உத்தர பிரதேசத்தை உலுக்கிய புயல்.. ஒரே நாளில் 64 பேர் பலி.. 38 பேர் படுகாயம்!
உத்தர பிரதேசத்தில் நேற்று மாலையில் இருந்து இன்று காலை வரை வீசிய மோசமான புயல் காரணமாக மொத்தம் 64 பேர் மரணம் அடைந்து இருக்கிறார்கள்.
லக்னோ: உத்தர பிரதேசத்தில் நேற்று மாலையில் இருந்து இன்று காலை வரை வீசிய மோசமான புயல் காரணமாக மொத்தம் 64 பேர் மரணம் அடைந்து இருக்கிறார்கள்.
நேற்று மாலை லேசான மழையாக தொடங்கிய இந்த இயற்கை பேரழிவு நேற்று இரவு பெரிய புயலாக மாறியது. இதனால் 100க்கும் அதிகமான வீடுகள் இடிந்து விழுந்தது. தெருவில் உள்ள முக்கால்வாசி மரங்கள் இடிந்து விழுந்தது. இன்னும் இந்த புயலில் பாதிப்பு குறையவில்லை என்று கூறப்படுகிறது.

இதனால் மொத்தம் 64 பேர் மரணம் அடைந்துள்ளார்கள். 38 பேர் மோசமான படுகாயம் அடைந்து இருக்கிறார்கள். 17 பேர் பல்வேறு மருத்துவமனைகளில் மோசமான நிலையில் அவசர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டு இருக்கிறார்கள். இதனால் எவ்வளவு பொருட்கள் சேதம் அடைந்தது என்று கண்டுபிடிக்கப்படவில்லை.
கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் 156 மாடுகள் இறந்து போய் இருக்கிறது. நேற்று மாலையில் இருந்து காலை வரை புயல் 140 கிமீ வேகத்தில் வீசி இருக்கிறது. இந்த மோசமான காற்று வேகமே இவ்வளவு சேதங்களுக்கு காரணம் என்று கூறப்படுகிறது.
இந்த புயல் காரணமாக மரணம் அடைந்தவர்களின் குடும்பத்திற்கு ரூபாய் 4 லட்சம் இழப்பீடு அறிவிக்கப்பட்டுள்ளது. அதேபோல் காயம் அடைந்தவர்களுக்கு 50,000 இழப்பீடு அறிவிக்கப்பட்டு இருக்கிறது. தேசிய பேரிடர் மேலாண்மை அந்த பகுதியை ஆய்வு செய்து வருகிறது.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications