குலுங்கிய குஜராத்.. இரண்டாக உடைந்த பாலம்! ஆற்றில் விழுந்த குப்பை லாரி, பைக்குகள் - 10 பேர் நிலை?

Subscribe to Oneindia Tamil

காந்திநகர்: குஜராத் மாநிலத்தில் ஆற்றை கடந்து செல்வதற்காக அமைக்கப்பட்டு இருந்த பாலம் இடிந்து விழுந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

குஜராத் மாநிலம் சுரேந்திரநகர் மாவட்டம் வஸ்தாதி பகுதியில் ஆற்றை கடந்து செல்வதற்காக சாலையின் குறுக்கே பாலம் அமைக்கப்பட்டு இருந்தது. பழமையான இந்த பாலத்தில் தினமும் ஏராளமான வாகனங்கள் சென்று வருவது வழக்கம். இந்த நிலையில் இன்று மாலை இந்த பாலத்தில் வாகனங்கள் சென்றுகொண்டு இருந்தபோது திடீரென இடிந்து விழுந்தது.

 6 missing after the River Bridge collapsed in Gujarat

பாலம் இருதுண்டாக உடைந்து ஆற்றில் விழுந்ததால், அதன் மீது சென்றுகொண்டு இருந்த குப்பை லாரி, இருசக்கர வாகனங்களும் ஆற்றில் விழுந்தன. உடனடியாக அப்பகுதி மக்கள் படகு மூலம் நீருக்குள் விழுந்தவர்களை மீடும் பணியில் ஈடுபட்டனர். போலீசார் மற்றும் மீட்புப் படையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.

தகவலறிந்து சம்பவ இடத்துக்கு வந்த அவர்கள், ஆற்றில் விழுந்தவர்களை மீட்கும் பணியில் ஈடுபட்டனர். இந்த விபத்தில் 10 பேர் சிக்கியதாக கூறப்பட்ட நிலையில் 4 பேர் மீட்கப்பட்டு உள்ளனர். மீதம் உள்ள 6 பேர் நிலை என்னவென்று தெரியவில்லை. மீட்கப்பட்டவர்கள் உடனடியாக அவசர சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டு இருக்கின்றனர்.

இதுகுறித்து சரேந்தர்நகர் மாவட்ட ஆட்சியர் கே.சி.சம்பத் தெரிவிக்கையில், "சுரா பகுதிக்கு செல்லும் தேசிய நெடுஞ்சாலையுடன் இந்த பாலம் இணைக்கப்பட்டு உள்ளது. சுமார் 40 ஆண்டுகளாக இந்த பாலம் பயன்பாட்டில் உள்ளது. பாதுகாப்பு கருதி முன் கூட்டிய கனரக வாகனங்கள் இந்த பாலத்தில் செல்லக் கூடாது என அதிகாரிகள் உத்தரவு பிறப்பித்து உள்ளார்கள்.

அதையும் மீறி குப்பை லாரி பாலத்தில் செல்ல முயன்றபோது இந்த விபத்து ஏற்பட்டு இருப்பது தெரிகிறது. ஏற்கனவே இந்த பாலத்தின் பராமரிப்பு போன்றவை சாலை மற்றும் கட்டிடத் துறைக்கு மாற்றப்பட்டுவிட்டது. புதிய பாலத்தை கட்டுவதற்கு தேவையான அனுமதியும் கிடைத்துவிட்டது." என்று அவர் கூறினார்.

குஜராத் மாநிலத்தில் கடந்த ஆண்டு மோர்பி என்ற தொங்கும் பாலத்தில் அனுமதிக்கப்பட்டதை விட அதிகமானவர்கள் சென்றதால் விபத்து ஏற்பட்டு பலர் உயிரிழந்தார்கள். இந்த நிலையில் இங்கும் பழமையான பாலத்தை இடித்துவிட்டு புதிய பாலத்தை கட்ட அனுமதி கிடைத்தும் கட்டாமல், கனரக வாகனம் தடையை மீறி சென்ற காரணத்தால் விபத்து நேர்ந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+