ஐ.எஸ்.ஐ.எஸ். இயக்கத்தில் சேர்ந்து கொல்லப்பட்ட 3 கர்நாடகா இளைஞர்கள் உட்பட 6 இந்தியர்கள்...
டெல்லி: உலகின் மிக பயங்கரமான தீவிரவாத இயக்கமான ஐ.எஸ்.ஐ.எஸ். இயக்கத்தில் இணைந்த இந்தியாவைச் சேர்ந்த 6 இளைஞர்கள் பலியாகி இருப்பது தெரியவந்துள்ளது.
ஈராக், சிரியாவின் பெரும்பகுதிகளைக் கைப்பற்றி தனி இஸ்லாமிய நாட்டை பிரகடனம் செய்துள்ளது ஐ.எஸ்.ஐ.எஸ். இயக்கம். இஸ்லாமிய அரசை நடத்துவதாக கூறிக் கொண்டாலும் மிக கொடூரமான சித்ரவதைகளையும் படுகொலைகளையும் அரங்கேற்றி வருகிறது.
இதனால் ஐ.எஸ்.ஐ.எஸ். இயக்கத்தை ஒழித்துக் கட்ட அமெரிக்காவும் அதன் நட்பு நாடுகளும் உக்கிரமான விமானத் தாக்குதல்களை நடத்தி வருகின்றன. ரஷ்யாவும் தன் பங்குக்கு தனியே விமான தாக்குதல்களை நடத்தி வருகிறது. உலக நாடுகளின் இந்த தாக்குதலுக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் பிரான்ஸ் தலைநகர் பாரீஸில் மிக கொடூரமான தாக்குதலை ஐ.எஸ்.ஐ.எஸ். தீவிரவாதிகள் நடத்தியிருந்தனர்.

இந்திய இளைஞர்கள்....
இந்நிலையில் இந்தியாவில் 150க்கும் மேற்பட்ட ஐ.எஸ்.ஐ.எஸ். இயக்க ஆதரவாளர்கள் கண்காணிக்கப்பட்டு வருவதாகவும் உளவுத்துறையினர் தெரிவித்திருந்தனர். மேலும் சென்னை ராயப்பேட்டை மற்றும் கரூரைச் சேர்ந்த 2 தமிழக இளைஞர்கள் ஐ.எஸ்.ஐ.எஸ். இயகத்தில் சேர முயற்சித்த போது துருக்கியில் பிடிபட்டு இந்தியாவுக்கு நாடு கடத்தப்பட்டனர்.

23 பேர் ஜிஹாதிகள்
இதனிடையே இந்தியாவில் இருந்து சிரியா, ஈராக் சென்று ஐ.எஸ்.ஐ.எஸ். இயக்கத்தில் மொத்தம் 23 இந்தியர்கள் இணைந்ததாக உளவுத்துறை தெரிவித்துள்ளது. இதில் பலியான 6 இந்தியர்கள் விவரங்களும் வெளியாகி உள்ளன.

பலியான 6 பேர் விவரம்
இதில் தென்னிந்தியாவைச் சேர்ந்த 4 பேர் அடங்குவர். இந்த 6 பேர் விவரம்:
தெலுங்கானாவின் அடிலாபாத்தைச் சேர்ந்த அதீப் வசீம் முகமது
கர்நாடகாவின் பெங்களூரைச் சேர்ந்த முகமது உமர் சுபான்
கர்நாடகாவின் பட்கலைச் சேர்ந்த மவுலானா அப்துல் காதீர் சுல்தான் ஆர்மர்
கர்நாடகாவின் பெங்களூரைச் சேர்ந்த ஃபைஸ் மசூத்

மகாராஷ்டிரா, உபி இளைஞர்கள்
மகாராஷ்டிராவின் தானேவைச் சேர்ந்த சஹீம் பரூக் தன்கி
உத்தரப்பிரதேசத்தின் ஆசாம்காரைச் சேர்ந்த முகமது சஜித் என்ற படா சஜித்
ஆகியோர் ஐ.எஸ்.ஐ.எஸ். இயக்கத்தில் இணைந்து பலியாகி உள்ளதாக உளவுத்துறையினர் தெரிவித்துள்ளனர்..
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications