாஜகவுக்கு தாவிய 6 காங்கிரஸ் எம்எல்ஏக்கள்! சுக்வீந்தர் ஆட்சி தப்புமா?
சிம்லா: இமாச்சலப் பிரதேசத்தில் கட்சித் தாவல் தடை சட்டத்தின் கீழ் நடவடிக்கையை எதிர்கொண்ட காங்கிரஸ் எம்எல்ஏக்கள் 6 பேர் பாஜகவில் இணைந்திருக்கின்றனர்.
இமாச்சலப் பிரதேசத்தில் மொத்தம் 68 சட்டமன்ற தொகுதிகள் இருக்கின்றன. இதில் சமீபத்தில் நடந்த தேர்தலில் காங்கிரஸ் 40 தொகுதிகளை கைப்பற்றி ஆளும் கட்சியாக மாறியது. அதேபோல, 3 சுயேட்சை வேட்பாளர்கள் காங்கிரசுக்கு ஆதரவளித்தனர். பாஜக 25 தொகுதிகளை கைப்பற்றி எதிர்க்கட்சியாக இருக்கிறது. இந்நிலையில், கடந்த மாதம் இம்மாநிலத்தில் ராஜ்ய சபா உறுப்பினருக்கான தேர்தல் நடைபெற்றது. இதில் 6 காங்கிரஸ் எம்எல்ஏக்களும், 3 சுயேட்டை எம்எல்ஏக்களும் பாஜகவுக்கு வாக்களித்திருந்தது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தினர்.

மேலும், சட்டப்பேரவையில் நடைபெற்ற பட்ஜெட் மீதான வாக்கெடுப்பின்போதும் அவர்கள் கலந்து கொள்ளவில்லை. எனவே அரசுக்கு எதிராக செல்பட்டதாக கூறி, கட்சி தாவல் தடை சட்டத்தின் கீழ், 6 காங்கிரஸ் எம்எல்ஏக்களையும் சபாநாயகர் தகுதி நீக்கம் செய்திருந்தார். இந்நிலையில் தகுதி நீக்கம் செய்யப்பட்ட, ராஜிந்தர் ராணா, சுதிர் சர்மா, இந்தர் தத் லகன்பால், தேவிந்தர் குமார் பூடோ, ரவி தாக்கூர் மற்றும் சேதன்யா சர்மா என 6 எம்எல்ஏக்களும் தற்போது மத்திய அமைச்சர் அணுராக் தாக்கூர் மற்றும் பாஜக மாநில தலைவர் ராஜீவ் பிந்தல் ஆகியோர் முன்னிலையில் பாஜகவில் இணைந்திருக்கின்றனர்.
இது காங்கிரஸ் கட்சிக்கு பெரும் பின்னடைவாக பார்க்கப்படுகிறது. அதேபோல சுயேட்டை எம்எல்ஏக்கள் ஆஷிஷ் சர்மா, ஹோஷியார் சிங், கே.எல்.தாக்குர் ஆகியோரும் பாஜகவில் இணைந்திருக்கின்றனர். இவர்கள் காங்கிரஸ் முதல்வர் சுக்விந்தர் சிங் மீது கடுமையான குற்றச்சாட்டுகளை முன்வைத்திருக்கின்றனர்.
மூவரும் கூட்டாக செய்தியாளர்களை சந்தித்து பேட்டியளிக்கையில், "நாங்கள் பாஜகவில் இணைந்து அடுத்த தேர்தலில் போட்டியிடுவோம். ராஜ்யசபா தேர்தலில் காங்கிரஸ் வேட்பாளர் அபிஷேக் மனு சிங்விக்கு வாக்களிக்க எங்களுக்கு விருப்பமில்லை. எங்களை யாரும் கட்டாயப்படுத்த முடியாது. ஆனால் பாஜக வேட்பாளருக்கு வாக்களித்ததால் பழிவாங்கப்படுகிறோம்" என்று கூறியுள்ளனர்.
இவர்கள் மூவரும் கடந்த 2022ம் ஆண்டு பாஜக சார்பில் போட்டியிட முடிவெடுத்து கட்சியை அணுகியிருந்தனர். ஆனால், கட்சி அவர்களுக்கு சீட் கொடுக்க மறுத்தது. இதனையடுத்து தற்போது பாஜகவில் இணைய உள்ளதாக கூறியுள்ளனர்.
இந்த அரசியல் மாற்றம் குறித்து பேசிய முதலமைச்சர் சுக்விந்தர் சிங், "சுயேட்டை எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்திருக்க கூடாது. அவர்கள் மக்களின் தீர்ப்பை ஏற்று நடந்துக்கொண்டிருக்க வேண்டும். இந்த விவகாரத்தில் பணம் விளையாடியிருப்பதாக சந்தேகம் எழுந்திருக்கிறது. எனவே இது விசாரணைக்குரிய விஷயமாக இருக்கிறது" என்று கூறியுள்ளார்.
தற்போது காலியாக உள்ள சட்டப்பேரவை தொகுதிகளுக்கும், 4 லோக்சபா தொகுதிகளுக்கும் சேர்த்து ஜூன் 1ம் தேதி தேர்தல் நடத்தப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
-
மாணிக்கம் தாகூருக்கு தொடரும் சிக்கல்.. விஜய பிரபாகரன் தொடர்ந்த வழக்கை டிஸ்மிஸ் செய்தது ஐகோர்ட்! -
அந்த 2 லேடீஸ்..1 மாஜி தலை! பாஜக மண்ணைக் கவ்வ ‘இவர்கள்’ தான் காரணம்! அமித் ஷாவிடம் அடுக்கிய அண்ணாமலை! -
ரொம்ப அவசரப்படாதீங்க அண்ணாமலை.. அமித் ஷா போட்ட அன்புக் கட்டளை! இன்னும் தமிழ்நாடு திரும்பாதது ஏன்? -
ஓரங்கட்டப்பட்ட அண்ணாமலை.. நீண்ட நாள் ரகசிய ஆயுதத்தை கையில் எடுக்க முடிவு! அதிரடி திட்டம் -
அந்த ‘4’ ஓல்டு ஸ்டூடண்ட்ஸ்.. என்னை ஒதுக்கி ஓரம் கட்டிட்டாங்க! நபினிடம் கொட்டித் தீர்த்த அண்ணாமலை! -
பாஜகவில் இருந்து விலகினார் அண்ணாமலை! நிதினிடம் தமிழக பாஜக மீது அடுக்கடுக்கான புகார் -
கொங்கு மண்டல கணக்கு.. எடப்பாடி மீது குறையும் நம்பிக்கை.. அண்ணாமலை புதிய ரூட் எடுக்கும் பின்னணி -
நேரம் ஒதுக்காத அமித்ஷா.. கிரீன் சிக்னல் கொடுக்காத பாஜக தலைமை! டெல்லியில் காத்திருக்கும் அண்ணாமலை -
சித்தராமையாவிற்கு புது பொறுப்பு.. காங்கிரஸில் முக்கிய முடிவுகளை எடுக்கும் செயற்குழுவில் இடம் -
டைம் பார்த்து அடிக்க ரெடியாகும் பாஜக? தொகுதி மறுவரையறை, ஒரே நாடு ஒரே தேர்தல்! மோடி போடும் கணக்கு -
"வீட்டு வேலை செய்த பெண் டூ மாண்புமிகு அமைச்சர்.." மேற்கு வங்கத்தில் பாஜக செய்த சம்பவம்! -
அண்ணாமலை தலைவராக இருந்தால் இந்த வெற்றி கூட வந்திருக்காது.. பாஜக துணை தலைவர் கேபி ராமலிங்கம் விளாசல்












Click it and Unblock the Notifications